தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 தெசலோனிக்கேயர் 3:13  

இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையகிய நாம் எல்லாருக்கும் ஒரேவித பங்கை தான் கர்த்தர் நியமித்திருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும், எப்போதும் கர்த்தரை காண்கிறவர்களாவும் இருக்கவேண்டும் என்பதை நாம் திருஷ்டாந்ததோடு நாம் தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 17:1-13 

மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்றக் குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.

மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை; அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.

மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.

மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.

தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.

அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.

தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.

இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.

மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.

மேற்க்கூறிய வசனங்களில் மனாசே என்பவன் யோசேப்பின் முதற்பேறானவன்.  மனாசேயின் மூத்த குமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கிலெயாத்தும், பாசானும் அவனுக்கு கிடைத்தது.  அடுத்தது 2-ம் வசனத்தில் எழுதப்பட்டிருந்தவர்கள் மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்  மேலும் நாம் கழிந்த சில நாட்களுக்கு முன் தியானித்த கிலேயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு குமாரத்திகள் தவிர, குமாரர்கள் இல்லாதிருந்தார்கள்.  அவன் குமாரத்தியின் நாமங்கள்  மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.  அவர்கள் சேர்ந்து எலெயாசாருக்கும், யோசுவாவுக்கும், பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, எங்கள் சகோதரர்களுக்கு முன்பாக எங்களுக்கு சுதந்தரம் கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டார் என்றார்கள்.  ஆதலால் அவர்கள் தகப்பனின் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தான்.  

இதன் விளக்கங்கள் என்ன என்றால், கர்த்தர் திருஷ்டாந்தத்தின் படி சொல்கிறார், எப்படியென்றால் இஸ்ரவேல் சபைக்குள்ளே , எல்லாருக்கும் ஒரே பங்கும், சுதந்தரமும்  குமாரரை போல குமாரத்திகளுக்கும் உண்டு என்பதை விளக்கிக்காட்டுகிறார்.  ஆதலால் 

கலாத்தியர் 3:26-29 

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு அதனை தெளிவாக்குகிறது.  பிரியமானவர்களே, அநேகர், ஸ்திரீகள் என்றால் சபையில் கிறிஸ்துவுக்குரிய இடத்தில் வேலைக்கு பங்கில்லை என்று சொல்லி விடுவார்கள்.  இது தவறான கருத்து.  அவர் பட்சபாதம் உள்ளவரல்லவே.  அதனை கர்த்தர் பழைய ஏற்பாட்டின் பகுதியிலும் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

மேலும் யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.  மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள். மனாசேயின் மற்ற புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.  மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலது புறமாய் என் தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.  தப்புவாவின் நிலம் மனாசேக்கு கிடைக்கிறது.  மனாசேயின் எல்லை,  மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.  அந்த தப்புவாவின் எல்லையானது கானா என்னும் ஆற்றுக்கு போய், அதற்கு தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்து பட்டணங்கள் எப்பிராயீமுடைகள்; மனாசேயின் எல்லை ஆற்றிற்கு வடக்கே இருந்து சமுத்திற்கு போய் முடியும்.  

பிரியமானவர்களே இதன் திருஷ்டாந்த விளக்கம் இஸ்ரவேல் சபையரிடம் புற ஜாதிகளுடைய கிரியைகள் ஒட்டிக்கொண்டிருக்கும் என்றும், அவ்விதம் வாழ்வது கடைசியில் மக்களுடைய உள்ளத்தில் துர்க்கிரியைகள்  எழும்புவதால் அவர்கள் வாழ்வு துன்மார்க்கத்தில் போய் முடியும்.  மேலும் மனாசேயினுடைய எல்கை வடக்கே ஆசேரையும் , கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.  அல்லாமலும் இசக்காரிலும்,ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகள் மனாசேயினுடையவைகள்.  மனாசேயின் புத்திரருக்கு அந்த குடிகளை துரத்திவிட முடியவில்லை.  கானானியர் அந்த சீமையிலே தான் குடியிருக்கவேண்டுமென்றிருந்தார்கள்.  இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரைமுற்றிலும் துரத்திவிடாமல், அவைகளை பகுதி கட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள். 

இவ்விதமாக இஸ்ரவேலர் பகுதிகட்டுகிறவர்களாக இருந்ததால் , கர்த்தர் தம்முடைய குமாரனை அனுப்பி நமக்கு முழு இரட்சிப்பை அருளுகிறார். மேற்கூறப்பட்டவைகள் எல்லாமே கிறிஸ்து நம் ஆத்துமாவை இரட்சிக்கும் படியாக நமக்கு முன்கூட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

ஆதலால் நம்மிடத்தில் எந்த புறஜாதிகளின் கிரியைகளும் இல்லாதபடி நம்மை சுத்தம் செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.