தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 14: 21  

அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சர்வாயுத வர்க்கம் தரித்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு அனைவருக்கும் (ஆண், பெண்) ஒரே வித பங்கு தான் நியமிக்கிறார் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 17:13-18 

இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.

யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம்பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.

அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.

யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கையில் மனாசே புத்திரர் கானானியரை துரத்தி விடக்கூடாமல் இருந்தது.  அப்படியிருந்ததால்  அவர்களை பகுதிகட்டுகிறவர்களாயிருந்தார்கள்.   ஆதலால் யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் இதுவரைக்கும் எங்களை ஆசீர்வதித்து வந்ததினால் நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம்;  நீர் எங்களுக்கு சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் சபையில் ஜனங்கள் பெருகிக்கொண்டிருந்தார்கள். சபை வளர்ந்துக்கொண்டிருந்தது. 

ஆதலால் யோசுவா சொன்ன கர்த்தருடைய வார்த்தை, நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலை உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால் பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்கு போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக் கொள்ளுங்கள் என்றான். ஏனென்றால் அவர்கள் கானானியரை துரத்தி விடாதது அவர்கள் மேல் இருந்த குற்றமாமாயிருந்தது.  

அல்லாமலும் யோசேப்பின் புத்திரர் மலைகள் எங்களுக்கு போதாது ; பள்ளதாக்கு நாட்டிலிருக்கிற பெத்சயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல்  பள்ளதாக்கிலும் குடியிருக்கிற எல்லா கானானியரிடத்திலும் இருப்பு ரதங்கள் உண்டு என்றார்கள்.ஆதலால் யோசுவா சொன்னது நீங்கள் ஜனம் பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமம் உண்டு; ஒரு பங்கு மாத்திரமல்ல, மலைதேசமும் உங்களுடையதாகும்.  அது காடானபடியிடால் வெட்டி திருத்துங்கள், அப்பொழுது அதன் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும் நீங்கள் அவர்களை துரத்தி விடுவீர்கள். என்றான்.  

மேற்க்கூறப்பட்டவைகள் எதற்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் தேவ சபைக்கு கர்த்தர் கூறுகிறார், சத்துருவானவன் ஜனங்களை தந்திரமாக வஞ்சிக்கும்படியாக உள்ளங்களில் இடம் பெற்றுக்கொள்வான்.  அதனால் நாம் எச்சரிப்போடு இருந்து, முதலில் சாத்தானை கடிந்து கட்ட வேண்டும்.  முழுமையும் கர்த்தர் அவனை கடிந்து கட்டி நம் உள்ளத்திலிருந்து அகற்ற வேண்டும்.  அதற்காக தேசத்திலுள்ள புறஜாதிகளை துரத்தும்படியாக ஒவ்வொருவருக்கும் பங்கிட்டுக்கொடுக்கப்படுகிறது.  இவ்விதமாக கொடுத்ததில் யோசேப்பின் புத்திரர், அவர்களுக்கு பராக்கிரமம் இருந்தும் அவர்களை துரத்திவிடவில்லை. ஆதலால் காடான மலைபகுதியையும் கூடக்கொடுக்கிறதை பார்க்கிறோம்.  

ஆதலால் பிரியமானவர்களே, இவ்விதமாக நம்மில் அநேகரும், கர்த்தருடைய பராக்கிரமம் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல், தங்கள் விருப்பம் போல், வாழ்ந்து, தேவையற்றக்காரியங்களை செய்து சீர்கெட்டு போகிறார்கள்.  ஆதலால் கர்த்தராகிய இயேசுவின் பராக்கிரமம், நம்மில் பெலன் இருப்போமானால் கர்த்தர் யாவற்றையும் ஜெயிப்பார்.  சத்துரு தோற்கடிக்கப்பட்டு போவான், நாமோ கிறிஸ்துவோடு ஜக்கியப்படுவோம்.  ஆதலால் கர்த்தரின் வசனம் 

எபேசியர் 6:10-17  

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் நாம் சர்வாயுதவர்க்கம் தரித்துக்கொண்டால் சத்துருக்களை ஜெயிக்கமுடியும்.  இவ்விதமாக நாம் கிறிஸ்துவினால் சத்துருவை வென்று ஜெயம் பெற்றுக்கொள்வோம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.