தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 105:44,45     

தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற பலனை மற்ற சகோதரர்களுக்கும் பகிர்ந்துக் கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நாம் எப்படி முன்னேறி வர வேண்டும் என்றும், கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் நாம் எப்படி உறுதிப்படுத்த வேண்டும் என்றும், கிறிஸ்துவின் ராஜ்யம் நாம் எப்படி முழுமையாக சுதந்தரிக்க வேண்டும் என்றும், நமக்கு கர்த்தர் பல திருஷ்டாந்தங்களோடு விளக்கிக்காட்டுகிறதை குறித்து தியானித்துக்கொண்டிருக்கிறோம்.  மற்றும் நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் பரிசுத்தத்திற்க்கென்று சர்வாயுத வர்க்கம் தரித்துக்கொள்ள வேண்டும் என்றும், அதனால் மட்டுமே சாத்தானோடு எதிர்த்து போராடி வெற்றிப்பெற முடியும் என்றும் தியானிக்கிறோம்.  மேலும் இஸ்ரவேல் புத்திரரில் அநேகர் புறஜாதிகளின் கிரியைகளை அழிக்காததால் கர்த்தர் கோபமுடையவராகிறார் என்பதையும் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 18:1- 10   

இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.

ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.

கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.

அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.

நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.

லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.

அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.

அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.

அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில் இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் சீலோவிலே கூடி ஆசரிப்புக்கூடாரத்தை நிறுத்தினார்கள்.  தேசம் அவர்கள் வசமாயிற்று.  பிரியமானவர்களே நாம் ஒன்று சிந்திக்க வேண்டும், வெறும் விசுவாசிகளாக மட்டும் இருந்து, சுய நலத்திற்காகவோ, சுய சம்பாத்தியத்திற்காகவோ, கர்த்தரை தேடாமல், முதலில் நாம் கிறிஸ்துவின் முழு சுதந்தரராகி, அவரோடு இணைந்து, அவர் நம்மோடும் இணைந்தும் புறஜாதிகளின் தேசத்தை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்து நம்மில் உண்டாயிருந்தால் மட்டுமே, நாம் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராயிருப்போம்.  ஆனால் இதற்கு திருஷ்டாந்தாக இஸ்ரவேல் புத்திரர் சீலோவிலேக்கூடி, ஆசரிப்புக்கூடாரத்தை நிறுத்தி, தேசத்தை அவர்கள் வசமாக்கி கொண்டதை வாசிக்க முடிகிறது.  

அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை பங்கிட்டு கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.   ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தேசத்தை சுதந்தரித்து கொள்ள போகிறதற்கு எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்.  என்னவென்றால்  கர்த்தருடைய வேலையில் அசதியாயிருப்பவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

மேலும் யோசுவா சொல்வது  கோத்திரத்துக்கு மும்மூன்று மனுஷரை தெரிந்துக்கொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து தேசத்தை சுற்றி திரிந்து, அதை தங்கள் சுதந்தரத்திற்காக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும் படி அவர்களை அனுப்புவேன்.  அதை ஏழு பங்காக பங்கிட கடவர்கள், யூத வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.  மேலும் ஏழு பங்காக  ஒரு புஸ்தகத்தில் எழுதிக் கொண்டு, சீலோவில் இருக்கிற பாளையத்தினிடத்தில்  யோசுவாவினிடத்தில்  கொண்டு வந்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களுக்காக சீலோவிலே கர்த்தரின் சந்நிதியிலே சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான். 

இதற்கு திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் கிறிஸ்துவை முழுமையாக சுதந்தரித்துக்கொண்ட பிறகு நாம் அவரை மற்ற நம்முடைய சகோதரருக்கு நாம் பெற்ற பலனில் பங்குக் கொடுக்க வேண்டும்.  இவ்விதமாக நாம் தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் , நம்மையும் ஒப்புக்கொடுப்போம்,

ஜெபிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.