தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 139: 8 - 10     

நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,

அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மனப்பூர்வமாக கர்த்தரை உண்மையும், உத்தமமான இருதயத்தோடு ஏற்றுக்கொண்டால், அது தேவனுக்கு பிரியமாயிருக்கும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற பலனை, மற்ற சகோதரர்களுக்கும் கொடுக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 18:11-28 

பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்புப் புத்திரருக்கும் நடுவே இருந்தது.

அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.

அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.

அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.

தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,

அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,

வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,

அராபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப்போய், அராபாவுக்கு இறங்கும்.

அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப்போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோம்; இது தென் எல்லை.

கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.

பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,

பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,

ஆவீம், பாரா, ஓப்ரா,

கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

கிபியோன், ராமா, பேரோத்,

மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,

ரெக்கேம், இர்பெயேல், தாராலா,

சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானித்து வரும் போது ஏழு கோத்திரத்தார் தேசத்தை சுதந்தரிக்காமல் இருந்தார்கள்.  அப்போது யோசுவா அவர்களை தேசத்தை சுற்றி பார்க்க செய்து, அதனை புஸ்தகத்தில் எழு தி வைத்து, பின்பு அதனை சீட்டு போட்டு தேசத்தை பங்கிட்டான்.  அப்போது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின் படி,அவர்கள் கோத்திரத்துக்கு சீட்டு விழுந்தது.   அவர்களுக்கு கிடைத்த பங்கு வீதத்தின் எல்லை யூத புத்திரருக்கும், யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது.  

ஆனால் அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி பெத்தாவன் வனாந்திரத்தில் போய் முடியும். அந்த எல்லை அங்கேயிருந்து பெத்தேலாகிய  லூசுக்கு வந்து, லூசுக்கு தென் பக்கமாய், அதரோத்அதாருக்கு தாழ்வானபெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும். அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தெரோனுக்கு எதிரே தெற்கேயிருக்கிற மலைக்கு தென்புறமாய் போய், திரும்பி, கீரியாத் பாகால் என்னப்பட்ட யூதப்புத்திரரின் பட்டணமாகிய கீரியாம்யெயாரீம் அருகே போய் முடியும்.  இது மேற்கு எல்லை.  

ஆனால் தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது.  அங்கேயிருந்து மேற்கே போய் நெப்தோவாவின்  நீரூற்றிக்கு சென்றது. அங்கேயிருந்து அந்த எல்லை இராட்சதரின் பள்ளதாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமின் குமாரரின் பள்ளதாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியரின்  பக்கமான இன்னோமின் பள்ளதாக்குக்கும், அங்கேயிருந்து என்ரோலுக்கும்் இறங்கி வந்து, வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லினிடத்துக்கும் இறங்கி வந்து, அரபாவுக்கு எதிரான  வடபக்கமாய் போய், அரபாவுக்கு இறங்கும்.  

அப்புறம் அந்த எல்லை பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய், யோர்தானின் முகத்துவாரத்திற்கு தெற்கான உப்பு கடலின் முனையிலே முடிந்து போய்; இது தென் எல்லை.  கிழக்கு புறத்தின் எல்லை யோர்தானே.  இவ்விதமான எல்லைகளெல்லாம் பென்யமீன் புத்திரருக்கு கிடைத்த திருஷ்டாந்தம்.   

பிரியமானவர்களே கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்தியதின் விளக்கம் என்னவென்றால் கிறிஸ்து நம்முடைய சுதந்தரம்.  இந்த சுதந்தரம் நாம் பெற்றுக்கொள்ள தாமதமில்லாமல் மனபூர்வமாக அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அவ்விதம் சுதந்தரித்துக்கொள்ளாதவர்களிடம், தேவனுடைய நோக்கம் உண்டாயிருக்குமானால், கர்த்தர் எவ்விதத்திலாகிலும் அவரிடம் கொண்டு வந்து நிறுத்துவார் என்பது அவர் நமக்கு தந்திருக்கிற திருஷ்டாந்தத்திலிருந்து புரிகிறது. எப்படியென்றால் 

ஆமோஸ் 3:7-15 

கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.

அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,

நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களின் விளக்கம், கர்த்தருடைய நியாயதீர்ப்பும், அதிலிருந்து அவருக்கென்று நம்மை பிரித்தெடுத்து இரட்சிப்பதும் விளங்குகிறது.  இவ்விதம் நியாயதீர்ப்பில் தங்களை சீர்திருத்தாதவர்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்பது விளங்குகிறது.  அதற்கு தான் அவர்கள் பங்கை சீட்டுப்போட்டு பங்கிடுகிறார்.  அவ்விதம் இருப்பவர்கள், புறஜாதிகளுடைய எல்லையில்,அவர்கள் சுதந்தரம் இருக்கிறது. அதனால் புறஜாதிகளுடைய கிரியைகள் அவர்களிடம் உண்டாயிருக்கும்.  அப்போது, அவர்களில் சுத்தமான கிறிஸ்துவின் ஆவி உண்டாயிராது. அதனைக்குறித்து ஒவ்வொரு எல்லையும் எங்கெங்கு சென்று வருகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.    அதற்கு தான் யோர்தானிலிருந்து வந்து எரிகோவுக்கும், அவ்விதம் ஒவ்வொரு இடமாக வரும்போது இராட்சதரின் பள்ளதாக்கிலும், அவ்விதம் அரபாவுக்கு இறங்குகிறது.  கடைசியாக அது யோர்தானுக்கு முகத்துவாரத்திற்கு தெற்கான உப்பு கடலின் வடமுனையிலே முடிந்து போம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. 

ஆதலால் பிரியமானவர்களே கிறிஸ்துவின் கிருபை நம்மில் நிலைத்திருக்க நாம் எப்போதும் ஜாக்கிரதையாக   இருந்து உண்மையாக உத்தம இருதயத்தோடு அவரை சார்ந்து வாழும் படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.