தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 46:1  

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அடைக்கலபட்டணமாக விளங்குகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில் மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய வீடாக மாற்றப்படுகிறோம் என்பதனை, திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.   

அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 20:1-9 

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

அவைகள் உங்களுக்கு இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.

அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.

அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.

கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.

மேற்க்கூறப்பட்டவைகளில் தேசத்தை ஏற்ற நாளில் சுதந்தரித்து கொள்ளாத ஏழு கோத்திரத்தாரின் வம்சங்களின் படியே, கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவா, ஆசாரியனகிய எலெயெசார் என்பவர்களை வைத்து, சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் வைத்து சீட்டுப்போடப்பட்டு, அந்த சீட்டின் படியே பங்கிட்டுக் கொடுத்ததும், மற்றும் ஒவ்வொருவரின் பங்கை குறித்தும், அதனை கர்த்தர் எதற்காக அவ்விதம் நியமித்தார் என்றும்  பாரத்தோம்.  

அதற்கு பின்பு கர்த்தர் சொன்னபிரகாரம், அடைக்கலப்பட்டணங்களாக  சில இடங்களை ஏற்படுத்தி, பின்பு அதனை குறித்து வைத்தார்கள். அந்த இடங்கள் எங்கு என்றால்  

யோசுவா 20:7,8  

அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.

மேற்க்கூறிய வார்த்தைகள் கர்த்தர் எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், இஸ்ரவேல் புத்திரரில் கைபிசகாய் ஒருவனை கொன்றவன் எவனோ, அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள்.  

பிரியமானவர்களே, இந்த அடைக்கலப்பட்டணங்களின் விளக்கம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டின் பகுதியில் நாம் வாசிக்கும் போது, ஒருவன் இனி ஒருவனை அடித்தாலோ, அறைந்தாலோ, கல்லெறிந்து காயப்படுத்தினாலோ, கல்லெறிந்து கொன்றாலோ, மற்றும் எவ்விதத்தில் கொலை செய்தாலோ  பழிக்கு பழி வாங்கும்படியாக கர்த்தர் கட்டளயிட்டார்.  ஆனால் கைபிசகாய் ஏதாவது ஒரு காரியம் இஸ்ரவேல் புத்திரருடைய வாழ்வில் நடந்தால் அவர்கள் அடைக்கல பட்டணத்திற்குள் ஓடிபுகுந்து, தப்புவித்துக்கொளளும்படி கர்த்தருடைய கட்டளையாக இருந்தது.  காரணம் கைபிசகாய் ஏதாவது அசாவிதமான சம்பவங்கள் நடந்தால் அது சபைக்கு முன்பாக நின்று அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.  அதுவரையில் அவர்களை அடைக்கல பட்டணத்திற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் நியமித்திருக்கிறார்.  

இதன் காரணம் என்னவென்றால் அவன் கர்த்தரோடு உடன்படிக்கைப் பெற்றுக்கொள்ளும் படியான சமயம் வந்தது.  மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார், பழி வாங்குதல் எனக்குரியது, நானே பதிற் செய்வேன் என்கிறார்.   ஏனென்றால் கிறிஸ்து நம் உள்ளத்தில் உயிர்த்து, உயிர்தெழுந்த கிறிஸ்துவாக நம்மிடத்தில் இருந்து நமக்காக பழிவாங்குகிறார்.  அதனால் நியாயப்பிரமாணம் மாற்றப்படவில்லை என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  

இதனைக்குறித்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது எப்படியென்றால் கர்த்தர் யோசுவாவிடம், இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்ல சொல்வது என்னவென்றால் அறியாமல் ஒருவன் கைபிசகாய் ஒருவனைக்கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, மோசேயைக்கொண்டு கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  அவைகள் உங்களுக்கு இரத்தபழி வாங்குகிறவனுடைய கைக்கு தப்பிப்போயிருக்க அடைக்கலமாயிருக்கும்.  அந்த பட்டணத்திற்கு வருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுக்கொண்டு, அந்தபட்டணத்தின் மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தை சொல்வானாக.  அப்பொழுது அவர்கள் அவனை தங்களுடைய பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, அவனை தங்களோடே குடியிருக்கும்படி அவனுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிறார்.  இவை என்னவென்றால் ஒருவனுடைய வாழ்வில் அசாம்பிதங்கள் நடந்துவிட்டால் கர்த்தர் மன்னிக்கிறார் என்பதும், அவர்களை நாம் கிறிஸ்துவினிடத்தில் கொடுத்து காத்துக்கொண்டால், அது அவர்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் சுதந்தரத்தில் பங்கடைவதற்கு அது ஒரு காரணமாகிறது என்பதும்,கர்த்தரே அவர்களுக்கு அடைக்கல பட்டணமாக விளங்குகிறார்.  ஆனால் அவனை பழி வாங்குகிறவன் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்க வேண்டும் என்கிறார்.  

பிரியமானவர்களே, நம்முடைய தேவனாகிய கர்த்தர் எந்த ஒரு காரியத்தையும், நியாயமில்லாமல் தீர்க்கிறவரல்ல என்பது விளங்குகிறது.  நியாயம்விசாரிக்கும் சபைக்கு முன் நிற்கும் மட்டும் அவன் கர்த்தருடைய வசனமாகிய அடைக்கல பட்டணத்திற்குள் காக்கப்படுவான்.  மேலும் அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தோடு சேர்ந்து அவனுடைய எல்லா பாவமும்,அக்கிரமுமாகிய பொல்லாப்பையும், மரணத்துக்குள்ளாக்கி, அவரோடு அவருடைய உயிர்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டவனாய் மாறுவானானால், அவன் தன் பட்டணத்திற்கும், தன் வீட்டிற்கு், திரும்பி போகலாம் என்று கர்த்தர் சொல்கிறார். இவை ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.  அதன் பிறகு கர்த்தரே அவனுடைய அடைக்கலம்.  அவன் எல்லா தீமையினின்றும் நீங்கலாக்கி இரட்சிக்கபடுவான்

பிரியமானவர்களே நம்மையும் எல்லாவித தீமையினின்றும் நீங்கலாக்கிஇரட்சிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.