தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:27 

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நித்திய ஜீவனை சுதந்தரித்து கொள்வதும், அதனால் கர்த்தர் நம்முடைய சத்துருக்களை நம்முடைய  கையில் ஒப்புக்கொடுத்து, நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் தருகிறார் என்பதின் திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில் மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அடைக்கலபட்டணமாக விளங்குகிறார் என்பதும், அப்படி அடைக்கல பட்டணமாக நம்மை எவ்விதத்தில் காத்து, அவருடைய இரத்தத்தால் மீட்டு, நம்மை எல்லாவித தீமையினின்றும் விடுவித்து இரட்சிக்கிறார் என்பதனை நாம் திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். 

அல்லாமலும், அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 21:1-10 

அப்பொழுது லேவியரின் வம்சப்பிதாக்களின் தலைவர், கானான் தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவிடனித்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்து வந்து:

நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.

கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.

கெர்சோன் புத்திரருக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.

இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்.

லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,

யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன:

மேற்க்கூறப்பட்ட வசனங்களில்,  அடைக்கலபட்டணமாக சில பட்டணங்கள் குறிக்கப்பட்ட பின்பு லேவியரின் வம்ச பிதாக்களின் தலைவர்; கானான் தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவிடத்திலும், இஸ்ரவேல் புத்திரரின் கோத்திர பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்து வந்து, நாங்கள் குடியிருக்கும் படி பட்டணங்களையும், எங்கள் மிருக ஜீவன்களுக்காக  வெளிநிலங்களையும் எங்களுக்கு கொடுக்கும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே, கர்த்தருடைய வார்த்தையின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்கு பட்டணங்களையும், அவைகளின் வெளி நிலங்களையும் கொடுத்தார்கள். முதன்முதலாக கோகாத்தியரின் வம்சங்களுக்கு சீட்டு விழுந்து. இதில் லேவியருக்கு மொத்தமாக இருபத்து மூன்று பட்டணங்களும், இரண்டாம் சீட்டு கெர்சோன் புத்திரருக்கு, இதில் பதின்மூன்று பட்டணங்களும், மூன்றாவதாக மெராரி புத்திரருக்கு பன்னிரண்டு பட்டணங்களும் சீட்டினால் கிடைத்தது. ஆனால் முதலாம் சீட்டில் கிடைத்த பட்டணங்களின் நாமங்கள் 

யோசுவா 21:11-32

யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.

இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,

யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,

ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,

ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,

ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.

லேவியரான கோகாத்தின் புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:

கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,

ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.

கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பத்து.

லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பேயெஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.

இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும், கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,

எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.

இரண்டாவது கெர்சோனியருக்கு கிடைத்த  பட்டணங்களின் நாமங்கள் 

யோசுவா 21:33-39 

கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.

மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,

திம்னாவையும் அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும்,

கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,

எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

 மூன்றாவதாக மெராரி புத்திரருக்கு கிடைத்த பட்டணங்களின் நாமங்கள் 

யோசுவா 21:40 - 42  

இவைகளெல்லாம் லேவியரின் மற்ற வம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.

இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.

இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.

மேற்க்கூறப்பட்ட பட்டணங்கள் எல்லாம்,  முதலாம், இரண்டாம், மூன்றாம் சீட்டை பெற்றவர்களின் பட்டணங்களின நாமங்கள் ஆகும். இவ்விதமாக இ ஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவில் இருக்கிற லேவியரின் பட்டணங்கள் எல்லாம் அவைகளின் வெளிநிலங்கள் உள்பட நாற்பத்தெட்டு. இந்தப்பிரகாரமாக  கர்த்தர் இஸ்ரவேலுக்கு கொடுப்பேன் என்று பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தையெல்லாம் கொடுத்தார்.  அப்போது அவர்கள் அவைகளை சுதந்தரித்துக்கொண்டார்கள்.  அவர்கள் அவற்றை சுதந்தரித்து கொண்டதினால், அவர்களை சுற்றிலும் இளைப்பாறப்பண்ணினார்.  அவர்களுடைய சத்துருக்கள் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு கொடுத்த வார்த்தைகளில் ஒன்றும் தவறிப்போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று  

பிரியமானவர்களே மேற்க்கூறிய கருத்துக்கள் என்னவென்றால் நாம் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் தவறாமல் காத்துககொள்வோமானால், நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொண்டு,  நமக்கு விரோதமாக எழும்புகிற சகல சக்திகளையும் கர்த்தர் நிர்மூலம் பண்ணி, நம்மடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலை தந்து, நம்மை ஆசீர்வதிப்பார்.  கர்த்தர் இவ்விதமாக நம்மை ஆசீர்வதிக்கும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.