தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 12:28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் சமாதானத்தின் பலிபீடமாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் மீதியானியரிடத்தினின்று விடுதலையாக்கி இரட்சிக்கிற விதத்தை நாம் தியானித்தோம்.
அடுத்தப்படியாக நாம் தியானிப்பது
நியாயாதிபதிகள் 6:15-18
அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.
என்னவெனில் கர்த்தர் கிதியோனை எழுப்புகிறார். அவனிடம் சொல்கிறது நீ இஸ்ரவேலை மீதியானியரின் கையிலிருந்து நீங்கலாக்கி இரட்சிப்பாய் என்றார். அப்போது கிதியோன், நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன். மனாசேயின் என் குடும்பம் மிகவும் எளியது, நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அப்போது கர்த்தர் அவனிடம்; நான் உன்னோடே கூட இருப்பேன்; ஒரு மனுஷனை முறிய அடிப்பது போல, நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார். அப்போது அவன் ஆண்டவரிடம் உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் நீர் தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தை காட்ட வேண்டும். எப்போதென்றால் நான் உமக்கு முன்பாக என்னுடையதை கொண்டு வந்து வைக்குமட்டும் இவ்விடம் விட்டு போகாதிருப்பீராக என்று கேட்டபோது, நீ வருமட்டும் நான் இருப்பேன் என்றார்.
அப்போது நியாயாதிபதிகள் 6:19 -24
உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆணத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.
அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் கிதியோன் எடுத்துக் கொண்டு அவரிடத்தில் வைத்தான். அப்போது கர்த்தருடைய தூதன் கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும், புளிப்பில்லா அப்பங்களையும் தொட்டார்; அப்போது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லா அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவெனில், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.
அப்போது கிதியோன் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான். அதற்கு கர்த்தர்: உனக்கு சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான். அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
பிரியமானவர்களே, கர்த்தருடைய தூதன் கிதியோனிடத்தில் நீ மீதியானியரை முறியடிப்பாய் என்று சொன்னதினால், அவன் கர்த்தரிடத்தில் அவர் தேவன் தானா என்று அறியும்படி அடையாளம் கேட்கிறான். அதற்கு அவர் அடையாளம் காட்டுகிறதை பார்க்கிறோம். இதன் காரணம் அவனிடத்தில் நம்பிக்கை குறைவாக காணப்படுகிறது. இப்படிதான் நம்மில் அநேகர் கர்த்தர் நம்மிடத்தில் பேசுகிறதை உணராமலும், அவர்மேல் நம்பிக்கையில்லாமலும் இருக்கிறோம். மற்றும் நாமும் அநேக நேரங்களில் கர்த்தரிடத்தில் அடையாளம் கேட்கிறோம். ஆனால் அடையாளம் கர்த்தர் தந்தாலும் அதனை நிர்விசாரமாக விட்டு விட்டு, உணர்வடையாமல் இருக்கிறோம். இதற்கு காரணம் நம்முடைய இருதய கடினத்தினிமித்தமே என்பதனை உணர வேண்டும்.
ஆனால் கிதியோன் அடையாளத்தை கண்டு: ஐயோ கர்த்தரான ஆண்டவரே என்று கூப்பிடுகிறான். மேலும் கர்த்தருடைய தூதனை முகமுகமாய் கண்டேனே என்கிறான். அப்போது கர்த்தர் உனக்கு சமாதானம் ;நீ சாவதில்லை என்கிறார். காரணம் அவருடைய கோலின் நுனியினால், அவன் வைத்த காணிக்கையை அங்கீகரிக்கிறார். அதென்னவென்றால் புளிப்பில்லா அப்பமும், இறைச்சியும். இதனை கர்த்தராகிய இயேசுவின் சரீரத்திற்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். எப்படியெனில் அது கற்பாறையின் மேல் வைக்கப்படுகிறது. மேலும் கோலின் நுனியினால் அதனை தொடும் போது கற்பாறையிலிருந்து அக்கினி எழும்பி அதனை பட்சித்தது.
பிரியமானவர்களே கோலின் நுனி என்பது, தேவனுடைய வார்த்தையானது கருக்கானது. அது நம்முடைய உள்ளமானது கடினமான இருப்பதை, அவருடைய வாரத்தையை அனுப்பும் போது, இந்த உள்ளத்தை நொறுக்கும் போது அங்கிருந்து அக்கினி புறப்படுகிறது. அந்த அக்கினியானவர் நாம் கர்த்தரின் பாதத்தில் வைத்த காணிக்கையை (நம்முடை உள்ளம்) ஏற்றுக்கொள்கிறார். அவ்விதம் அவர் நம்மை ஏற்றுக்கொள்வாரானால் நமக்கு சமாதானம் நல்குகிறார்.
மேலும் நாம் மரிக்காமல் அவருடன் என்றென்றைக்கும் பிழைத்திருப்போம். அல்லாமலும் நம்முடைய உள்ளம் அவருடைய பலீபீடமாக்குகிறார். அந்த பலிபீடம் கர்த்தரை ஆராதிக்கிற பலிபீடம். அதனைதான் கர்த்தர் யெகோவா ஷாலோம் என்கிறார். அது இந்நாள்வரைக்கும் இருக்கிறது என்றால் நம்மில் அது காணப்படுகிறது. இவ்விதமாக சமாதானமாக நம் உள்ளம் காணப்பட்டு என்றென்றும் மரிக்காமல் இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.