தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 70:5

நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் கிறிஸ்துவின் பலிபீடமாக மாறவேண்டுமானால், நம்முடைய முந்தின வாழவிலிருந்த பாகாலின் பலிபீடம் தகர்க்கபடவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் சமாதானத்தின் பலிபீடமாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 6:25-40  

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டுவந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.

அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின்மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;

ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.

யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்.

தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.

அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,

மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,

இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.

அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.

அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, கிதியோன் பலிபீடம் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டபிறகு, அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன்தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக்கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.  இதிலிருந்து தெரிய வருவது கிதியோன் பலிபீடம் கட்டின இடம் தன் தகப்பனுடைய தோப்பு என்பது புரிய வருகிறது. 

பின்னும் கிதியோனை தன் வேலைகாரர்களில் பத்து பேரைச் சேர்த்து , கர்த்தர் தனக்கு சொன்னபடி செய்தான்.  அவன் தன் ஊர் மனுஷருக்கும், தன் தகப்பன் குடும்பத்துக்கும் பயப்பட்டபடியினால், அதை பகலிலே செய்யாமல் இரவிலே செய்தான்.  அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்த போது, பாகாலின் பலிபீடம் தகர்க்கபட்டிருந்ததும், அதன் அருகே தோப்புவெட்டி போடப்பட்டிருந்ததும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல், அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டிருந்ததுமாயிருக்க அவர்கள் கண்டு, ஒருவரையொருவர் நோக்கி; இந்த காரியத்தை செய்தவன் யார் என்று கேட்க, யோவாசின் மகன் கிதியோன் என்றார்கள்.  அப்போது அந்த ஊர் மக்கள் யோவாசிடம் உன் மகனை வெளியே கொண்டு வா என்று சொல்லி, அவன் பாகாலின் பலிபீடத்தை தகர்த்து அதன் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டதால் அவன் சாக வேண்டும் என்றார்கள்.  

அப்போது யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிறவர்களை பார்த்து நீங்களா அதற்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்?  அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையில் சாகக்கடவன் என்றான்.  மேலும் அவன் சொன்னது அவன் தேவனானால் பலிபீடத்தை தகர்த்ததினிமித்தம் அது தனக்கு தானே வழக்காடட்டும் என்றான்.  அவ்விதமாக சொன்னதால் யெருபாகால் என்ற பெயராயிற்று.  அப்போது மீதியானியரும், அமலேக்கியலும், கிழக்கத்தி புத்திரர் யாவரும் சேர்ந்து  ஆற்றை கடந்து வந்து யெஸ்ரயேல் பள்ளதாக்கிலே பாளயமிறங்கினார்கள்.அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்குகிறார்.  அப்போது அவன் எக்காளம் ஊதி அபியேஸ்யரினைக் கூப்பிட்டு, தனக்கு பின்செல்லும் படி செய்து, மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்கு பின் செல்லும்படி செய்து, ஆசேர் செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான். அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.  

அப்போது கிதியோன், கர்த்தரிடம், தேவரீர் சொன்னபடி என் கையினாலே இரட்சிக்க வேண்டுமானால்; இதோ, நான் மயிருள்ள ஒரு தோலை களத்திலே போடுகிறேன்; பனி தோலின் மேல் மாத்திரம் பெய்து, பூமி காய்ந்திருந்தால், தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினாலே இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.  ஆனால் அது அப்படியே ஆயிற்று.  மறு நாள் காலமே அவன் எழுந்து தோலில் இருந்த பனிநீரை பிழிந்து ஒரு கிண்ணத்தில் நிறைத்தான்.  பின்னும் கிதியோன் தேவனிடம், இன்னும் ஒரு விசை மாத்திரம் பேசுகிறேன், தேவனுக்கு கோபம் மூளாதிருப்பதாக.  தோலினாலே இன்னும் ஒரு விசை சோதனை பண்ணட்டும், அதெப்படியெனில் தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும், பனி பூமியெங்கும் பெய்யவும் கட்டளையிடும் என்றான்.  அப்படியே அன்று ராத்திரி செய்தார்.  தோல் மாத்திரம் காய்ந்திருந்தது, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.  

பிரியமானவர்களே, இதன் கருத்துக்களை நாம் தியானிப்போமாகில்  நம்முடைய உள்ளத்தில் பலிபீடம் அமைப்பதன் திருஷ்டாந்தம்  என்னவெனில், முதலில் இருந்த பாரம்பரிய பாகாலுடைய கிரியைகள் தகர்க்கப்பட்டு, அதனை சுற்றியுள்ள சகல செயல்களையும் நிர்மூலம்பண்ணி, நாம் வசனத்திலும்,  ஜெபத்திலும் வளர்ந்து, உள்ளமானது எப்போதும் தேவனுக்கு பலிசெலுத்துகிற ஆராதனை ஸ்தலமாக இருக்க வேண்டும்.  இப்படி நாம் நடக்க முன் வரும் போது அநேகர், குறிப்பாக பாகாலை சேவித்த நம் முள்னோர்கள், உறவினர்கள், சுற்றத்தார், நமக்கு விரோதமாக எழும்புவார்கள்.  ஆனால் நாம் சோர்ந்து பின் தங்கி போகாதபடி, அவ்விதம் அவர்கள் எழும்பினால் முதலில் நாம் ரகசியமாக கர்த்தரின் பாதம் அமர வேண்டும்.  ஆனாலும் மீண்டும் அவர்கள் நம்மை பின் தொடர்ந்தால், கர்த்தர் நம்மை கைவிடுவதில்லை என்பதற்கு ஆதாரமாக கிதியோனுடைய தகப்பனண்டையில் ஊராரும், குடும்பத்தாரும் வந்து உன் மகனை வெளியே கொண்டுவா என்ற போது யோவாஸ் தைரியத்தோடே சொன்ன வார்த்தையை நாம் வாசிக்கிறோம்.  

பிரியமானவர்களே இதற்கு காரணம், கர்த்தர் அந்நேரத்தில் யோவாசை சந்தித்தார்.  பிரியமானவர்களே, நாம் ஒன்று புரிந்துக்கொள்ள வேண்டும், என்னவென்றால் நம்முடைய கர்த்தர் ஏற்ற வேளையில் ஆபத்தில் வந்து நம்மை தப்புவிக்கிறவர்.  அதி வேகத்தில் வந்து நம்மை காப்பாற்றுகிறவர் என்பதனை மறந்து போகக்கூடாது.  

மேலும் மூன்று வித ஜாதிகள் அங்கு யெஸ்ரயேல் பள்ளதாக்கிலே பாளயமிறங்குகிறார்கள்.  இதனை நாம் நோக்கும் போது அநேகர் பாரம்பரிய சேவையிலிலுந்து வெளிய வருவதற்கு பயப்படுவார்கள்.  காரணம் அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வார்கள், எங்கள் தெய்வங்கள் எங்களை உபத்திரவபடுத்தும் என்று சொல்லி, தங்களை கெடுத்து அவர்கள் தங்கள் வழியே போய் விடுவார்கள்.  அதுமட்டுமல்ல, விக்கிரகத்தை தகர்க்க தடை பண்ணுவார்கள்.  ஏனென்றால் அதுவும் அவர்களுக்கு அவர்கள் முன் தெய்வங்கள் ஏதோ செய்து விடும் என்று நினைத்து தயங்குவார்கள். ஆனால் கர்த்தர் சொல்கிறார் 

ஏசாயா 41:10-16 

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் நாம் எதற்கும் பயப்படாமல் கர்த்தருக்காக முழு மனதோடு சத்துருக்களிடத்தில் போராடுகிறவர்களாக இருப்போமாகில் கர்த்தர் நமக்காக துணைநிற்பார் என்பதில் சந்தேகமில்லை. அவ்விதமாக கிதியோன் காணப்பட்டதால் , ஜாதிகள் பாளயமிறங்கியபோது, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்குகிறார்.  அப்போது அவன் எக்காளம் ஊதுகிறான், ஜனங்களை அழைக்கிறான்,  அழைத்தவர்கள் எல்லாரும் அவனுக்கு பின் செல்கிறார்கள்.  இவை என்னவெனில் நாம் பாரம்பரிய தேவர்களை விட்டு விட்டு, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்பை பெற்று கிறிஸ்துவோடு சேரும் போது, நம்முடைய ஆத்துமாவை பின்னிட்டு இழுக்கும்படியாக, நமக்கு விரோதமாக சத்துருக்கள் பலமாக உள்ளத்தில் பாளயமிறங்குவார்கள்.  ஆனால் நாம் அதற்கு பயப்படாமல், கர்த்தர் நமக்கு தந்திருக்கிற பலத்தோடே விசுவாசத்தோடு தைரியத்தோடே கிருபாசனத்தண்டை சேர வேண்டும்.  

அப்போது கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து நம்மை இரட்சிப்பார். ஆனால் கிதியோன் தேவனிடத்தில் அடையாளம் கேட்கிறான்.  கர்த்தர் அந்த அடையாளத்தைக் காட்டுகிறார்.  ஆனால் இரண்டாம் விசை அடையாளம் கேட்கும் போது, தேவனுக்கு கோபம் மூளாதிருப்பதாக என்று சொன்னதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஆனால் நம்முடைய அடையாளம் எப்போதும் நம் உள்ளத்தில்  கிறிஸ்து உண்டு.  ஆதலால் அதனை குறித்நு தான், அவருடைய உபதேசம் பனி போல் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவில் எப்போதும் பெய்யப்பண்ணுகிறவராயிருக்கிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே, நம்முடைய பாரம்பரிய நடத்தைகளாகிய பாகாலின் கிரியைகளை நம்மை விட்டு அகற்றும் போது, அவைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது.  அப்படியானால் நம் ஆத்துமாவில் எல்லா தருணத்திலும் கர்த்தரின்உபதேசம் பனிப்போல் இறங்கிக் கொண்டிருக்கும்.  அவ்விதம் நாமும்  கர்த்தரின் சத்திய உபதேசத்தால் நிரப்பப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.