தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 8:6
மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் கிறிஸ்துவின் பலிபீடமாக மாறவேண்டுமானால், நம்முடைய முந்தின வாழவிலிருந்த பாகாலின் பலிபீடம் தகர்க்கபடவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் கிறிஸ்துவின் பலிபீடமாக மாறுவதற்கு, நம்முடைய பழைய பாரம்பரிய பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட வேண்டும்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது
நியாயாதிபதிகள் 7:1-4
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.
ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.
கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரீட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்து என்னவென்றால், கிதியோனுக்கு யெருபாகால் பெயரிடபட்டது என்னவென்றால் பாகாலுடைய பலிபீடத்தை தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி அந்த பெயர் இடப்பட்டது. அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்களும் காலமே எழுந்திருந்து ஆரோத் என்னும் நீரூற்றின் அருகே பாளமிறங்கினார்கள்.ஆனால் மீதியானியரின் பாளயம் மோரே மேட்டிற்கு பின்னாக பாளயமிறங்கினார்கள். ஆனால் இஸ்ரவேலர் கிதியோனோடேக்கூட அதிகபேர் உண்டாயிருந்தார்கள். அதனால் கர்த்தர் கிதியோனிடம் நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனங்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாக இருக்கிறதால் இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு ஏதுவாகும். ஆகையால் பயமும் ,திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி கிலேயாத் மலைகளிலிருந்து ஓடிபோக கடவன் என்று நீ உன் ஜனங்கள் கேட்க பிரசித்தப்படுத்து என்றார். அப்போது ஜனங்களில் இருபத்தீராயிரம் பேர் போய் விட்டார்கள், பதினாயிரம் பேர் மீதியாயிருந்தார்கள்.
பின்னும் கர்த்தர் கிதியோனிடம் சொல்வது என்னவென்றால்; இன்னும் ஜனங்கள் அதிகம், ஆதலால் அவர்களை தண்ணீரண்டைக்கு இறங்கி போக பண்ணு; நான் அவர்களை பரீட்சித்து காட்டுவேன் என்றார்; உன்னோடே கூட வரலாம் என்று யாரை குறிக்கிறேனோ, அவன் உன்னோடக்கூ வரகடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று யாரைக் குறிக்கிறேனோ அவன் உன்னோடே கூட வரலாகாது என்றார். மேலும் கர்த்தர்சொன்னது போல் கிதியோன் செய்தான். எப்படியெனில்
நியாயாதிபதிகள் 7:5,6
அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணினான்; அப்போழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.
தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில், தண்ணீரை தங்கள் கைகளில் அள்ளி ஒரு நாய் குடிக்கும் வண்ணமாக நக்கி குடித்த முந்நூறு பேரை கர்த்தர் தெரிந்தெடுத்தார். பின்பு கிதியோனிடம் சொல்கிறது என்னவென்றால்; நக்கி குடித்த முந்நூறு பேராலே, நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்கள் எல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்கு போகக்கடவர்கள் என்றார். அவ்வண்ணமாகவே
நியாயாதிபதிகள் 7: 7,8
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரைமாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.
மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட முந்நூறுப்பேரை மட்டும் தெரிந்துக் கொண்டான். மீதியானியரின் சேனை அவனுக்கு தாழ்விடமான பள்ளதாக்கில் இருந்தது. அன்று ராத்திரி கர்த்தர் கிதியோனை நோக்கி: நீ எழுந்து அந்த சேனையினிடத்திற்கு போ, அதனை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
பிரியமானவர்களே இந்த காரியங்களையெல்லாம் நாம் தியானிக்கும் போது, நாம் கர்த்தருக்காக நம்முடைய இருதயத்தில் பலிபீடம் அமைத்து, பாகாலின் பீடம் தகர்த்து கர்த்தருக்கு மட்டும் நம்மை ஒப்புக்கொடுப்போமானால் நம் உள்ளத்தில் எந்த மீதியானிய எண்ணங்களோ வரவிடாமல் கர்த்தர் நம்மை ஆட்க்கொள்ளுவார் என்பதில் எந்த மாறறமில்லை. இதற்காக தான் கர்த்தர் கிதியோனை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் மீதியானியர் என்றால் இஸ்மவேலர்கள். இஸ்மவேலர்கள் என்றால் மாம்சத்தின் கிரியைகளை அழிக்காமல் இருக்கிறவர்கள். அவர்கள் எப்போதும் மாம்ச சிந்தையோடே நடப்பார்கள். ஆனால் நம்முடைய ஆத்துமா ஆவியின் சிந்தையோடு நடந்தால் தான் அவர்களை கர்த்தர் இஸ்ரவேலர் என்று சொல்கிறார்.
ஆனால் அநேக இஸ்ரவேலருக்குள்ளும் மாம்ச சிந்தை முக்கியமான இடம் பெறும். இப்படிப்பட்டவர்களிடத்தில் தேவன் பிரியமாயிரார். அதனால் தான் கர்த்தர் சொல்வது இஸ்ரவேலரெல்லாரும் இஸ்ரவேலரல்லவே. ஆதலால் இஸ்ரவேலரில் அநேகர் யுத்தத்திற்கு பயமும், திகிலும் உள்ளவர்கள் எல்லாரும் ஓடிபெபோகக்கடவர்கள் என்று சொன்னவுடனே அநேகர் போய் விட்டார்கள். ஆனால் அதிலும் பதினாயிரம் பேர் இருந்ததில் கர்த்தரால் யுத்தத்திற்கு பிரித்தெடுத்தவர்கள் முந்நூறு பேர். அவர்கள் தண்ணீரை கைகளில் அள்ளி, நக்கி குடித்தவர்கள். இவர்கள் தான் கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்றும் அசட்டைபண்ணாமல் முழுமையும் ஏற்றுக்கொண்டு நடக்கிறவர்கள். இவ்விதம் நடக்கிறவர்கள் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலன். இவர்கள் தான் சத்துருக்களோடு யுத்தம் செய்து வெற்றிப்பெறக் காரணமாயிருப்பவர்கள்.
இப்படிப்பட்டவர்களை கர்த்தர் அவரோடு யுத்தத்தில் பழக்குவித்து எல்லா மாம்சீக சிந்தைகளயும் அவர்களை விட்டு மாற்றி இரட்சிக்கிறார். இவ்விதம் ஆகும்படியாக நம்மையும் ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.