தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 கொரிந்தியர் 4:16

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடம் கர்த்தர் எவ்விதம் மீதியானியரை நம்முடைய கையில் ஒப்புக்கொடுக்கிறார்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை மாம்ச சிந்தையாகிய இஸ்மவேலராகிய மீதியானியரிடத்தினின்று விடுதலையாக்கி இரட்சத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தப்படியாக தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 7: 8-12 

அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரைமாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.

அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

போகப் பயப்பட்டாயானால், முதல் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய்,

அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.

மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.

மேற்க்கூறபட்ட வசனங்களை தியானிக்கையில் கர்த்தர் கிதியோனிடம் மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்கிறார்.  ஆனால் கர்த்தர் கிதியோனிடம் சொல்வது என்னவென்றால்அங்கே போக பயப்பட்டாயானால், முதலில் நீயும், உன் வேலைக்காரன் பூராவும்  சேனையினிடத்திற்கு போய் அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்.  பின்பு சேனையினிடத்திற்கு போக உன் கைகள் திடப்படும் என்றார்.  அப்படியே அவர்கள் ஜாமங்காக்கிறவர்களின் இடம் மட்டும் போனார்கள். அங்கே போகும் போது மீதியானியரும் கிழக்கத்தி புத்திரரும்  அமலேக்கியரும் வெட்டுகிளிகளைப்போல் பள்ளதாக்கிலே படுத்துக்கிடந்தார்கள். அவர்களுடைய ஒட்டக்களுக்கு கணக்கில்லை, கடற்கரை மணலை போல திரளாயிருந்தது.  

அப்போது கிதியோன் அங்கு வந்த போது  

நியாயாதிபதிகள் 7:13-14  

கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது; அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.

அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும், அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.

மேற்க்கூறியவற்றின் கருத்து என்னவென்றால் அந்த சொப்பனத்தையும் அதன் வியர்த்தியையும்  கேட்டபோது  தேவனை பணிந்துக்கொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்கு திரும்பி வந்து, எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி  

நியாயாதிபதிகள் 7:15-22

கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,

அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.

நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.

நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.

மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.

முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் கர்த்தர் மீதியானியர் கையினின்று நம்மை இரட்சிக்கிறார். எப்படியெனில் முதலாவது கர்த்தர் இஸ்ரவேலுடைய கைகளை திடப்படுத்தி, பின்பு யுத்தத்திற்காக ஆயத்தம் பண்ணுகிறார்.  ஆயத்தம் பண்ணின பின்பு இஸ்ரவேலருக்கு அடையாளத்தை சொப்பனம் மூலம் தைரியப்படுத்துகிறார்.  ஒரு வாற்கோதுமை அப்பம்  மீதியானியரின் கூடாரத்தில் உருண்டு விழுவதாக காண்கிறார்கள்.  அந்த வாற்கோதுமை அப்பம் என்பது கிறிஸ்துவை காட்டுகிறது.  என்னவென்றால் நமக்காக யுத்தம் செய்வது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவர் தான் தேவனுடைய மகிமை என்பதும், விளங்குகிறது.  எப்போதும் தேவ வசனமாகிய மகிமையால் நம் உள்ளம் நிரப்பப்பட்டு, பரிசுத்த ஆவிக்குள் நிறைந்து கர்த்தரை நாம் ஆராதிக்கும் போது, நம் உள்ளத்தில் இருக்கிற மாம்ச சிந்தனைகள் எல்லாம் நம்மை விட்டு கர்த்தர் துரத்துகிறார், நிர்மூலம் பண்ணுகிறார்.  இதனை குறித்து எக்காளம் என்னும் தேவனுடைய வசனமும் பானை என்பது நம்முடைய உள்ளான மனுஷனும், அதற்குள் தீவெட்டி என்பது கர்த்தரின் ஆவியையும் காட்டுகிறது.  இந்த மூன்று காரியங்களும் நம்மிடம் காணப்படுமெங்கில் நாம் கர்த்தர் சொல்வது போல் செய்தால் எளிதில் மீதியானியரை நம்முடைய கையில் ஒப்புக்கொடுப்பார்.  

அதென்னவெனில் நம்முடைய உள்ளான மனுஷன் ஆவியினால் அபிஷேகித்து புதுப்பிக்கப்பட்டு, புறம்பான மனுஷன் அழிக்கப்படும் போது, உலகம், மாமிசம்  இவற்றை நாம் ஜெயிக்க முடியும்.  இவ்விதமாக இஸ்ரவேலரை வைத்து கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதனைக்குறித்து 

நியாயாதிபதிகள் 7:23-25  

அப்பொழுது நப்தலி மனுஷரும், ஆசேர் மனுஷரும், மனாசேயின் சகல மனுஷருமாகிய இஸ்ரவேலர் கூடிவந்து, மீதியானியரைப் பின் தொடர்ந்துபோனார்கள்.

கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு விரோதமாயிறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் மட்டும் வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு,

மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனபிரகாரம்  இஸ்ரவேலர்கள் மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும், சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுப்போட்டு, மீதியானியரை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்திற்கு கொண்டு வந்தார்கள்.  

பிரியமானவர்களே ஓரேப், சேப் என்பது உலகம், மாமிசம் இவைகளுக்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இவைகள் இரண்டும் மீதியானியருடைய கிரியைகளாக நாம் அவற்றை அழித்து கிறிஸ்துவினால் ஜெயம் பற்று எழும்பும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.