தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 16:4  

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அந்நிய சேவைகள் எழும்பாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை மீதியானியரிடத்திலிருந்து எவ்விதம் நாம் காத்து இரட்சிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 8:1-10  

அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம்பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்கள்.

அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?

தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.

கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள்.

அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.

அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.

அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.

சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள் மாத்திரம் மீந்திருந்தார்கள்.

மேற்க்கூறிப்பட்ட வசனங்களின் கருத்து என்னவென்றால் கர்த்தர் கிதியோனிடத்தில் மீதியானியரை ஒப்புக்கொடுத்தபிறகு, எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி,: நீ மீதியானியர் மேல் யுத்தம் பண்ண போகிற போது எங்களை அழைக்கவில்லையே, நீ இப்படி எங்களுக்கு செய்தது என்ன என்று மிகுந்த பலவந்தம் பண்ணினார்கள்.  அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்?  அபியேஸ்யரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பை பார்க்கிலும், எப்பிராயீமின் அறுப்பு அதிகமல்லவா? தேவன் மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும், சேபையும் ஒப்புக்கொடுத்தாரே, நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்.  

இந்த வார்த்தையை அவன் சொன்ன போது, அவன் மேலிருந்த அவனுடைய கோபம் ஆறிற்று.  கிதியோன் யோர்தானுக்கு வந்த போது, அவனும்,அவனோடிருந்த முந்நூறு பேரும் அதனை கடந்து போய் விடாய்த்திருந்தும் (சத்துருவை)  பின் தொடர்ந்தார்கள். அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி, என்னோடே வந்த ஜனங்களுக்கு அப்பங்களைக் கொடுங்கள், அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் சேபாவையும், சல்முனாவையும் பின் தொடருகிறேன் என்றான்.  அதற்கு சுக்கோத்தின் பிரபுக்கள் உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்கு சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்ற போது கிதியோன் அவர்களை நோக்கி சொன்னது என்னவென்றால் கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது முள்ளுகளாலும்,நெரிஞ்சில்களாலும் உங்கள் மாம்சத்தை கிழித்தி விடுவேன் என்று சொல்லி, அவ்விடத்தை விட்டு பெனுவேலுடைய மனுஷரிடத்தில் அந்த படியே கேட்டான்.  

அப்போது சுக்கோத்தின் மனுஷர்கள் சொன்னது போல் பெனுவேலின் மனுஷர்களும் அப்படியே சொன்னார்கள்.  அப்போது அவன் பெனுவேலின் மனுஷரை பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பி வரும் போது, இந்த கோபுரத்தை இடித்துப் போடுவேன் என்றான்.  சேபாவும், சல்முனாவும் அவர்களோடேக் கூட அவர்களுடைய  சேனைகளும் பதினாயிரம் பேர் கர்கோரில் இருந்தார்கள்.  பட்டயம் உருவ தக்க இலட்சத்து இருபதினாயிரம் பேர் விழுந்தபடியால் கிழக்கத்தியாவின் சகல சேனைகளிலும் இவர்கள் மாத்திரம் மீந்திருந்தார்கள்.  

இதனையெல்லாம் கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் மீதியானிய கிரியைகளாகிய மாம்சீக சிந்தைகளில் சிலதை மாற்றிவிட்டு, சிலதை மற்றாமல் இருக்கிறதால் மீண்டும் கர்த்தர் அதனை முழுமையும் அகற்றும் வரையிலும் கர்த்தர் யுத்தத்தை செய்கிறவராயிருக்கிறார்.  ஆனால் கர்த்தர் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு கிதியோன் மூலம் தெரிந்தெடுக்கும் போது எப்பிராயீமை அழைக்காததால் அவர்கள் கிதியோன் மேல் கோபம் கொள்கிறார்கள்.  பின்பு கிதியோன் எப்பிராயீமை மறைவாக இகழ்வை மாற்றி புகழ்கிறான்.  அவ்விதம் புகழ்ந்ததால் அவர்களுக்கு கிதியோன் மேல் இருந்த கோபம் மாறியது.  மேலும் கர்ததர் எப்பிராயீமரை தெரிந்தெடுக்காத காரணம் என்னவெனில் அவர்கள் திருப்பிப்போடாத அப்பம்.    அவர்கள் முழு உள்ளத்தோடு கர்த்தரில் அன்புக்கூராதவர்கள்.  என்னவெனில் முழுமையான சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சத்துருக்களிடம் எதிர்க்க முடியாது என்று எழுதப்பட்டிருக்கிறது.  

மேலும் கிதியோன் சுக்கோத்தின் மனுஷரிடத்தில் விடாய்த்திருக்கிற ஜனத்திற்கு அப்பங்களை கொடுங்கள் என்று சொன்னதிற்கு அவர்கள், நாங்கள் உன் ஜனத்திற்கு அப்பம் கொடுக்கிறதற்கு சேபா, சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.  அதற்கு கிதியோன் கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் மாம்சத்தை வனாந்திரத்தின் முள்ளுகளாலும், நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்வது, இஸ்ரவேலருக்கு உதவி செய்யாததால் கர்த்தர் அதிகமாக அவர்களை பிசாசின் கிரியைகளுக்கு ஒப்புக்கொடுத்துவிடுகிறார் என்பதன் திருஷ்டாந்தம் விளக்குகிறார். அல்லாமலும் அவன் பெனுவேலுக்கு போய் கேட்டதற்கும், அவர்கள் அவ்விதமான மறுபடி சொன்னதால், கிதியோன் சொல்வது நான் வெற்றியோடே திரும்பி வரும்போது, இந்த கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்கிறான்.  

இவையெல்லாம் நம் உள்ளத்தின் கிரியைகளை நமக்கு விளக்கிக்காட்டுகிறார்.  பெனுவேலின் கோபுரம் நம்முடைய உள்ளத்தில் எழும்புகிற அந்நிய சேவை.  ஆதலால் இவையெல்லாவற்றையும் நம்மில் இருந்து உடைக்கும் படியாக வாற்கோதுமை மணியாகிய கிறிஸ்து வெளிப்படுகிறார்.  

பிரியமானவர்களே எவ்விதத்திலும் நம் உள்ளத்தில் அந்நிய சேவை எழும்பாதபடி ஜாக்கிரதையாக இருந்து ஆத்துமாவை காத்துக்கொள்ளும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.