தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆளுகை செய்ய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்குதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில், அந்நிய சேவை ஆவிகள் கிரியைச்செய்யாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 8:11-14
கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.
சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.
யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில் கிதியோன் சேபா, சல்முனா அவர்களுடைய சேனையை பின் தொடர்ந்தது, கூடாரங்களிலே குடியிருக்கிறவர்களின் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்த சேனை பயமில்லை என்றிருந்த போது, அதை முறிய அடித்தான். சேபாவும், சல்முனாவும் ஓடிப்போனார்கள். ஆனால் கிதியோன் அவர்களை பின் தொடர்ந்து சேபா, சல்முனா என்னும் இரண்டு மீதியானிய ராஜாக்களையும் பிடித்து சேனை முழுவதையும் கலங்கடித்தான். ஆனால் யோவாசின் மகன் கிதியோன் யுத்தம் பண்ணி சூரியன் உதிக்கும் முன்னே திரும்பி வந்தார்கள். அப்போது சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனை பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான். ஆனால் அவன் சுக்கோத்தின் பிரபுக்களும், அவன் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை எழுதிக்கொடுத்தான்.
பின்பு நியாயதிபதிகள் 8:15-21
அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,
பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்றுபோட்டான்.
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.
அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால், உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.
அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான்.
மேற்கூறப்படுகிற வார்த்தைகள், கிதியோன்,சேபா சல்முனாவை எப்படி பட்டயத்தினால் கொன்றான் என்று எழுதப்ட்டிருக்கிறது. அந்த இரண்டு பேரை கொன்று , அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துக்களிலிருந்த சாந்து காறைகளை எடுத்துக்கொண்டான். இவ்விதமாக கிதியோன் செய்ததால் இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால், நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளகடவீர்கள் என்றார்கள். அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
பிரியமானவர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிலிருந்து ஆளுகை செய்ய வேண்டும். அதற்காக மீதியானிய ராஜாக்களாகிய சேபாவையும், சல்முனாவையும் கிதியோன் கொன்று போடுகிறான் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். இதன் காரணம் தாபோரில் சேபா சல்முனா என்பவர்கள் கிதியோனின் சகோதரர்களை கொன்றப்போட்டதினால் கிதியோன் கர்த்தருக்காக வைராக்கியம் கொண்டு இதனை செய்கிறான். என்னவென்றால் இஸரவேலர்கள் மாம்சத்தின் இச்சைகளினால் தங்கள் ஆத்துமா கொல்லப்படுகிறதிற்கு இது திருஷ்டாந்தம். ஆதலால் மாம்சம், உலகம் உள்ளத்திலிருக்கும் வரையிலும், பிசாசு உள்ளத்தை ஆளுகை செய்யும்.
ஆதலால் பிசாசின் கிரியைகளை அழிக்கும்படியாகவே மனுஷ குமாரன் வெளிப்பட்டு, அவர் ஆவியினால் மாம்ச சிந்தையை அழித்து, அந்த இடத்தை கிறிஸ்து ஆளுகைச்செய்கிறார். இவ்விதம் கிறிஸ்துவினால் கர்த்தர் நம்மை ஆளுகைக்கு ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.