தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கலாத்தியர் 5:16
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமா,ஒருமுறை விடுதலையானபிறகு மீண்டும் மாம்சத்திற்கு அடிமையாகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆளுகை செய்ய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 8:23-25
அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில், கிதியோனிடம், இஸ்ரவேல் ஜனங்கள், நீர் எங்களை மீதியானியரின் கைகளினின்று நீங்கலாக்கிவிட்டபடியினால், நீரும், உம்முடைய குமாரனும் எங்களை ஆளக்கடவீர்கள் என்று சொன்ன போது, கிதியோன், நான் உங்களை ஆளமாட்டேன்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான். அன்றுமுதல் கர்த்தர் நம்மை ஆளுகை செய்கிறார். எப்படியென்றால் மாம்சத்திற்கு அடிமையாகாமல், நாம் தேவனுக்கு அடிமையாயிருக்கிறோம். மேலும் அதனை விளக்குவது என்னவென்றால் கிதியோன், இஸ்ரவேலரை நோக்கி, நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுகன்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றபோது, மீதியானியர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன் கடுக்கன்கள் இருந்தது. அதனை இஸ்ரவேலர்கள் கொள்ளையிட்டார்கள். அவன் அதனை கேட்டபோது சந்தோஷத்தோடு கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
அல்லாமலும் நியாயாதிபதிகள் 8:26-28
பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.
அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.
இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.
இந்த வசனங்களில் நாம் வாசிக்கும் போது மீதியானிய ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும். அது தவிர அவன் கேட்டு வாங்கின பொன் கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு சேக்கலின் நிறையாயிருந்தது. அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதை தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேரல்லாரும் அதை பின் பற்றிப் சோரம்போனார்கள். அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று. இந்த பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக தாழ்த்தப்பட்டார்கள். தேசமானது நாற்பது வருஷம் அமைதியாயிருந்தது.
பிரியமானவர்களே இதன் கருத்துக்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேலர்கள் மீதியானியராகிய இஸ்மவேலரிடத்திலிருந்து விடுதலையாகிறார்கள் என்றால் நம்முடைய ஆத்துமாவில் இருந்த மாம்ச சிந்தைகள் அகற்றப்படுகிறது. மேலும் அவர்கள் மீதியானிடத்திலிருந்து கொள்ளயிட்ட பொன்னால் அவர்கள் கர்த்தரை விட்டு சோரம் போனார்கள். ஆனால் மீதியானியர் மீண்டும் தலையெடுக்கக்கூடாத படி கர்த்தர் அவர்களுடைய தலைவர்களை கொன்று, பொன்னாபரணங்கள் கொள்ளயிடப்படுகிறது. இதன் விளக்கங்கள் என்னவெனில் ஒருமுறை மாம்ச சிந்தைகளை நம்மை விட்டு அகற்றினால், மீண்டும் மாம்சம் நம்மில் தலையெடுக்கக்கூடாதபடி, நம்மில் உள்ள பொன்னபரணங்களாலாகிய அலங்காரங்கள் நம்மை விட்டு முற்றிலும் அகற்றப்படுமானால், நாம் தேவாவியினால் நிறைந்து கர்த்தரை ஆராதிப்பதற்கு அது நமக்கு ஆசீர்வாதமாயிருக்கும். ஆதலால் நாம் ஒருபோதும் மாம்சத்துக்கு அடிமையாகாலாகாது, தேவனுக்கு மட்டும் அடிமையாகயிருக்க வேண்டும்.
அல்லாமலும் கிதியோனுக்கு அநேக ஸ்திரீகள் இருந்தார்கள். அவனுடைய கர்ப்பப்பிறப்பாகிய எழுபது குமாரர் இருந்தார்கள். அல்லாமலும் சீகேமிலுயுள்ள அவனுடைய மறுமனையாட்டிக்கு ஒரு குமாரன் இருந்தான் அவன் பெயர் அபிமெலேக்கு. பின்பு கிதியோன் மரித்து ஒப்ராவிலே இருக்கும் தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்யரினுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்படடான். அவன் மரித்த பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களை பின்பற்றி சோரம் போய் பாகால் பேரீத்தை தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தங்களை சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனை நினையாமலும், கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்கு செய்த எல்லா நன்மைக்குத்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
ஆதலால் பிரியமானவர்களே இந்த காரியங்களை நாம் சிந்திக்கும் போது, கிதியோன் மீதியானிடத்தினின்று வாங்கின பொன்னால் ஏபோத்தை உண்டாக்கினதால், இஸ்ரவேலர் எல்லாரும் அதனை பின்பற்றி சோரம் போனார்கள் என்றும், அது கிதியோன் வீட்டாருக்கு கண்ணியாயிற்று என்று எழுதப்பட்டிருக்கிறதால், கிதியோன் மரித்த பிறகு இஸ்ரவேலர் எல்லாரும் பாகால் பேரீத்தை பின்பற்றி சோரம் போய் தங்களை சுற்றிலும் இருந்த சத்துருவின் கையினின்று தங்களை இரட்சித்த தேவனை நினையாமற் போனார்கள் என்றும்., பின்பு அவன் வீட்டாருக்கு வந்த கண்ணி என்ன என்பதும் அடுத்த நாளில் கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம். ஆதலால் நாம் மாம்ச கிரியைகளை அழித்தாலும் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.