தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8: 8

மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிகள், மாம்சத்தின் செயலால் குன்றிபோகாதபடி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, ஒருமுறை விடுதலையாகியும் மீண்டும் மாம்சத்திற்கு அடிமையாகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

நியாயாதிபதிகள் 9:1-6  

யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.

அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.

பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது  கிதியோன் என்னும் யெருபாகாலின் மறுமனையாட்டிக்கு பிறந்த குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்கு போய் அவர்களையும், தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி யெருபாகாலின் குமாரர் எழுபது பேர் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷர்களின் காதுகளும் கேட்க பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும், உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான். அப்படியே அவர்கள் அங்குள்ள பெரிய மனுஷர்களின் காதுகள் கேட்க பேசினார்கள்.   அப்பொழுது அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கை பின்பற்ற சாய்ந்தது.  

மேலும் அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்கு கொடுத்தார்கள்.  அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரை சேவகத்தில் வைத்தான்.  அவர்கள் அவனை பின்பற்றினார்கள்.  மேலும் அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்கு போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் வைத்து கொலைசெய்தான்.  ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியால் அவன் தப்பினான்.  பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டு போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே ராஜாவாக்கினார்கள்.  

பிரியமானவர்களே மேலே கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கிதியோன், இஸ்ரவேலர் மீதியானியரிடத்திலிருந்து கொள்ளையிட்ட கடுக்கன்களையும், மற்றும் ஆபரணங்களையும் கொண்டு ஏபோத்தை செய்ததால், இஸ்ரவேலர் அதனை பின்பற்றிச் சோரம் போனார்கள்.  அது கிதியோனுக்கும். அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று என்று கழிந்த நாளில் நாம் தியானித்தது தான், தேவன் கிதியோனையும் அவன் வீட்டாரையும் நியாயந்தீர்க்கிறார்.  எப்படியென்றால் அவன் மாம்சத்துகுள்ளானதினால் கர்த்தர்  கிதியோன் பெற்றெடுத்த மாம்ச சந்ததியினால் ஆவிக்குரிய சந்ததிகள் கொல்லப்படுகிறது.  ஆனால் யோதாமாகிய குமாரன் தப்புவிக்கப்படுகிறான்.  

இதன் விளக்கம் என்னவென்றால் ஒருமுறை நாம் இரட்சிக்கபட்டு, மாம்சத்தின் கிரியைகள் அழிக்கப்பட்டு, மீண்டும் மாம்சமாகிய கிரியைகளை நாம் செய்வோமானால், நாம் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவுக்குரிய  ஆவிக்குரிய தோற்றங்கள் எல்லாம் நம்மளில் இருந்து நீக்கிப்போடப்படுகிறது என்பதனை கர்த்தர் இந்த எழுபது குமாரர்களை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் மங்கி எரிகிற விளக்கை அணைக்காமல் இருக்கிறார் என்பதற்கு திருஷ்டாந்தமாக யோதாம் காக்கப்படுகிறான். 

பிரியமானவர்களே ஆவிக்குரிய வளர்ச்சிகள் அழிந்து போகாதபடி நம் ஆத்துமாவை ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ளும் படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.