தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 6:8

முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடத்தில் உலகத்திற்குரிய எந்த பதவிகளும் இல்லாமல், கிறிஸ்துவுக்கேற்ற கனிக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிகள் குன்றிப்போகாதபடி இருக்க, நாம் மாம்ச செயல்களில் சிக்கிக் கொள்ளாதபடி நம்மை கவனமாக காத்துக்கொள்ளவேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 9:7

இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யெருபாகாலின் அடிமைப்பெண்ணின் மகனாகிய அபிமெலேக்குக்கு பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிகாசை எடுத்து சீகேமின் மனுஷரின் இருதயம் அவன் பக்கம் சாய்ந்தால் அவனுக்குக் கொடுத்தார்கள். அவன் அந்த வெள்ளிக்காசைக் கொண்டு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரை சேவகத்தில் வைத்தான்;  அவர்கள் அவனை பின்பற்றினார்கள்.  பின்பு யெருபாகாலின் குமாரரை ஒரே கல்லின் மேல் வைத்து கொலை செய்கிறான்.  ஆனால் அவனை சீகேமின்  மனுஷர்  கர்வாலிமரத்தண்டையிலே ராஜாவானது யோதாமுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று உரத்த சத்தமிட்டு கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்கு செவிக்கொடுக்கும் படி நீங்கள் எனக்கு செவிக்கொடுங்கள்.  

அவன் கேட்டது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 9: 8-15  

விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

அப்பொழுது மரங்கள் திராட்சச்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது ஒலிவ மரம், அத்திமரம், திராட்ச செடி இவைகள் ராஜவாயிருக்கும் படி விரும்பாமல், முட்செடி மரங்களை பார்த்து சொல்கிறது என்னவென்றால், நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக  அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களை பட்சிக்கக் கடவது என்றது.  இதனை கர்த்தர் எதற்காக திருஷ்டாந்தப்படுகிறது என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ராஜாவாக ஜனங்களை ஆளுவதற்கு விரும்பாதவர் என்பதற்காக கர்த்தர் யோதாமை வைத்து நமக்கு விளக்கி காட்டுகிறார்.  மட்டுமல்லாமல் அவரால் இரட்சிக்ப்பட்டவர்களும் பதவியில் இருக்கக் கூடாது என்பதனை எடுத்துக்காட்டுகிறார். கிறிஸ்துவினால் நமக்குள் நாம் ஆத்துமாவில்பெற்றுக்கொள்கிற பலன் என்னவென்றால் கொழுமையான நற்கனிகளினால் உண்டாகிய கிருபைகள் தான்.  அல்லாமல் வேறு எந்தவிதமான உலக உல்லாசங்களோ நம்மிடத்தில் வரக்கூடாது என்பது இந்த வார்த்தைகளால் நமக்கு புரிகிறது.  ஆனால் முட்செடியைக் குறித்து சொல்வது, உலகத்தின் கிரியைகள் உள்ளவர்கள், தங்களால் பரலோகத்திற்குரிய காரியங்கள் எதையும் ஜனங்களுக்கு கொடுக்க முடியாவிட்டாலும், தாங்கள் தங்களிலிருக்கிற கொடுமையின் அக்கினியினால் பலங்கொண்ட விருட்சமாகிய ஆத்துமாக்களை பட்சிப்பார்கள்.  இவைகள் அபிமெலேக்கைக் குறித்து கர்த்தர் விளக்குகிறார்.   

பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும் போது கர்த்தரின் பிள்ளைகள் எந்த உலக சிற்றின்பங்களிலோ, தலைவர்கள் என்றபதவிகளிலோ மோகம் கொள்ளாமல் கிறிஸ்துவுக்கேற்ற ஆத்துமாவின் நற்கனிகளால் நிறையப்பட்ட கிருபைகளால் ஜொலிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.