தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 5:7,8

இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் தேவனுடைய ஆவியினால் திடப்பட வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில் மணவாட்டி சபையாகிய நம்மிடத்தில் எந்தவிதமான உலக சம்மந்தமான பதவிகளுக்கும் இடம்கொடுக்காமல், கிறிஸ்துவுக்கேற்ற கனிக்கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

நியாயாதிபதிகள் 9:16-23 

என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.

நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்.

இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,

நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவருக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.

இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொல்லி,

தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.

அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டபின்பு,

அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது முட்செடியைக்குறித்தும், அந்த முட்செடியானது அபிமெலேக்குக்கு உதாரணமாக வசனத்தில் எடுத்துகூறப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.  என்னவெனில்  முட்செடி மாம்ச சந்ததிகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.  அல்லாமலும் யோதாம் கூறுகையில் ஆவிக்குரிய எடுத்துக்காட்டுகளும், மாம்சத்துகுரிய காரியங்களும் கூறிவிட்டு அவர் சொல்வது; என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்பண்ணி தன் ஜீவனை எண்ணாமற்ப் போய் உங்களை மீதியானியற் கையினின்று இரட்சித்தார் என்றும் ஆனால் இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி அவருடைய குமாரரான எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலை செய்த, அவருடைய வேலைகாரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால்,அவனை சீகேம் பட்டணத்திற்கு ராஜாவாக்கினீர்கள்.  

ஆனால் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும், உத்தமுமான செய்கையாயிருக்குமானால், நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவருக்கு செய்து, இப்படி அவரையும், அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாக இருக்குமானால், அபிமெலேக்கின் மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள் மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.   இல்லாவிட்டால்  அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கக் கடவது என்று யோதாம் சொல்லி தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்கு, பயந்து தப்பியோடி, பேயோருக்கு போய், அங்கே குடியிருந்தான்.  

பிரியமானவர்களே இவ்விதம் யோதாம் சொன்னது, தேவனுக்கு சித்தமில்லாமல் மனுஷருடைய யோசனையின் படி ஒருவனை ராஜாவாக்கினால், அவன் கடைசியில் ராஜாவாக்கினவர்களுக்கே தீமை செய்கிறவனாயிருப்பான் என்பது தான் தேவனுடைய தீர்ப்பு என்பதனை கர்த்தர் யோதாம் மூலம் அங்கு வெளிப்படுத்துகிறார்.  இவை என்னவென்றால் சீகேமின் மனுஷர்கள் அபிமெலேக்கை ராஜாவாக்கினது தேவனுக்கு பிரியமில்லாததாயிருக்கிறது. ஏனெனில் மாம்சத்திற்குட்பட்டவர்கள் தேவனுக்கு பிரியமாயிருக்கமாட்டார்கள் என்பது ரோமர் 8:8-ல் கூறப்படுகிறது.  அல்லாமலும் ரோமர் 8:6-ம் வசனம் மாம்ச சிந்தை மரணம், ஆவியின் சிந்தையோ ஜீவனும், சமாதானமுமாகும்.  என்னவெனில் மாம்சம் கொல்லுகிறது, ஆவியோ நம்மை உயிர்பிக்கிறது.  அல்லாமலும் நாம் முந்தின செயல்களாகிய அபிமெலேக்கு அடிமை பெண்ணின் குமாரன், சுதந்தரவாளிகளை கொல்லுகிறான் என்றால் கர்த்தர் அதனை நமக்கு காட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம்முடைய உள்ளத்தில் மாம்சீக எண்ணங்களுக்கு முக்கியஸ்தானம் கொடுப்போமானால், ஆவிக்குரிய எண்ணங்களில் நாம் திடப்படமுடியாது.  

ஆதலால் கர்த்தர் சொல்வது சங்கீதம் 27:14  

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

ஆதலால் நம்முடைய ராஜாவாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய உள்ளத்தில் முதற்பேறானவராக விளங்குகிறார்.  அதென்னவெனில் நீதியும், நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.  ஆனால் அதற்கு மாறாக நாம் மாம்சமாகிய நம்முடைய எண்ணங்களுக்கு இடம்கொடுப்போமானால் அதுவே வந்து நம்மை அக்கினியை போல பட்சிக்கும் என்பதில் மாற்றமில்லை. 

ஆதலால் பிரியமானவர்களே கர்த்தருடைய வார்த்தை

யாக்கோபு 5:1-3  

ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.

உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

மேற்க்கூறப்பட்ட வாரத்தைகளை நாம் தியானிக்கையில் கிறிஸ்துவின் வசனத்தை காட்டிலும் நாம் எதையும் உயர்ந்த எண்ணமாக நம் உள்ளத்தில் வைக்கக்கூடாது.  அவ்விதமாக வைத்தால் அதுவே நம்மை நியாயம் தீர்க்கும் என்பதனை கர்த்தர் அபிமெலேக்கை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதனை குறித்து அங்கு யோதாம் மூலம் கர்த்தர் கூறுகிறதை பார்க்க முடிகிறது.  மேலும் அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்ட பின்பு அபிமெலேக்குக்கும், சீகேமின் பெரிய மனுஷர்களுக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை பதேவன் வரபண்ணினார்.  என்னவெனில் நாம் சிந்தித்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் மாம்ச சிந்தையோடு நம்மிடத்தில் வருகிறவர்களிடத்தில் மிகவும் ஜாக்கிரதையோடு காணப்படவேண்டும்.  அல்லாவிட்டால் கர்த்தர் நமக்கும் அவர்களுக்கும் இடையில் பொல்லாப்பை உண்டுபண்ணுகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் எப்போதும் ஜாக்கிரதையாகயிருந்து தேவனோடுக்கூட ஐக்கியப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.  அப்படியானால் நம்முடைய இருதயம் திடப்படும்.  இவ்விதம் நம்முடைய இருதயம் திடப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.