தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மாம்சத்தின் கிரியைகளை பரிசுத்த ஆவியால் நிறைந்து, அதனை அழிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எவ்விதத்திலும் மாம்சத்திற்கு அடிமையாகாமல் ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும் என்று தியனித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 9: 41-47
அபிமெலேக்கு அருமாவில் இருந்துவிட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.
மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.
அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.
அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் சேபூல், காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடி துரத்திவிட்ட பின்பு, ஜனங்கள் மறு நாளிலே வயலுக்கு போனார்கள். அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்ட போது அவன் ஜனங்களை கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து வருகிற போது, அவர்களை கண்டு, அவர்கள் மேல் எழும்பி அவர்களை வெட்டினான். அபிமெலேக்கு் அவனோடிருந்த படையும் பாய்ந்து வந்து, பட்டணத்தின் ஒலிமுக வாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர் மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள். அல்லாமலும் அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின் மேல் யுத்தம் பண்ணி, பட்டணத்தை பிடித்து, அதிலிருந்த ஜனங்களை கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு அதின் மேல் உப்பு விதைத்தான். இவ்விதம் செய்ததை சீகேம் துருக்கத்து மனுஷர் கேள்விப்பட்டு, அவர்கள் பேரீத் கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
ஆனால் இதனை அபிமெலேக்கு அறிந்த போது,
நியாயாதிபதிகள் 9:48-57
அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.
பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது.
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.
அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
மேற்க்கூறப்பட்ட வசனங்களின் விளக்கம் என்னவென்றால் அபிமெலேக்கு தன்னோடிருந்த ஜனங்களோடு சல்மோன் மலையின் மேல் ஏறி அங்கிருந்த ஒரு மரத்தின் கொம்பை வெட்டி தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களையும் நோக்கி ; நான் செய்கிறது போல நீங்களும் தீவிரமாய் என்னை போல் செய்யுங்கள் என்று சொன்னபோது, ஜனங்களும் அவனை போலவே ஒவ்வொரு கொம்பை வெட்டி, சீகேம் துருக்கத்து மனுஷர் இருந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினிக்கொளுத்தி, அந்த அரணை சுட்டு போட்டார்கள். அதனால் ஸ்திரீகளும் புருஷருமாக ஏறக்குறைந ஆயிரம் பேர் சீகேம் துருக்கத்து மனுஷர்கள் செத்தார்கள். பின்பு அபிமெலேக்கு தேபேசுக்கு போய், அதற்கு விரோதமாய் பாளயமிறங்கி அதை பிடித்தான். ஆனால் அந்த பட்டணத்தில் பலத்த துருக்கம் இருந்தது. ஆனால் அந்த பட்டணத்து மனுஷர், புருஷரும் ஸ்திரீகளும் அனைவரும் ஓடிப்புகுந்து, கதவை பூட்டிக்கொண்டு, துருக்கத்தின் மேல் ஏறினார்கள்.
ஆனால் அபிமெலேக் அந்த துருக்கத்தின் மேல் யுத்தம் பண்ணி, அந்த துருக்கத்தின் கதவை சுட்டெரித்து போடும் படிக்கு அதன் கிட்ட சேர்ந்தான். அப்போது ஒரு ஸ்திரீ எந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின் மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது. உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைகாரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னை கொன்றாள் என்று என்னைக் குறித்து சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னை கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவ குத்தினான், அவன் செத்து போனான். இப்படியே அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்கு போய்விட்டார்கள். இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலை செய்ததினால், தன் தகப்பனுக்கு செய்த பொல்லாப்பை தேவன் அவன் மேல் திரும்பும்படி செய்தார். சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்கு பலித்தது.
பிரியமானவர்களே முந்தின வசனங்களை நாம் தியானிக்கும் போது நம் உள்ளத்தில் பல விதமான மாம்ச சிந்தனைகள் எழும்புவதும், அந்த மாம்சம் ஆவிக்கு விரோதமாக செயல்படுகிறதையும், அதனால் கோபத்தோடு கர்த்தர் எவ்விதத்தில் மாம்சத்தை அழிக்கிறார் என்பதனையும், அதனை அக்கினியால் சுட்டெரிக்கிறதையும், அதன் பின்பு ஆவிக்குரிய சந்ததியை அழித்த மாம்ச சந்ததியை வைராக்கியத்தோடு மணவாட்டி சபையாகிய பரிசுத்த ஆவியானவரால் பழிக்கு பழி வாங்குகிறார் என்பதனை திருஷ்டாந்தத்தோடு கூறி யோதாமையும் அபிமெலேக்கையும் வைத்து நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.
ஆதலால் நாம் மாம்சத்தின் கிரியைகளை பரிசுத்த ஆவியால் நிறைந்து, அதனை அழிக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.