தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 80:18,19
அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை இரட்சிக்க வல்லமையுள்ள தேவன் ஒருவரே; அவரே நம்மை இரட்சிக்கிறவர் என்பதை அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் மாம்ச சிந்தைகள் வளராமல் இருக்கும்படியாக, பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாக அதனை அழிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 10:1-5
அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.
யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது அபிமெலேக்குக்கு பின்பு தோதோவின் மகனான பூவாவின் குமாரன் தோவா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான். அவன் எப்பிராயீம் மலைத் தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். அவன் இஸ்ரவேலை இருபத்து மூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம் பண்ணப்பட்டான். அவனுக்கு பின்பு கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்வேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். ஆனால் அவனுக்கு முப்பது கழுதைகுட்டிகள்மேல் ஏறும் முப்பது குமாரர் இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது. கீலேயாத் தேசத்திலுள்ள அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது. ஆனால் யாவீர் மரித்து காமோனிலே அடக்கம்பண்ணபட்டான்.
அதன் பிறகு இஸ்ரவேலர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்கிறார்கள் என்பதனை
நியாயாதிபதிகள் 10:6
இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
இந்த வசனத்தில் இஸ்ரவேலர் சேவித்த தேவர்கள் எழுதப்பட்டிருக்கிறது. ஆதலால் கர்த்தர் அவர்கள் மேல் கோபமூண்டு, அவர்களை பெலிஸ்தரின் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார். அவர்கள் அந்த வருஷம் தொட்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
பிரியானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் சிந்திக்கும் போது யாரையும் எந்த மனுஷனாலும் இரட்சிக்க முடியாது என்னவென்றால் எல்லா மனுஷரும் தாழ்விலிருந்துண்டானவர்கள். ஆனால் கர்த்தராகிய இயேசுவே உயர்விலிருந்துண்டானவர். ஆதலால் அவர் மாத்திரம் தான் நம்மை இரட்சிக்க முடியும். ஏனென்றால் எல்லா மனுஷருக்கும் மரணம் உண்டாயிருக்கிறது. ஆனால் கர்த்தராகிய இயேசுவே என்றென்றும் உயிரோடிருக்கிறவராகையால் நம்மை முற்றுமுடிய இரட்சிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
ஆதலால் எபிரெயர் 5:7-10
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது தாம் கீழ்படிதலை கற்றுக்கொண்டு பூரணமான பின்பு தமக்கு கீழ்படிகிற யாவருக்கும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு காரணராகி மெல்கிசெதேக்கின் முறைமையின் படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். ஆதலால் பிரியமானவர்களே நம்மை இரட்சிக்க கிறிஸ்துவால் மட்டும் தான் முடியும் என்பதனை கட்டாயமாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இஸ்ரவேலர்கள் புறஜாதிகளால் நெருக்கப்படுகிறதின் காரணம் கர்த்தர் அவர்களை புறஜாதிகளின் கையில் கோபமாக ஒப்புப்கொடுக்கிறார். மேலும் நம்முடைய உள்ளம் புற ஜாதிகளின் தேசத்திலிருக்கிறதால் அவர்களால் இஸ்ரவேலர்கள் நெருக்கப்படுகிறார்கள். அது என்னவென்றால் நம்முடைய உள்ளம் அவர்கள் நடக்கிற பிரகாரம் அநேக காரியங்களில் நடக்கிறோம்.
மேலும் நியாயாதிபதிகள் 10:9-10
அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது அம்மோன் புத்திரர், யூதாவின் மேலும், பென்யமீன் மேலும், எப்பிராயீம் மேலும் யுத்தம் பண்ண யோர்தானை கடக்கிறார்கள். அவ்விதம் இஸ்ரவேலர் அவர்களால் நெருக்கப்பட்டார்கள், அப்போது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி முறையிடுகிறார்கள். அதற்கு கர்த்தர் இஸ்ரவேலரிடம் சொல்வது
நியாயாதிபதிகள் 10:11-18
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,
சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா?
அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன்.
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.
அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.
அப்பொழுது கீலேயாத்தின்ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின்குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொல்லி, அவ்விதம் உங்களை இரட்சித்தேன்; ஆனால் மீண்டும் நீங்கள் அந்நிய தேவர்களை சேவித்தீர்கள்; ஆதலால் நான் இனி உங்களை இரட்சியேன் என்கிறார். அதோடு கர்த்தர் சொல்வது நீங்கள் போய் உங்களுக்காகத் தெரிந்துக்கொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்து காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். அப்போது அவர்கள் கர்த்தரை நோக்கி பாவஞ் செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானபடி எங்களுக்கு செய்யும்; இன்றைக்கு மாத்திரம் எங்களுக்கு செய்யும் என்று சொல்லி அவர்களிடத்திலிருந்த அந்நிய தேவர்களை விலக்கி விட்டு கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள். அப்போது கர்த்தர் அவர்கள் மேல் மனமிரங்கி இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்டது போல கர்த்தர் நம்மை எத்தனையோ முறை சத்துருவின் கையிலிருந்து இரட்சித்தும், நாமோ அடிக்கடி அவரை விட்டு நீங்கி போய் கர்த்தருக்கு பிரியமல்லாத வழியில் நடக்கிறோம். அவ்விதம் நடக்கும் போது, பல விதத்தில் நெருக்கப்டுகிறோம். அப்படி நெருக்கப்படும் போது மீண்டும் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது அவர் பல முறை விடுவித்தும், அதனை உணராமல் அந்நிய தேவர்களை சேவித்த எத்தனையோ நேரமுண்டு. அதன் பின்பு பலவிதத்தில் நாம் நெருக்கப்படும்போது, அவர் நம்மை இனி விடுவிக்கக்கூடாது என்று இருந்தாலும், நம்முடைய கூப்பிடுதலும் நம்முடைய சமர்ப்பணம் நிமித்தம் அவர் மனமிரங்கி நம்முடைய வருத்தத்தை பார்த்து மனதுருகுகிறார். இதனை தான் அவர் இரக்கமும், மன உருக்கமுமுள்ள தேவன் என்கிறோம். இவ்விதமாக நமக்கு தேவன் அவருடைய செயல்களை விளக்குகிறார்
அதுமட்டுமல்லாமல் அம்மோன் புத்திரர் கூட்டங் கூடி கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள். இஸ்ரவேல் புத்திரர் கூட்டங்கூடி மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள். அப்போது கீலேயாத்தின் ஜனங்களும், பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர் மேல் முந்தி யுத்தம் பண்ணப் போகிற மனுஷர் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றான்.
இவ்விதமாக கர்த்தரே யுத்தத்தில் வல்லவராயிருந்து, அவரே எல்லாவற்றிற்கும் தலைவராக விளங்குகிறவர். அவராலே நம் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு. அவரே நம்மை இரட்சிக்கிறவர். இவ்விதமாக இரட்சகரை நாம் சேவிப்போம் அவரை மகிமை படுத்துவோம், அவருக்காக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.