தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் எந்த ஜாதிகளுடைய வழிகளிலும் நடவாமல் நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ள வேணடும் என்பதற்கான திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பரஸ்திரீயினோடு ஐக்கியப்படாமல் கிறிஸ்துவினோடு ஐக்கியம் உள்ளவர்களாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 11:10
கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, கீலேயாத்தின் மூப்பர் அம்மோன் புத்திரரோடு யுத்தம் செய்வதற்கு யெப்தாவின் உதவியை நாடினபோது, யெப்தா சொன்னது அவர்களை கர்த்தர் என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்கு தலைவனாக வைப்பீர்களா என்று கேட்டதற்கு, கீலேயாத்தின் மனுஷர் அவ்விதம் தங்கள் வார்த்தையினால் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
அல்லாமலும் நியாயாதிபதிகள் 11:11
அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தையானது யெப்தாவை கீலேயாத்தின் மூப்பர் தங்கள் மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தரின் சந்நிதியிலே சொன்னான். பின்பு யெப்தா அம்மோன் புத்திரரோடு சொல்வது
நியாயாதிபதிகள் 11:12
பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான்.
அதற்கு அம்மோன் புத்திரர் யெப்தாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி
நியாயாதிபதிகள் 11:13
அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
ஆனால் மறுபடியும் யெப்தா சொல்வது
நியாயாதிபதிகள் 11:14-18
யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திரமட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து,
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.
மேற்கூறிய வார்த்தைகள் என்னவெனில் யெப்தா சொல்வது, இஸ்ரவேலர் மோவாபின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லை, அவர்கள் எகிப்திலிருந்து கடந்து வருகிற போது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரத்தின் வழியாய் மட்டும் நடந்து வந்து பின்புகாதேசுக்கு வந்தார்கள். ஆனால் அப்போது அவர்கள் ஏதோம் ராஜாவினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, அந்த தேசத்து வழியாய் கடந்து போகட்டும் என்ற போது ஏதோமின் ராஜா அதற்கு செவிக்கொடுக்கவில்லை. அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்காததினால் அவர்கள் காதேசிலே தரித்திருந்தார்கள்.
பின்பு அவர்கள் நியாதிபதிகள் 11:18-23
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.
அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
யாபோக்மட்டும், வனாந்தரம்துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்.
இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?
மோவாபின் ராஜாவும் அத்தேசத்தின் வழியாய் வருவதற்கு சம்மதிக்காததால், மோவாப் தேசத்தையும், ஏதோம் தேசத்தையும் சுற்றிப் போய், மோவாபுக்கு கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள். அப்போது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்தின் வழியாய் எங்கள் ஸ்தானத்திற்கு கடந்து போக இடங்கொடு என்று சொல்ல சொன்னார்கள். அதற்கு சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையை கடந்து போக சம்மதியாமல், தன் ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு யாகாசிலே பாளயமிறங்கி இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணினான். அப்போது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள். அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி யாபேக்கு மட்டும், வனாந்திரம் துவக்கி யோர்தான் மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய் கட்டிக்கொண்டார்கள் என்பதனை யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்தில் எல்லா காரியங்களை குறித்தும் விளக்கி ஸ்தானாபதிகளை அனுப்பி சொல்ல சொன்னான்.
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கி சொல்வது என்னவென்றால், நாம் எப்படி நம்முடைய விசுவாச யாத்திரை செய்ய வேண்டும் என்பதையும், மேலும் ஜாதிகளின் விருப்பமான கிரியைகளுக்குள் நாம் பிரவேசியாதபடிக்கும், அவ்விதம் குறுகலான பாதையில் பிரவேசிக்காதபடி, கர்த்தர் ராஜாக்களுடைய இருதயத்தை கடின படுத்தி அனுமதிக்கவிடாததை நாம் சிந்தித்து,அந்த கிரியைகளில் நாம் விழுந்து விடாதபடியும், எமோரியர் இனி நம் வாழ்வில் நுழைந்து வராதபடி அந்த கிரியைகளை எல்லாம் துரத்தி விட்டு, நாம் தீய கிரியைகளில் தலையிடாதபடி, அதனை கிறிஸ்துவினால் நாம் கட்டிக்கொண்டு, முழு உள்ளமும் தேவனுடைய ராஜ்யமாகும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போமானால் பரிசுத்தமாக்கபடுவோம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.