தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 42:1

இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கும்படியான கிரியைகளை நாம் செய்ய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் நாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் எந்த விதமான ஜாதிகளின் வழியில் நடவாதபடி நம்முடைய ஆத்துமாவை காத்துகொள்ள வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 11:23-29

இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?

உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம்.

மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப்பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினானா?

இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?

நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான்.

அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

மேற்க்கூறப்பட்ட விளக்கங்கள் என்னவென்றால்  யெப்தா அம்மோன் புத்திரரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, இஸ்ரவேல் புத்திரர் எப்படியெல்லாம் எகிப்திலிருந்து இஸ்ரவேலுக்கு வந்தார்கள் என்பதனையும், எமோரியருடைய தேசத்தை கட்டிக்கொண்டதையும் விவரமாய் எடுத்து சொன்னதுமல்லாமல், இப்படி கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக எமோரியரை துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை கட்டிக்கொள்ளத்தகுமா? உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படி கர்த்தர் எங்களுக்கு முன்பாக துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்கள் கட்டிக்கொள்கிறோம்.  

மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபிய ராஜாவை காட்டிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ?  அவன் எப்போதாகிலும் இஸ்ரவேலிடம் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினானா? மேலும் அவன் சொல்வது இஸ்ரவேலர் முந்நூறு வருஷம் குடியிருந்த தேசங்களாகிய எஸ்போனிலும் அதின் கிராமங்களையும், ஆரோவேரையும் அதின் கிராமங்களையும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களையும் நீங்கள் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?  இவ்விதமாக சொல்லி, பின்பு அவன் சொல்வது, நான் உமக்கு விரோதமாக குற்றம் செய்ய வில்லை, நீர் எனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்.  ஆதலால் நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்ககடவர் என்று  சொல்லி அனுப்பினான்.  ஆனால் யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்கு செவிகொடாதே போனான்.  அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்   அவன் கீலேயாத்தையும், மனாசே நாட்டையும் கடந்து போய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.  

மேலும் பிரியமானவர்களே யெப்தாவை குறித்து நாம் பார்க்கும் போது அவனை பெற்றெடுத்தது பரஸ்திரீ, அவன் அப்போது பராக்கிரமசாலியாகயிருந்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அந்நேரத்தில் வீணரான மனுஷரோடே சேர்ந்து யுத்தம் பண்ண போகிறான் என்று பார்த்தோம்.  அப்பொது இஸ்ரவேலர் அவனுடைய உதவியை நாடினார்கள்.  இதன் விளக்கத்தை குறித்து நாம் கழிந்த நாளில் தியானித்தோம்.  அவனை பரஸ்திரீ பெற்றடுத்தாலும் பின்கு அவன் இஸ்ரவேலரோடு தொடர்புக்கொண்டு இஸ்ரவேலருக்கு உதவியாக நின்றதால் அவன் மேல் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்குகிறதை பார்த்தோம்.  

பிரியமானஙர்களே இவையெலலாம் சபையின் அனுபவங்களை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் பரஸ்திரீ என்பது உலக ஆசீர்வாதத்தை உரைக்கிற சபை.  ஆனால் அவ்விதம் நாம் இதுவரையில் இருப்போமானாலும், இஸ்ரவேலராகிய கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்ட  ஜக்கியத்தில் நாம் காணப்படுவோமானால் கர்த்தருடைய சத்தியத்திற்கு கீழ்படிந்து அவருக்கு முழு உள்ளமும் கொடுப்போமானால் அவருடைய ஆவியினால் நம்மை கர்த்தர் நிரப்புவார்.  இவ்விதம் கர்த்தருடைய  ஆவியானவர் நம்மேல் இறங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.