தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 45:17

உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை முழுமையான ஜீவப்பலியான காணிக்கையாக ஒப்படைக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கும் படியான கிரியைகளை நாம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

அல்லாமலும் நாம் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிபள் 11:29  

அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யெப்தா பரஸ்திரீயின் மகனாக காணப்பட்டாலும், இஸ்ரவேலின் புத்திரரோடு ஐக்கியதோடு காணப்பட்டதாலும், அவர்களுக்காக போராடினதாலும்  அவன் மேல் கர்த்தருடைய ஆவியானவர் இறங்குகிறதை பார்க்கிறோம்.  அவ்விதம் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினதால் அவன் கீலேயாத் நாட்டையும், மனாசே நாட்டையும் கடந்து போய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாக போனான்.   மேலும் அவன் அம்மோன் புத்திரருக்கு விரோதமாக போகும் போது அவன் பண்ணின பொருத்தனையாவது 

நியாயாதிபதிகள் 11:30,31  

அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,

நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

மேற்கூறிய வார்த்தைகளின் பிரகாரம் அவன் பொருத்தனை பண்ணின பின்பு, யெப்தா, அம்மோன் புத்திரருக்கு விரோதமாக யுத்தம் பண்ண புறப்பட்டு போனான். கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.   அப்போது அவர்களை யெப்தா ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்ச தோட்டத்து நிலங்கள் வரைக்கும் மகா சங்காரமாய் முறியடித்து, இருபது பட்டணங்களை பிடித்தான்  இவ்விதம் அம்மோன் புத்திரர்  இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக தாழ்த்தப்பட்டார்கள்.  பின்பு அவன் மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டிற்கு திரும்புகிறான்  

நியாயாதிபதிகள்  11:34-36   

யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டுவந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.

அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.

அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய, உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யெப்தா எடுத்த பொருத்தனைக்காக அவன் ஒரே குமாரத்தி அவன் தன்  வீட்டுக்கு வருகிற போது தம்புரு வாசித்து நடனஞ் செய்து அவனுக்கு எதிர் கொண்டு வந்தாள்.  அப்பொழுது அவளை கண்டவுடனே தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு ஐயோ! என்மகளே என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய் என்று தன் குமாரத்தியினிடத்தில் அவன் செய்த பொருத்தனையை சொல்லி; நான் என் வாயை திறந்து சொன்னதினால் இனி மாற்றக்கூடாது என்று சொல்ல, அவனுடைய மகள் என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி பேசினீரல்லவோ?  ஆதலால் கர்த்தர் அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியை சரிகட்டும் ஜெயத்தை கட்டளையிட்டபடியினால் உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்கு செய்யும் என்று சொல்கிறாள். பின்னும் அவள் சொல்வது 

நியாயாதிபதிகள்11: 37-40  

பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.

அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,

இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.

இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.

மேற்க்கூறிய வசனங்கள் நம்முடைய உள்ளத்தை சந்திக்குமானால், கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது , நம்முடைய  ஒரே ஆத்துமா, தப்பான எண்ணங்களில் (புறஜாதிகளுடைய கிரியைகளில்) சிக்குண்டு இருக்குமானால், நாம் தேவனிடத்திலிருந்த நீதியை தவற விடுகிறோம், அப்படியாக அம்மோனிய கிரியைகள் தொடர்ந்து பிடிப்பதற்கு காரணமாயிருக்கிறது.  மேலும் இதன் கருத்துக்களை நாம் சிந்திக்கும் போது, கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.    அதனை குறித்ததான வசனங்கள் 

சங்கீதம் 87:1-7

அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.

பிரியமானவர்களே மேற்க்கூறிய வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய ஆத்துமாவின்  பிறப்பில் இருக்கிறது.  அதன் காரணம் ஒவ்வொருவரின் பிறப்பும் எத்திறத்தாரை சார்ந்ததென்று உன்னதமானவர் தாமே ஸ்திரப்படுத்துவார்.  அவ்விதம் இருக்கிறபடியால் சிக்கி கிடக்கிற நம்முடைய ஆத்துமா தரித்திருக்கிற நீதியின் கிரியைகள் அழிவில்லாமல் விடுதலையாக வேண்டுமானால் நாம் உள்ளம் திறந்து நம்முடைய ஆத்துமாவை கிறிஸ்துவோடுகூட ஜீவபலியாகக்கொடுப்பதற்கு  நாம் ஆயத்தத்தோடு காணப்பட்டு கர்த்தருக்கு முன்பாக யெப்தா பொருத்தனை பண்ணிக்கொண்டது போல் நாம் கர்த்தருக்கு முன்பாக பொருத்தனை பண்ணினோமானால் கர்த்தர் காரியத்தை வாய்க்க செய்து  நம்மை இரட்சிப்பார். அதனைக்குறித்த திருஷ்டாந்தம் தான் யெப்தாவின் பொருத்தனையின் பிரகாரம், தன்னுடைய மகள் யுத்தம் ஜெயம்பெற்று வரும் போது வீட்டிலிருந்து வருகிறாள் என்றால், நம்முடைய உள்ளத்தின் ஆத்துமா தான் தேவனைக்குறித்ததான ஆடல் பாடல் இவைகளின் சத்தத்தால் ஜீவனோடு நம்மை சர்வாங்க தகனபலியாக ஒப்புக்கொடுக்க நாம் யாவரும் முன் வரவேண்டும் என்பதனை கர்த்தர் நமக்கு காட்டுகிறார். 

அல்லாமலும் யெப்தாவின் குமாரத்தி, தன் தந்தையிடம் ஒரு காரியம் எனக்கு செய்ய வேண்டும் என்று கேட்கிறேன் என்று சொல்லி யான் மலைகளின் மேல் போய் திரிந்து என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கம் கொண்டாட, இரண்டு மாதம் தவணை வேண்டும் என்று கேட்க, அவன் போய் வா என்று சொல்லி அவளை அனுப்பி விடுகிறான்.  அப்படியே அவள்  தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினித்தம் மலைகளின் மேல் போய் துக்கங்கொண்டாடி இரண்டு மாதம் கழிந்து திரும்பி வந்தாள்.  அப்போது அவள் தகப்பன் பண்ணியிருந்த பொருத்தனையின் படி அவளுக்கு செய்தான்.  அவள் புருஷனை அறியாதிருந்தாள்.  அவளுக்காக இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷம் தோறும் நாலு நாள் அவளுக்காக புலம்புவது வழக்கமாயிற்று என்று எழுதப்பட்டிருக்கிறது.  

பிரியமானவர்களே இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவெனில் புருஷனை அறியாத ஒரு கன்னிகை, தன் இளம் பிராயத்தில் அவளுக்கு உண்டாகிற  உலக அனுபவங்களை மாற்றி, தன் ஆத்துமாவை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கும்படியாக, தேவனோடு உறவாட தன் தோழிமார்களோடு மலையின் மேல்போய் வருகிறது என்னவென்றால் கிறிஸ்துவின் ஐக்கியத்திற்காக தொடர்பு கொள்கிறாள். ஆத்துமா கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறது .  என்பதனை விளக்குகிறது. இதனை குறித்து 

சங்கீதம் 45:13,14 

ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.

சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் நம்மை தேவனுக்கென்று முழுமையும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.