தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளி 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றும் நியாயாதிபதியாக நம் உள்ளத்தில் வீற்றிருக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை முழுமையும் ஜீவபலியான காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 12:1-7
எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை.
நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு யுத்தம்பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர் சொன்னபடியினால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள்.
கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,
நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.
யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது எப்பிராயீமர் ஏகமாய் கூடி வடக்கே புறப்பட்டுப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடே கூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம் பண்ணப் போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். அதற்கு யெப்தா, எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடு பெரிய வழக்கு இருக்கும் போது. நான் உங்களை கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லை. நீங்கள் என்னை இரட்சிக்கவில்லை என்று நான் கண்ட போது, நான் என் ஜீவனை கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாக போனேன்: கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க நீங்கள் என்மேல் யுத்தம் பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று கூறுகிறான்.
பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமோடு யுத்தம் பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமை விட்டு ஓடிப்போனவர்கள் எப்பிராயீமர் சொன்னபடியால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள். கீலேயாத்தியர் எப்பிராயீமுக்கு முந்தி யோர்தானின் துறைகளை பிடித்தார்கள். அப்போது எப்பிராயீமரில் மீந்திருக்கிறவர்கள் யாராவது வந்து : நான் அக்கரைக்கு போகட்டும் என்று சொல்ல, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று கேட்பார்கள். அப்போது அவர்கள் அல்ல என்றால், நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அபபோது அவன் உச்சரிக்கக் கூடாமல் சிபோலேத் என்பான்; அப்போது அவனைப் பிடித்து யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள். இவ்விதமாக யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான். அதன் பின்பு யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.
அதன்பின்பு நியாயாதிபதிகள் 12:8-15
அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.
அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிற ராஜாக்கள் எல்லாரும் சில வருஷம் நியாயம் விசாரித்து,பின்பு மரித்து அடக்கம்பண்ணப்படுகிறார்கள் என்பதனை வாசிக்கிறோம்.
பிரியமானவர்களே இவர்களெல்லாரும் வெளியரங்கமாய் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார்கள். ஆனால் இவர்களால் என்றென்றைக்கும் நியாயம் விசாரிக்க முடியவில்லை. இவர்களை குறித்து நாம் தியானிக்கும் போது இவர்களுக்கு குமாரரும் குமாரத்திகளும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சபைக்கு புறத்திலே தங்கள் குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் விவாகம் செய்கிறார்கள். இவ்விதமாக ஒவ்வொருவரிலும் அநேக குறைகள் இருக்கிறதினால், இஸ்ரவேலின் ராஜாவாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளியரங்கமாய் ராஜாவாக விரும்பாமல் நம்முடைய உள்ளத்தில் ஒவ்வொருவரிலும் நியாயம் விசாரிக்கிறவராக வெளிப்படுவதற்காக தன்னையே தியாகமாக நமக்கு தந்து, அவர் இரத்தம் நம்மை சுத்திகரித்து, பின்பு நமக்குள் உயிர்தெழுந்து நம்மை நியாயம் விசாரித்து, பின்பு என்றென்றும் அழியாத ராஜ்யத்தை நாம் சுதந்தரிக்க செய்கிறார். அவர்தான் ராஜாதி ராஜா, கர்த்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் உடையவராக விளங்குகிறார். இந்த நாமம் நம் எல்லாரிலும் எழுதப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.