தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 51: 14

தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்தும  இரட்சிப்பும், பரிசுத்த வாழ்க்கையும் எவ்விதம் வாழவேண்டும் என்ற திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றும் ராஜாவாக வீற்றிருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

நியாயாதிபதிகள் 13:1-3 

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்த ராஜாக்கள் எல்லாம் ஒவ்வொருவராக மரித்தபின்பு, அவர்கள் மீண்டும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து வந்தபடியால் கர்த்தர் அவர்களை பெலிஸ்தர் கையில் நாற்பது வருஷமளவும் ஒப்புக்கொடுத்தார்.  அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சேரா ஊரானான மனுஷனுடைய பெயர் மனோவா, அவன் மனைவி பிள்ளைப்பெறாத மலடியாயிருந்தாள்.  கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்கு தரிசனமாகி அவளை நோக்கி; இதோ, பிள்ளைப் பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப்பெறுவாய், 

ஆதலால் நியாயாதிபதிகள் 13:4-5 

ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

மேற்க்கூறிய பிரகாரம் கர்த்தருடைய தூதனானவர் அவளிடம் சொல்ல அவள் தன் புருஷனிடம் 

நியாயாதிபதிகள் 13:6-7 

அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் அவளிடம் கர்த்தருடைய தூதன் சொல்லும் போது புருஷனாகிய மனோவா அவளோடுக்கூட இல்லாமலிருந்தான். அதனால் அவள் சொல்வதை கேட்ட மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்க போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்கு கற்ப்பிப்பீராக என்று வேண்டிக்கொண்டபடியினால்  தேவன் மனோவாவின் சத்தத்திற்கு செவிக்கொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும் போது தேவனுடைய தூதனானவர் மீண்டும் அவளிடத்தில் வந்தார் ; அப்பொழுது அவளுடைய புருஷனாகிய மனோவா அங்கு இல்லை.  

ஆகையால் அந்த ஸ்திரீ நியாயாதிபதிகள் 13:11-16 

அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.

அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

இந்த வசனங்கள் என்னவெனில் மனோவா தேவதூதனிடம் பேசுவதும், தன்னுடைய சந்தேகத்தை மாற்றுவதும்,அந்த வார்த்தை நிறைவேறும் போது, அதனை எப்படி வளர்க்க வேண்டும் என்று கேட்கும்போது தேவதூதன், நான் ஸ்திரீயோடு சொன்ன யாவற்றிற்கும் எச்சரிக்கையாயிருப்பதும், மேலும் திராட்ச செடியில் உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்ச  ரசமு்ம் மதுபானமும் குடியாமலும், தீட்டுள்ளதொன்றும் புசியாமலும், நான் அவளுக்கு கட்டளையிட்டதெல்லாம் கைக்கொள்ள வேண்டும் என்கிறான். அதற்கு மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்துக்கொண்டு வருமட்டும் இரு என்றான்.  

அதற்கு கர்த்தருடைய தூதன் நியாயாதிபதிகள் 13:16 

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

இப்படியாக கர்த்தருடைய தூதன் சொல்லும் போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும் போது நாங்கள் உம்மை கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்கும் போது, கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி: என் நாமம் என்ன என்று கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். மனோவா போய் வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டு வந்து அதை கன்மலையின் மேல் செலுத்தினான்.  அப்போது மனோவாவும், அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில் அதிசயம் விளங்கினது.  

பிரியமானவர்களே, மனோவாவின் மனைவியைக்குறித்து கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறாரென்றால் இஸ்ரவேலர் பொல்லாப்பானவைகளை செய்ததால் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் நாற்பது வருஷம் ஒப்புக்கொடுக்கிறார்.  இவை எவற்றைக்குறித்து காட்டுகிறது என்றால், ஆத்துமாவின் சிறையிருப்பு. ஆனால் இந்த சிறையிருப்பிலிருந்து ஆத்துமா விடுதலையாக வேண்டுமானால் இரட்சிப்பு அவசியம்.  இந்த இரட்சிப்பு என்னவென்றால், காணாத ஒன்றை விளங்க செய்வது, அது தான் அதிசயம். மேலும்  அதற்கு தான் நசரேயனாகிய இயேசு வருவதற்கு முன்பாக கர்த்தர் மனோவாவின் மனைவியில் ஒரு நசரேய விரதத்தோடு ஒரு குமாரனை உற்பத்தியாக்கி, அவளும் தீட்டானதொன்றும் புசிக்காகபடி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி கட்டளையிடுகிறார்.  ஏனென்றால் ஆத்துமா இரட்சிப்பின் பிறகுதான் பெலிஸ்தரை மேற்க்கொள்ள முடியும் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இந்த ஆத்துமா இரட்சிப்பானது நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தேவசபையில் தான் (வயல் வெளியில்) கர்த்தர் தம்முடைய தூதனை மனோவாவின் மனைவியிடத்தில் அனுப்புகிறார்.  

அவ்விதம் கர்த்தர் அவர்களை எப்படி இரட்சித்தார் என்றால், அவர்கள் கர்த்தரின் தூதனிடத்தில் உம்முடைய நாமம் என்ன என்று கேட்ட போது, அவர் சொன்னது, அவர் நாமம் அதிசயம்,  அப்போது மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும், கொண்டு வந்து , அதை கன்மலையின் மேல் கர்த்தருக்கு செலுத்தினான்; அப்போது அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் அதிசயம் விளங்கியது.  இவையென்னவென்றால் நம் ஆத்துமா கர்த்தருக்காய் சமர்பிக்கப்பட்டு, அவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் போது அவர் நம்மை இரட்சிக்கிறார்.  மேலும் இரட்சிக்கப்பட்ட நாம் கர்த்தர் சொன்ன தீட்டுள்ள ஒன்றும் புசிக்காமல் இருப்போமானால் நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சியில் நாம் பரிசுத்தமாக வாழமுடியும்.  அல்லாமலும் நாம் நம்முடைய சிறையிருப்பிலிருந்து விடுதலை ஆக முடியும்.   இவ்விதமாக நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்பை கிறிஸ்துவினால் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.