தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 50: 23

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு எப்போதும் கீழ்படிகிறவர்களாக இருப்போமானால் நாம் செலுத்துகிற பலியை ஏற்றுக்கொள்வார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்பும், அதன் மூலம், நாம் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதன் திருஷ்டாந்மும் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 13:20-23  

அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

இந்த வசனங்களில் நாம் தியானிப்பது என்னவெனில் மனோவா கர்த்தருக்கு செலுத்தின பலிகளில் அதிசயம் விளங்கினது என்பதனை நாம் பார்க்கிறோம்.  அப்போது அக்கினி ஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்துக்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதனை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.  பினபு கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு காணப்படவில்லை; அப்பொழுது கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து, தன் மனைவியை பார்த்து, தேவனை கண்டோம் சாகவே சாவோம் என்றான்.  

பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும் போது மனோவா செலுத்தின பலிகளில் கர்த்தர் பிரியமாயிருந்து போல நாம் கர்த்தருக்கு செலுத்துகிற பலிகளில் அவர் பிரியமாயிருக்க வேண்டுமானால் கர்த்தருடைய தூதன் சொன்ன எல்லவாற்றிற்கும் அவர்கள் கீழ்படிந்து, அவற்றின் படியெல்லாம் செய்து தங்களை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்து, பலிசெலுத்தினது போல் நாமும் செய்வோமானால் நம் உள்ளத்திலும் அதிசயம் விளங்கும், அது மட்டுமல்ல அவரை நாம் நம்முடைய ஆத்மீக கண்ணால் பார்ப்போம்.  நாம் அவரை பார்ப்போமானால் ஆத்துமா   என்றென்றைக்கும் மரியாமலும் இருக்கும். இதனை கர்த்தர் மனோவா மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், அவன் தன் மனைவியை பார்த்து: நாம் தேவனை கண்டோம், சாகவே சாவோம் என்றான்.  அதற்கு அவன் மனைவி கர்த்தர் நம்மை கொன்று போட சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகன பலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்,இவைகளையெல்லாம் காண்பிக்கவும் மாட்டார், இவைகளையெல்லாம் அறிவிக்கவும் மாட்டார் என்றாள்.  இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால், கர்த்தருக்கு நாம் ஸ்தோத்திரபலியை செலுத்தும் போது, அவர் சத்தத்துக்கு எப்போதும் தாழ்மைப்பட்டு கீழ்படிந்தால் மட்டுமே கர்த்தர் நாம் செலுத்துகிற பலியை ஏற்றுக்கொள்வார்.  

மேலும் அவ்விதம் ஏற்றுக்கொண்டால்  நம்முடைய ஆத்துமா அவரோடுகூட பிழைத்திருக்கும்.  இதனை திருஷ்டாந்தபடுத்தி  

நியாயாதிபதிகள் 13:24  

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

மேற்கூறிய வசனங்கள் அந்த ஸ்திரீ  ஒரு குமாரனை பெற்று, அவனுக்கு சிம்சோன் என்று பேரிட்டான்; அந்ந பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.  இதன் விளக்கம் ஆத்துமாவின் இரட்சிப்பை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது.  இவ்விதம் பெற்ற இரட்சிப்பை நாம் காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.