தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 76: 10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பெலிஸ்திய கிரியைகளுக்கு நம்மை விலக்கி இரட்சித்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பெலிஸ்திய கிரியைகளாகிய இச்சைகளிலிருந்து நாம் விடுதலையாகி இரட்சிக்கபட வேண்டும் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 14:12-20
சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.
அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.
அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று.
ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம்பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.
அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.
சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
இந்த வசனங்களில் சிம்சோனிடத்தில் முப்பது தோழரை கொண்டு வந்தார்கள். அப்போது சிம்சோன் அவர்களிடம் ஒரு விடுகதையை அவர்களுக்கு சொல்லும்படியாக
நியாயாதிபதிகள் 14:12
சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சிம்சோன் அந்த முப்பது பேரிடமும் விடுகதையை விடுவித்தால் முப்பது துப்பட்டிகளையும், முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன், ஆனால் நீங்கள் விடுவிக்காதே போனால் நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும், முப்பது மாற்று வஸ்திரங்களையும் எனக்கு கொடுக்க வேண்டும் என்றான். அந்த விடுகதை பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்;
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட விடுகதைகள் என்னவென்றால் அங்கு வந்த வாலிபர்கள் பெலிஸ்தர்கள் என்பதும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாகவும், கர்த்தருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், இருக்கிறார்கள் என்பதை அறிந்த தேவன், சிம்சோனுடைய உள்ளத்தை ஏவதுவக்கினார். அல்லாமலும் அவர்களை அழித்து இஸ்ரவேலரை மீண்டு எடுக்கும்படியாக பெலிஸ்திய பெண் மேல் இச்சைகொள்ள செய்கிறார். என்னவென்றால் தேவனுடைய கிரியைகள் வெளிப்படுவதற்காகவே அவன் அந்த வழியாக வரும் போது பால சிங்கம் எதிர்படுகிறது. அப்படியாக பால சிங்கத்தை கிழித்தெறியும்படியான அபிஷேகம் சிம்சோனிடம் இருக்கிறது. அந்த அபிஷேகத்தினால் சிம்சோன் பால சிங்கம் கிழிக்கப்பட்டதினால், அங்கு தேனீ கூட்டமும் தேனும் இருக்கிறது.
இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால் நம்மில் பெலிஸ்தியரின் கிரியைகளை அழித்து, அவர்கள் மேல் ஆர்ப்பரிப்பின் சத்தம் தொனிக்கும் என்பதனைக் காட்டி, இவ்விதம் அந்த முப்பது பேரும் ஆவிக்குரிய ரகசியங்களை அறிந்துக்கொண்டால் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதும், இல்லா விட்டால் அதனை கர்த்தர் மற்றவர்களுக்கு கொடுக்கும்படியாக மாற்றுவார் என்பதும் புரிகிறது. ஆனால் அவன் ஏழு நாளைக்குள்ளாக விடுகதையை விடுக்க வேண்டும் என்று சொல்கிறான். ஆனால் அவர்களுக்கு மூன்று நாள்மட்டும் விடுவிக்கக்கூடாமற் போயிற்று. ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியை பாரத்து; உன் புருஷன் அந்த விடுகதையை விடுக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு, இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப் போடுவோம். எங்களுக்குள்ளவைகளை பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர் என்றார்கள்.
அப்போது சிம்சோனின் பெண்ஜாதி அவனுக்கு முன்பாக அழுது
நியாயாதிபதிகள் 14:16-17
அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
மேற்க்கூறிய பிரகாரம் அவள், அவனை நயங்காட்டி வஞ்சித்ததால் அந்த விடுகதையை விடுத்தான்; அப்போது அவள் அதனை தன்னுடைய ஜனங்களுக்கு விடுத்தாள். ஏழாம் நாளிலே பொழுது போகும் முன்னே அவர்கள் தேனை பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானது என்ன சொன்னார்கள். அதற்கு அவன் நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால் கண்டு பிடிப்பதில்லை என்றான். அப்போது அவன் மேல் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினதினால் அவன் அஸ்கலோனுக்கு போய் முப்பது பேரை கொன்று, அவர்களுடைய மாற்று வஸ்திரங்களை உரிந்துக்கொண்டு , விடுகதையை விடுத்தவர்களுக்கு கொடுத்து, கோபமூண்டவனாய் புறப்பட்டு தன் தகப்பன் வீட்டுக்கு போகிறான். சிம்சோனின் பெண்ஜாதியோவெனில் அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாள்.
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வசனங்களின் விளக்கம் என்னவெனில் கர்த்தர் இஸ்ரவேலை பெலிஸ்தரின் கையிலிருந்து எப்படி விடுவித்து இரட்சிக்கிறார் என்பதை சிம்சோனும்அவனுடைய கண்ணின் இச்சையினால் வந்த பெலிஸ்திய பெண்ஜாதி, எவ்விதத்தில் இஸ்ரவேலனை வஞ்சிக்கிறாள் என்பதும், வஞ்சிக்கப்பட்ட இஸ்ரவேலனை எப்படி அந்த ஸ்திரீயினிடத்திலிருந்து விடுவித்தார் என்பதும் புரிகிறது. ஆதலால் நம்முடைய ஆத்துமாவை பெலிஸ்திய கிரியைகளுக்கு எப்போதும் விலக்கி காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.