யாக்கோபு என்னும் சந்ததி- விளக்கம்:

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
May 30, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக


உபாகமம் 30:19, 20

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, 

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை  உங்களனைவரோடுங் கூட இருப்பாதாக. ஆமென்.

அல்லேலுயா.


யாக்கோபு என்னும் சந்ததி- விளக்கம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  

யாக்கோபு என்னும் சந்ததி என்று சொல்லப்படுவது தேவனுடைய சபையை காட்டுகிறது. அந்த யாக்கோபு என்னும் சந்ததி கர்த்தரால் ஆசீர்வாதத்தையும் தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

 யாக்கோபை தேவன் ஆசீர்வதிக்கிற திருஷ்டாந்தம்  என்னவென்றால் யாக்கோபு சமைத்து கொண்டு வந்ததை கிட்ட கொண்டு வா என்று சொல்லி அதை வாங்கி புசித்தான்; பிற்பாடு,திராட்சரசம்  குடிக்கக் கொடுத்து அவன் குடித்தான்.

 பின்பு ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசா  என்று நினைத்து யாக்கோபை  நீ கிட்ட வந்து முத்தஞ்செய் என்றான். 

ஆதியாகமம் 27:27-29

அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. 

தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. 

ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். 

இவ்விதமாய் ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கிறான்.  ஆசீர்வதித்து முடிந்த பிறகு யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமூகத்தை விட்டுப்  புறப்பட்டவுடனே அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.  வேட்டையாடிக் கொண்டு வந்ததை ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் கொண்டுவந்து,  தகப்பனிடத்தில் உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி,  என் தகப்பனார் எழுந்திருந்து உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டு வந்ததை புசிப்பாராக என்றான். 

ஆதியாகமம் 27:32, 33

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான். 

அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான். 

அதற்கு ஏசா என்னையும் ஆசீர்வதியும் என்று உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான். 

ஆனால்  ஈசாக்கு, உன் சகோதரன் தந்திரமாய் வந்து உன்னுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டான் என்றான். 

அதற்கு ஏசா இதோ இரண்டு தரம் என்னை மோசம் போக்கினான் என் சேஷ்டபுத்திர பாகத்தை பெற்றுக்கொண்டான். இப்போது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக் கொண்டான் என்று சொல்லி, தன் தகப்பனை நோக்கி நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைக்கவில்லையா என்றான். 

அப்பொழுது ஈசாக்கு,  ஏசாவை நோக்கி அவனை உனக்கு எஜமானாக வைத்தேன். அவன் சகோதரர் எல்லாரையும்  அவனுக்கு ஊழியக்காரராக கொடுத்து அவனை தானியத்தாலும் திராட்சரசத்தாலும்  ஆதரித்தேன்,  இப்போது என் மகனே நான் உனக்கு என்ன  செய்வேன் என்றான்.

அதற்கு ஏசா இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா  உண்டு என்று கேட்டு என்னையும்  ஆசீர்வதியும் என்று சத்தமிட்டு அழுதான்.


ஆதியாகமம் 27:39, 40

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். 

உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான். 

இவ்விதமாக யாக்கோபை, தன்  தகப்பன் ஆசீர்வதித்தனிமித்தம் ஏசா  யாக்கோபை பகைத்து என் தகப்பனுக்காக துக்கிக்கும்  நாட்கள் வரும்,  அப்போது அவனைக் கொன்று போடுவேன் என்று ஏசா  தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.

இவற்றிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் நாம் தேவனிடத்தில் ஆசீர்வாதத்தை ஏற்ற  வேளையில் பெற்றுக்கொள்ள முந்திக் கொள்ள வேண்டும்  என்பதை நமக்கு யாக்கோபை வைத்து தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  கிறிஸ்துவாகிய மணவாட்டி சபை மூலம் தான் நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியும்.  யாக்கோபு என்னும் சந்ததி என்று சொல்வது மணவாட்டி சபை என்றும் நாமும் மணவாட்டியாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துக் காட்டுகிறது.  மேலும் நம் ஆத்துமா தேவனுக்கு முன்பாக ருசியுள்ள பதார்த்தங்களாக,   நம்முடைய எல்லா செயல்களிலும்,  ஆட்டுக்குட்டியானவருடைய எல்லா நற்கிரியைகளிலும்  நாம் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும்.  அவ்விதமாக நாம்  இருப்போமானால் சபையை  தேவன் தானியத்தாலும்,  திராட்சரசத்தினாலும்  ஆசீர்வதிக்கிறார்.  இவ்விதமாக நாம்  கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்தால்  மாத்திரமே தேவன் நம் ஒவ்வொருவரையும் மணவாட்டிசபையாக்குகிறார்.  நம்மையும் அவ்விதமே கிருபையினாலும்,  மகிமையினாலும் நிரப்புவார் என்பதற்காக தேவன் ஈசாக்கு,  யாக்கோபை வைத்து நம்மை திருஷ்டாந்தபடுத்துகிறார்.  மேலும் தானியத்தால்  நிறைந்ததாகவும் நாம் காணப்படுவோமானால் மென்மேலும் நம் சாட்சியினால் தேவன் நம் மூலம் அநேக ஆத்துமாக்களை ஆதாயபடுத்துவார்.  அதன் மூலம் தேசங்களில் சபைகள் பெருகிக்கொண்டேயிருக்கும் என்பதை தேவன் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.   அப்பொழுது அநேக ஜனங்கள் வந்து கர்த்தரை சேவித்து தொழுது கொள்வார்கள் என்பதையும் தேவன் யாக்கோபை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  சபையில் வைத்து தான் தேவன் இஸ்ரவேலை  ஆசீர்வதிக்கிறார்.  சபையில் தான் ஆசீர்வாதமும் சாபமும் இருக்கிறது என்பதையும் காட்டுகிறார். 

ஏனென்றால் ஈசாக்கு யாக்கோபிடத்தில்  உன்னை சபிக்கிறவர்களை சபிக்கப்பட்டவர்களாகவும் உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும்  இருப்பார்கள் என்கிற காரியம் என்னவென்றால் நாம் தேவனுடைய சத்தத்தை கேட்டு கீழ்ப்படிவோமானால் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.  தேவனுடைய வார்த்தைகளுக்கு  கீழ்ப்படியாதவர்களை தேவன் சபிக்கிறார். 

அதைத்தான் 

உபாகமம் 27:16

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 

ஏனென்றால், 

உபாகமம் 27:10-15

ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான். 

மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி: 

நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 

சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 

அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து: 

கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 

இதனை வாசிக்கிற அன்பான தேவ ஜனமே,  நாம் சிந்திக்க வேண்டும்.  நமக்கு எப்படிப்பட்ட ஜீவிதம் இருந்தால் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்,  யாரை தேவன் சபிக்கிறார்.  மேலும் யார் தேவனை (சபையை) ஆசீர்வதிப்பது (கீழ்ப்படிகிறவர்கள்)  யார். தேவனை (சபையை) சபிப்பது(கீழ்ப்படியாதவர்கள்).  

மேலும், நீதிமொழிகள் 30:11

தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. 

ஏனென்றால் யாக்கோபு இஸ்ரவேல் என்ற பெயரை பெற்றுக்கொள்கிறான். இதற்கு காரணம் யாரென்றால் அவனை பெற்ற தாயாகக் காணப்படுகிறான். யாக்கோபு பெற்ற ஆசீர்வாதம் தன் தாயினால் சம்பவிக்கிறது. மேலும் அவள் ஏசாவின் வயல் வெளி வாசனை இருந்த நல்ல வஸ்திரத்தை எடுத்து யாக்கோபுக்கு உடுத்தியதால் மேலான  ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறான். அதுபோல நம்முடைய வஸ்திரத்திலும்  கர்த்தருக்காய் வேலை செய்கிற வாசனை தேவன் பார்க்கிறார்.  தேவன் நம்மை முகர்ந்து பார்ப்பார்.  நாம்  குமாரனாகிய நம்முடைய கிறிஸ்துவை முத்தம் செய்ய வேண்டும்.  என்பதற்காகவும் அங்கு முத்தத்தை  காட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  நாம் கிறிஸ்துவை முத்தம் செய்வது சபை ஒரு மனதோடு இருக்க வேண்டும்.  முத்தம் பற்றிய விளக்கம் நாளை பார்ப்போம். 

ஜெபிப்போம்

கர்த்தர் ஆசீர்வதிப்பாராக


                                                                                                                                                                                                                                                                            - தொடர்ச்சி நாளை