தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 94: 23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பெலிஸ்தரின் கிரியைகளை அழிக்கும் வரையிலும், கர்த்தர் நம்மில் கிரியை நடப்பிப்பார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பெலிஸ்திய கிரியைகளில் சிக்கிக் கொள்ளாதபடி நம்மை விலக்கி இரட்சித்துக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.
அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
நியாயாதிபதிகள் 15: 1- 5
சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்: நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:
நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான்.
அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,
பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப்போட்டான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது சிம்சோனின் பெண்சாதி, அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். மேலும் சில நாளுக்கு பின்பு சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியை காணப்போய், நான் என் பெண்ஜாதியுடன் அறைவீட்டிற்குள் போகட்டும் என்ற போது, அவள் தகப்பன் அவனை போகவொட்டாமல், நீ அவளை முற்றிலும் பகைத்து விட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்கு கொடுத்து விட்டேன்; அவள் தங்கை அவளை காட்டிலும் அழகானவளல்லவா, அவளுக்கு பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்றான். அப்போது சிம்சோன் நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும் என் மேல் குற்றமில்லை என்று அவர்களுக்கு சொல்லி, புறப்பட்டு போய் முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒரு பந்தத்தை வைத்துக் கட்டி, பந்தங்களை கொளுத்தி பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்கட்டுகளையும் திராட்ச தோட்டங்களையும் ஒலிவதோப்புபளையும் சுட்டெரித்துப் போட்டான்.
பின்பு இப்படி செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது
நியாயாதிபதிகள் 15: 6
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
இந்த வசனங்களின் கருத்துகளோவெனில் காரியத்தை செய்தவன் சிம்சோன் தான் என்றும், அவன் எதற்காக செய்தான் என்றும் பெலிஸ்தர் அறிந்த போது அவளையும், அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். அப்பொழுது சிம்சோன் நீங்கள் இப்படி செய்தபடியால் நான் உங்கள் கையில் பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி, அவர்களை சின்னபின்னமாக சங்கரித்து, பின்பு போய் ஏத்தாம் ஊர் கன்மலை சந்தியிலே குடியிருந்தான்.
பிரியமானவர்களே இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் பெலிஸ்தரின் வெள்ளாண்மை, திராட்ச தோட்டங்கள், ஒலிவ தோப்புகள் இவைகளையெல்லாம் அழிக்கும்படியாக முகாந்தரம் உண்டாக்கினார் என்பது தெரியவருகிறது; அல்லாமலும் பெலிஸ்தருக்குள் ஒற்றுமையைக் குலைக்கிறார். அதுமட்டுமல்லாமல் பெலிஸ்தருடைய ஆராதனை ஸ்தலமாக நம் உள்ளம் மாறிவிடாதபடி பல முகாந்தரங்களை உண்டாக்கி நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதென்னவெனில் சிம்சோனுடைய பெண்ஜாதியையும், தகப்பனையும், அந்த பெலிஸ்தரே அக்கினியால் சுட்டெரிக்கிறதை பார்க்கிறோம்.
பிரியமானவர்களே பெலிஸ்திய கிரியைகளை நம்மை விட்டு மாற்றும் வரையிலும் கர்த்தரின் செயல் நடந்துக்கொண்டிருக்கும். ஆதலால் பெலிஸ்திய கிரியைகளை விட்டு விலகி கர்த்தரிடத்தில் அமர்ந்திருப்போம், அவர் நம்மை இரட்சிப்பார், ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.