தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 102: 19, 20

கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திலுள்ள சத்துருவின் கட்டுகள் அறுக்கபட, கர்த்தருடைய ஆவியானவர் நம்மேல் இறங்கவேண்டும், சோர்ந்து போகாமல் இருக்க ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கப்பட்டு, அவரோடு பிழைத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பெலிஸ்தரின் கிரியைகளை அழிக்கும் வரையிலும், கர்த்தர் நம்மில் கிரியை நடப்பிப்பார்.

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

நியாயாதிபதிகள் 15: 9 – 17

அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.

நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.

அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.

அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.

உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.

அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பேரிட்டான்.

மேற்கூறிய வசனங்களில் சிம்சோன், பெலிஸ்தியரை சின்னபின்னமாக சங்காரம் பண்ணின பின்பு, ஏத்தாம் ஊர் கன்மலை சந்தியில் குடியிருந்தான்.  அப்போது பெலிஸ்தர்  போய் யூதாவிலே பாளயமிறங்கி. லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.  அப்போது அவர்கள் நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள் சென்னது என்னவென்றால் சிம்சோன் எங்களுக்கு செய்தது போல நாங்களும் அவனுக்கு செய்யும் படி அவனை கட்டுவிக்க வந்தோம் என்றார்கள்.  அப்போது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம்  ஊர் கன்மலை சந்திற்கு சிம்சோனிடத்தில் வந்து, பெலிஸ்தியர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை`ஏன் எங்களுக்கு இப்படி செய்தாய் என்று கேட்கும்போது, அவன் சொல்கிறான், அவர்கள் எனக்கு செய்தபடியே நானும் செய்தேன் என்கிறான்.  அப்போது அவர்கள் சொல்வது உன்னை கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புப்கொடுக்க வந்திருக்கிறோம் என்றதற்கு, சிம்சோன் சொல்வது, நீங்கள் என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.  

அப்படி அவர்கள் சொன்னது, உன்னை இறுகக்கட்டி அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமேயல்லாமல் , உன்னை கொன்று போடமாட்டோம் என்றார்கள்.  அப்படியாக அவர்கள் இரண்டு புது கயிறுகளாலே அவனை கட்டி, கன்மலையிலிருந்து கொண்டு போனார்கள்.  அவன் லேகி வரைக்கும் சேர்ந்த பின்பு, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாக ஆரவாரம்பண்ணினார்கள்.  அப்போது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால் அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல் போலாகி, அவன் கட்டுகள் அவன் கையிலிருந்து அறுந்து போயிற்று.  அப்போது அவன் கழுதையின் தாடை எலும்பை கண்டு, தன் கையை நீட்டி அதனை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுப்போட்டான்.   அப்போது சிம்சோன் சொன்னது கழுதையின் தாடை எலும்பினால்  பெலிஸ்தர்கள் குவியல், குவியலாக பட்டு கிடக்கிறார்கள்,  கழுதையின் தாடை எலும்பினால் ஆயிரம் பேரை கொன்றேன் என்றான் அதன்பின்பு அதனை எறிந்து விட்டு , அந்த இடத்திற்கு ராமாத் லேகி என்று பேரிட்டான்.  

பின்பு அவன் கர்த்தரை நோக்கி நியாயாதிபதிகள் 15:18-20 

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

மேலும் சிம்சோன் தாகமடைந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறான், தேவரீர் உமது அடியேன் கையினால் இந்த பெரிய இரட்சிப்பை கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் செத்து விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையினால் விழ வேண்டுமோ என்ற போது, கர்த்தர் லேகியிலுள்ள பள்ளத்தை பிளந்தார்; அப்போது தண்ணீர் ஓடி வந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அப்போது பிழைத்தான்.  அந்த இடத்திற்கு எந்நகோரி என்று பெயரிட்டான்.  அது இந்நாள் வரைக்கும் லேகியில் இருக்கிறது..  அப்படியாக பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.  

பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட பகுதிகளை நாம் வாசிக்கும் போது, நாம் எப்படி பெலிஸ்திய ஆவியாகிய இச்சைகளிலிருந்து விடுதலைப்பெற வேண்டும் என்பதும், அந்த ஆவி எப்படியெல்லாம் நம் உள்ளத்தோடு போராடும் என்பதும்,  ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் நம்மேல் பலமாய் இறங்கினால் சத்துரு கட்டியிருக்கிற கட்டுகள் எல்லாம்  அறுக்கப்படும்.  பின்பு நாம் நம்முடைய ஆத்துமாவின் பெலத்தோடு கர்த்தரை ஆராதிக்கும் போது, அதனை சார்ந்த பெலிஸ்திய கிரியைகளை ஆயிரகணக்கில் நம்மில் இருக்கிற கிறிஸ்து அழிப்பார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறது.  ஆனால் நாம் சோர்வடையாதபடி மீண்டும் கர்த்தரை நோக்கி கூப்பிடுவோமாகில் கர்த்தர் நமக்கு கிறிஸ்துவினால் ஜீவ தண்ணீரை நாம் பருகும் படி செய்து, நம் தாகத்தை தீர்த்து, நம்மை கிறிஸ்துவோடு பிழைக்கப்பண்ணுகிறார். 

இந்த காரியங்கள் இப்போதும் நம்மில் இருக்கிறதுமல்லாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை நியாயம் விசாரிக்கிறவராயிருக்கிறார் என்பதன் திருஷ்டாந்தம் தான் சிம்சோன்.  ஆனால் அவனால் நிலைத்திருக்கக்கூடாததாய் போயிற்று.  ஆனால் கிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவராயிருக்கிறார்.  இவ்விதமாக பெலிஸ்திய ஆவியிலிருந்து தப்புவிக்கப்படும் படியாக நம்மை கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.