தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 38: 20, 21
நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்தும பெலனை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திலுள்ள சத்துருவின் கட்டுகள் அறுக்கபட, கர்த்தருடைய ஆவியானவர் நம்மேல் பலமாய் இறங்க வேண்டும், நாம் சோர்ந்து போகாமல் இருக்க ஜீவதண்ணீரால் நிறைந்து, தாகம் தீர்க்கப்பட்டு அவரோடு பிழைத்திருக்கிருக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது
நியாயாதிபதிகள்16: 1- 9
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.
அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள்.
சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.
அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.
அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.
மேலும் சிம்சோன் இருபது வருஷம் இஸ்ரவேலை நியாயம்விசாரித்த பின்பு சிம்சோன் காசாவுக்கு போய் அங்கே ஒரு வேசியை கண்டு அங்கே போனன். அப்போது சிம்சோன் அங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊருக்கு அறிவிக்கப்பட்ட போது, காலையில் வெளிச்சமாகிறபோது அவனை கொன்று போடுவோம் என்று சொல்லி இராமுழுதும் அவனை வளைந்துக்கொண்டு பட்டணவாசலில் பதிவிருந்து பேசாமலிருந்தார்கள். ஆனால் சிம்சோன் நடுராத்திரி மட்டும் படுத்திருந்து, பின்பு எழுந்திருந்து பட்டண வாசல் கதவுகளையும், அதின் நிலைகள் இரண்டையும் பினித்து, தாழ்பாளோடே பேர்த்து தன் தோளின் மேல் வைத்துக்கொண்டு எபிரோனுக்கு எதிரே இருக்கிற மலையின் உச்சிக்கு சுமந்துக்கொண்டு போனான்.
பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அப்போது பெலிஸ்தியரின் அதிபதிகள் அவளிடத்தில் போய், நீ அவனை நயம் பண்ணி அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறதென்றும், நாங்கள் அவனை கட்டி சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துக்கொள்: அப்போது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்கு கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் அவர்கள் சொன்னபடியே கேட்கிறாள். அதற்கு சிம்சோன் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி மற்ற மனுஷனை போலாவேன் என்றான். அப்படியே அவள் அதனை பெலிஸ்தரின் அதிபதிகளிடத்தில் அறிவிக்க அவர்கள் ஏழு உலராத பச்சையான அகணி நார் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டு வந்தார்கள்; அவைகளால் அவள் அவனை கட்டினாள். பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும் போது, அவள் சிம்சோனே பெலிஸ்தர் உன் மேல் வந்து விட்டார்கள் என்றாள். அப்பொழுது சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறது போல அவன் அதனை அறுத்து விட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.
பிரியமானவர்களே, நாம் இரட்சிக்கபட்டும், நம்முடைய உள்ளம் எவ்விதம் வேசியினிடத்தில் இழுத்து செல்லுகிறது என்றும், அதில் அடைக்கப்பட்ட நம்மை கர்த்தர் தம்முடைய பெலனால் சத்துருவின் கோட்டையை தகர்த்து வெளியில் கொண்டு வருகிறார் என்பதும், மற்றும் நம்முடைய ஆத்துமாவின் பெலனை குறைக்கும்படியாக பெலிஸ்திய ஆவிகளாகிய சத்துருக்கள் தந்திரம் ஒருக்குகிறதையும் வாசிக்கிறோம். மேலும் தெலீலாள் இப்போதும் அநேகரை வஞ்சிக்கிறாள். ஆதலால் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து நம்முடைய ஆத்ம பலத்தை சத்துருவின் கையில் கொடாதபடி காக்க வேண்டும். அந்த ஆத்துமாவின் பலம் நமக்கு வசனம் கைக்கொள்ளும் போது கிடைக்கும். மேலும் நம்முடைய ஆத்ம பெலம் குறையாதபடி, நமக்குள் எந்த நயமான பேச்சுக்கோ, சொல்லுக்கோ, செயலுக்கோ இடம் கொடாதபடி, அனுதினம் கர்த்தருடைய வசனத்தால் நாம் சுத்தமாகி,தேவ பெலனை ஆத்துமாவில் தரித்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.