தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 37: 40
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் வேசிதன ஆவியிடத்தில் சிக்கிக்கொள்ளாதபடி நம்மை பாதுகாக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்தும பெலனை காத்துக்கொள்ள வேண்டும் என்பதும், ஏனென்றால் சிம்சோன் முதலாம் முறை கட்டபட்ட போது, அந்த கட்டை அவன் அற்றுப்போகப்பண்ணினதின் ரகசியத்தை யாரும் அறியாமலிருந்தார்கள் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது
நியாயாதிபதிகள் 16: 10 - 14
அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.
அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான்.
இரண்டாம் முறையாக தெலீலாள் சிம்சோனிடம் சொல்வது; இதோ என்னை நீ பரியாசம் பண்ணி, எனக்கு பொய் சொன்னாய்,இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்கு சொல்ல வேண்டும் என்றபோது, சிம்சோன் இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புது கயிறுகளால் என்னை கட்டினால் நான் பலட்சயமாகி மற்ற மனுஷனை போலாவேன் என்று சொல்கிறான். அப்போது தெலீலாள் புதுகயிறுகளை வாங்கி, அவனை கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன் மேல் வந்து விட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள். ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப் போட்டான்.
மூன்றாவதாக தெலீலாள் முந்தினது போல் அவனிடத்தில் கேட்கிறாள். அதற்கு அவன் அவளிடம் நீ என் தலைமயிரில் ஏழு ஜடைகளை நெசவு நூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான். அப்போது அவள் அப்படியே செய்து அவைகளை ஆணியடித்து மாட்டி;சிம்சோனே பெலிஸ்தர்கள் உன் மேல் வந்து விட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல் பாவையும் கூடப் பிடுங்கிக் கொண்டு போனான்.
அப்பொழுது அவள் நியாயாதிபதிகள் 16:15
அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம்பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,
மேற்க்கூறிய வசனபிரகாரம் தினம்தினம் அவள் அவனை வார்த்தைகளினால் நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால் அவன் சாகதக்கதாய் அவன் ஆத்துமா விசனப்படுகிறது.
பிரியமானவர்களே இதனை கர்த்தர் எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் சிம்சோனை தெலீலாள், பெலிஸ்தருக்காக மூன்று முறை நெருக்குகிறாள். இதன் காரணம் என்னவென்றால் வேசிதன ஆவி அவனில் கிரியை செய்கிறது. ஆதலால் அவனுடைய ஆத்துமா சத்துருவின் கையில் சிக்குண்டு வெளியே வரமுடியாமல் திகைக்கிறான். காரணம் அவனுடைய பெலன் எதனால் வந்தது என்பதை பெலிஸ்தியர்கள் அறியாமல் இருக்கிறார். ஆனால் தெலீலாளை கொண்டு அறிய விரும்புகிறார்கள். அதனை அறிந்த சிம்சோன் அவளிடத்தில் மூன்று முறையும் வெளிப்படுத்தவில்லை.
மேலும் பிரியமானவர்களே ஆவிக்குரிய ரகசியங்களை நாம் பகிரங்கமாக்ககூடாது என்பதற்காக சிம்சோனை எடுத்துக்காட்டாக திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் பகிரங்கமாக்கினால் சத்துருவானவன் அதனை வளரவிடாதபடி தடுத்துக்கொள்வான். ஆதலால் நாம் யாவரும் ஆவியில் விழாமல் இருக்க கர்த்தர் நமக்கு தந்த ஆசீர்வாதமாகிய தேவ பெலன் ரகசியமாக காத்துக்கொள்ளவேண்டும். இவ்விதம் ரகசியமாக பாதுகாக்கும்படியாக, வேசியின் கிரியையில் விழாதபடி காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.