தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 25:20
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, வேசியினால் விசனப்பட்டு வீழ்ந்து போகாதபடி எச்சரிப்போடு காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் வேசிதன ஆவியால் சிக்கிக்கொள்ளாதபடி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 16: 16
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது தெலீலாள் சிம்சோனை அனுதினம் தன் வார்த்தைகளால் அலட்டிக்கொண்டிருந்ததால், அவன் சாகதக்கதாய் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்துகிறான்
நியாயாதிபதிகள் 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
அவ்விதம் தன்னுடைய பலம் இருக்கிற இடம் சொன்னவுடனே தெலீலாள்
நியாயாதிபதிகள் 16:18
அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.
அவ்விதம் அவள் பெலிஸ்தரிடத்தில் ஆள் அனுப்பி அறிவிக்கிறாள்; அப்போது பெலிஸ்தலின் அதிபதிகள் தங்கள் கையில் வெள்ளி காசுகளை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவள் அவனை என்ன செய்கிறாள் என்றால்
நியாதிபதிகள் 16: 19, 20
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டுள்ளவைகள், அவனிடத்தில் அவள் பெலிஸ்தர்கள் உன்மேல் வந்திருக்கிறார்கள் என்று சொல்ல அவன் எப்போதும் போல அவன் உதறி விட்டு போவேன் என்று சொல்கிறான். அவ்விதம் அவன் சொன்ன காரணம், அவன் அவள் மடியில் படுத்து நித்திரை செய்யும் போது ஒருவனை அழைத்து தலைமயிரின் ஏழு ஜடைகளை சிரைப்பித்து, அவனை சிறுமைப்படுத்த தொடங்கின போது, கர்த்தர் அவனை விட்டு நீங்கினதை அவன் உணராமலிருந்தான். ஆதலால் அவன் அவ்விதம் சொன்னான்.
பிரியமானவர்களே பெலிஸ்திய ஆவிகளாகிய வேசியின் ஆவி, நம் மனதை கட்டுகிற விதத்தை, சிம்சோனை வைத்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால், நாம் இஸ்ரவேலராக இருந்தாலும் நம்முடைய கைகளின் கிரியைகள் சுத்தமுள்ளதாக இருக்க வேண்டும். காரணம் நாம் பூமியிலிருந்துண்டானவர்கள். ஆனால் கா்த்தரோ வானத்திலிருந்து வந்தவர் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். நம்முடைய தேவன் நம்முடைய கைகளின் சுத்தத்திற்கு தக்க நமக்கு சரிக்கு சரிகட்டுகிறவராயிருக்கிறார். வேசியானவள் எப்போதும் நம்மை வஞ்சிக்கும் படியாக வகை தேடுவாள். ஆனால் நாமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் அவளுக்கு இடம் கொடுப்போமானால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உயிரோடே விழுங்குவாள். பாதாளம் விழுங்குவது போல் நம்மை உயிரோடே விழுங்குவார்கள். அவ்விதம் அவளுடைய வலையில் சிக்குண்டு விட்டால். கர்த்தர் நமக்கு தெரியாமலே நம்மை விட்டு போய் விடுவார்.
ஆதலால் பிரியமனவர்களே நாம் வேசிதன ஆவியிடத்தில் சிக்காத படி நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ளவேண்டும். அவ்விதம் நாம் காத்துக்கொள்ளும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.