தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 37: 14

சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கண்ணின் இச்சையினால் வீழ்ந்து, தாகோனுக்கு பலிபீடம் கட்டாதபடி ஜாக்கிரதையாக இருப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, வேசியினால் விசனப்பட்டு வீழ்ந்து போகாதபடி எச்சரிப்போடுக்கூட காணப்பட வேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 16: 20 - 25

அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

அவன் தலைமயிர் சிரைக்கப்பட்டபின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.

பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடி வந்தார்கள்.

ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, தெலீலாள் என்ற வேசியினால் சிம்சோன் விசனப்பட்டு, தன்னிலுள்ள பெலன் எதில் இருக்கிறது என்பதை, தன் இருதயத்தில் உள்ள யாவையும் அவளுக்கு வெளிப்படுத்தினதால், அவள் அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனை சிறுமைபடுத்த தொடங்கின போது, கர்த்தர் அவனை விட்டு விலகினதை அறியாமல் இருந்த சிம்சோன், நித்திரை விட்டு எழும்பின போது , அவள் சிம்சோனிடம் பெலிஸ்தர் உன்மேல் வந்திருக்கிறார்கள் என்ற போது, முன் போல உதறி விட்டு போவேன் என்று அவன் சொன்னாலும், பெலிஸ்தர் அவனை பிடித்து இரண்டு கண்களை பிடுங்கி, அவனை காசாவுக்கு கொண்டு போய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்கு போட்டு சிறைசாலையிலே மாவரைத்துக் கொண்டிருக்க வைத்தார்கள்.  அவன் தலை மயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும்  முளைக்கத் தொடங்கிற்று.  

அப்போது பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றுச் சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிக்கொண்டர்கள்.  சிம்சோனுக்கு இவ்விதம் நடந்ததை கண்ட ஜனங்கள், நம்முடைய தேசத்தை பாழாக்கி, நம்மில் அநேகரை கொன்றுப்போட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனை புகழ்ந்தார்கள்.  இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும் போது, சிம்சோனை நம் நடுவில் வேடிக்கை காட்டும்படிக்குக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்.  அவர்களுக்கு முன்பாக அவனை சிறைசாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்.  அப்போது அவன் வேடிக்கை காட்டினான்.  அவனை தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.  

அப்போது சிம்சோன் செய்தது 

நியாயாதிபதிகள்16: 26-30 

சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.

அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,

சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது சிம்சோன், அவனை வேடிக்கை பார்க்கும் படி புருஷர்களும், ஸ்திரீகளும் ஏறக்குறைய மூவாயிரம் பேர், பெலிஸ்தரின் பிரபுக்களுமாக வீடு நிறையப்பட்டிருந்தது.  அப்போது அவன் கைலாகு கொடுக்கிற பிள்ளையாண்டானோடே வீட்டை தாங்கி நிற்கிற தூண்களோடே நான் சாய்ந்து நிற்கும்போதே நான் தடவி பார்க்கட்டும் என்றான்.  அப்போது சிம்சோன் கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டு: நான் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய் பெலிஸ்தர் கையில்  பழிவாங்கும் படி, இந்த ஒரே விசை மாத்திரம் என்னை நினைத்தருளும், என்னை பலப்படுத்தும் என்று சொல்லி 

நியாயாதிபதிகள் 16:31 

பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.

இந்த வசனங்கள் நாம் தியானிக்கும்போது, சிம்சோன் உயிரோடிருக்கும் போது கொல்லப்பட்டவர்களை பார்க்கிலும், அவன் சாகும் போது கொல்லப்பட்டவர்கள் அதிகம் பேராயிருந்தார்கள்.  

பிரியமானவர்களே, இந்த வார்த்தைகளை தியானிக்கும் போது சிம்சோன் உயிரோடு இருக்கும் போது கொல்லப்பட்டவர்களை பார்க்கிலும், சாகும் போது கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தாலும், உண்மையாகவே அவன் வீழ்ந்து போனான் என்பது நிச்சயம்.  ஏனென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நசரேயனாக எழும்புவதற்கு முன்பாக கர்த்தரால், தாயின் வயிற்றில் பிறந்தது முதல் அவனை நசரேயனாக்குகிறார்.  ஆனாலும் அவனால் நிற்க முடியவில்லை, காரணம் அவனுக்குள் பாவம் குடிக்கொண்டிருந்தது.  எனென்றால் அவன் பூமியிலிலுந்து உண்டானவன், பூமிக்குரிய தன்மையுள்ளவனாயிருந்ததால், அவனில் இருந்து கண்ணின் இச்சை வெளியாகிறது. இப்படி தான் அநேக கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்டவர்கள் வீழ்ந்து போகிறார்கள். ஏனென்றால் வேசியானவள், மக்களின் உள்ளத்தை வஞ்சித்து விடுகிறாள்.  இவை தான் ஏதேன் தோட்டத்திலும் நடந்தது.  ஏனென்றால் தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவர்களை வஞ்சித்ததால், அவர்கள் தோட்டத்திற்கு புறம்பே ஆனார்கள்.  அல்லாமலும் வஸ்திரம் இழந்து நிர்வாணிகளாகிறார்கள்.  இதன் ஒரு காரணம் கண்ணின் இச்சை.  

மேலும் அதினிமித்தமாக ஏழு ஜடைகளும் சிரைக்கப்படுகிறது.  இதனை கர்த்தர் எதற்காக திருஷ்டாந்த படுத்துகிறாரென்றால், ஏழு வித அபிஷேகம், இவைகள் கண்ணின் இச்சைகள் நம்மில் வருமானால், அபிஷேகத்தினால் உள்ள ஆத்தும பெலன் நஷ்டப்படுகிறது.  அவ்விதம் நஷ்டப்பட்டு விட்டால், நம்முடைய வாழ்வில் கண் இச்சைக்குள்ளாகுவோமானால் நம்முடைய ஆத்மீக கண்கள் பிடுங்கப்படுகிறது.  அப்போது நாம் குருடராயிருப்போம்.  அப்போது விலங்கிடப்பட்டு தண்டனைக்கு கொண்டு செல்லப்படுவோம்.  அந்த தண்டனை என்னவென்றால் ஆவிக்குரிய வீழ்ச்சி, பெலிஸ்தர்களின் கூட்டங்கள் நம்மில் குடியேறும்.  அப்போது நாம் மாவரைப்போம் என்றால், வசனங்கள் கேட்போம், என்னவென்று தெரியாமல் இருப்போம்.  நம்மில் ஒரு அப்பமும் உண்டாயிராது.  நம்மை பார்த்து சத்துருக்கள் மனமகிழ்ச்சியாகி தாகோனுக்கு பலிபீடமும் பலிசெலுத்துதலும் நம்மில் உண்டாகும்.  மேலும் நாம் நம்முடைய சத்துருவுக்கு வேடிக்கையாகுவோம்.  ஆனால் அந்த வீடு பெலிஸ்தர்கள் கூடியிருக்கிற வீடாயிருக்கும்.  

அப்போது நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது, அங்கு பழி வாங்குகிற கர்த்தர் அந்த வீட்டை முழுமையாக கீழே விழப்பண்ணும் போது நம்முடைய ஆத்துமாவும் ஒன்றோடொன்று விழுந்து மரிக்கிறதாயிருக்கும்.  அதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  நசரேயராக, எந்த இச்சையும் இல்லாதவராக, சத்துருக்களை அழித்து ஜெயித்தவராக, ஜெயிக்கிறவராக, ஜெயிப்பவராக தோன்றுகிறார்.  ஆனால் இவையெல்லாவற்றிற்காக ஒருமுறை மரித்து, பிதாவின் ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டார்.  ஆனால் இப்போது அவர் சத்துருகளை ஜெயித்து  மரியாமல்  என்றென்றும் உயிரோடிருக்கிறவராயிருக்கிறார்.  அவரோடு கூட நாம் என்றென்றும் உயிரோடிருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.