தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 1:6

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றைக்கும் மாறாத  ஆசாரியராயிருக்கிறார் - திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கண்ணின் இச்சையினால் வீழ்ந்து தாகோனுக்கு பலிபீடம் கட்டாதபடி ஜாக்கிரதையாக இருப்போம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதபதிகள் 17: 1- 13  

எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.

அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.

அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.

அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.

மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.

அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்.

அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.

எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான்.

அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.

அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.

மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.

அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

இந்த வசனங்கள் நாம் வாசிக்கும் போது மீகா என்பவன் எப்பிராயீம் மலை தேசத்தானாக இருந்தான்.  அவன் தன் தாயை நோக்கி ஆயிரத்து நூறு  வெள்ளிக்காசு களவு  போயிற்றே, அதை குறித்து என் காதுகள் கேட்க சாபமிட்டாயே, அந்த பணம், இதோ என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான் தான் என்றான்.  அதற்கு அவன் தாய்; என மகனே நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கபடுவாய் என்றாள்.  அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளி காசைத் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்;  அவள் வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண, நான் என் கையிலிருந்த  இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள். 

அப்போது அவன் தன் தாயினிடத்தில் திரும்பக்கொடுக்கிறபோது,அவள் அதிலிருந்து இருநூறு வெள்ளிகாசை எடுத்து , தட்டான் கையிலே கையிலே கொடுத்தாள்; அவன் அதில் ஒருசுரூபத்தையும் ,ஒரு வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.  மீகா சுவாமி அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனை பிரதீஷ்டை பண்ணினான்;இவன் அவனுக்கு ஆசாரியனானான். ஏனென்றால் அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லாதிருந்தது;  அவனவன் தன்தன்  பார்வைக்கு சரிபோனபடி செய்தான்.  

யூதாவிலுள்ள பெத்லெகேமிலே லேவியனான ஒரு வாலிபன் அங்கு தங்கியிருந்தான்.  அவன் எங்கேயாவது பரதேசியாய் போய் தங்கும் படி யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு புறப்பட்டு பிரயாணம் போகையில் எப்பிராயீம் மலை தேசத்திலிருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.  அப்போது மீகா எங்கேயிருந்து வருகிறாய் என்றதற்கு அவன் யூதாவிலுள்ள பெத்லெகேமிலிருந்து, ஆனால் எங்கேயாவது தங்க போகிறேன் என்றதற்கு, மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்கு தகப்பனும்,ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து பத்து வெள்ளிகாசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று சொல்ல லேவியன் உள்ளே போனான்.    அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்க சம்மதித்தான்.  அந்த வாலிபன்; அவன் குமாரரில் ஒருவனை போல இருந்தான்.  மீகா அந்த லேவியனை பிரதீஷ்டை பண்ணினான்.  அந்த வாலிபன் ஆசாரியனாகி மீகாவின் வீட்டில் இருந்தான்.  அப்பொழுது மீகா எனக்கு ஒரு ஆசாரியனாக லேவியன் அகபட்டபடியினால்  கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.  

பிரியமானவர்களே கர்த்தர் நம்மை எவ்விதம், ஆசாரியராக்குகிறார் என்று எடுத்துக்காட்டாக திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  நாம் முற்காலத்தில் சீர்கெட்டு நடந்தோம்.  மேலும் சபையின் உபதேசத்தை கேட்டும் நிர்விசாரமாக்கினோம்.  அநேக சபைகளும் கிறிஸ்துவினால் உபதேசிக்காமல் உலகத்தால் உபதேசித்து ஜனங்களை தவறான பாதையில் இழுத்தார்கள்.  ஆனால் இப்போதும் அது நடந்து வருகிறது.  எப்படியெனில் வசனங்களை கேட்டும் தட்டானால் சுருபங்களையும், வார்ப்பிக்கபட்ட விக்கிரகத்தையும் செய்கிறார்கள்.  இவ்விதம் செயகிறவர்கள் இஸ்ரவேலராகிய எப்பிராயீமர் என்று சொல்லப்படுகிறது.  

எப்படியெனில் ஓசியா 5:1-5  

ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.

நெறிதவறினவர்கள் மிகுதியும் வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன்.

எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.

அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.

இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.

மேலும் ஓசியா 8:2-8 

எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.

ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.

அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.

சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?

அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும்.

அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.

இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

ஆனால் இவையெல்லாம் செய்தும் எப்பிராயீமை குறித்து கர்த்தர் சொல்கிறார் 

எரேமியா 31:20  

எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இவ்விதமாக இருக்கிறபடியினால் அவனை குறித்து கர்த்தர் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான் என்று சொல்கிறார்.  ஆதலால் நம்முடைய பாரம்பரிய கிரியை செய்கிற நம்முடைய உள்ளம் சுவாமிக்கு அறையாகவும், பாவம் செய்த நம்முடைய ஆத்துமாவைக் குறித்து, மீகாவின் ஒரு குமாரன், சுவாமி அறைக்கு ஆசாரியன் என்று சொல்கிறார்.  இவ்விதம் ஆசாரிய வேலை செய்கிறவர்கள் லேவியர்கள்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியனாக நம்மில் வருவதற்கு திருஷ்டாந்தபடுத்துவது தான் யூதேயாவிலுள்ள, பெத்லெகேமிலிருந்து வந்த வாலிபன்.  நாம் நம்முடைய அறை வீட்டை அவருக்குக் கொடுப்போமானால் அங்கு வந்து தங்கி, நமக்கு ஆசாரியராயிருப்பார்.  நம்முடைய உள்ளமாகிய வீட்டில் நாம் இடம் கொடுத்து, அவர் வந்து வாசம் பண்ணும் போது, நம்முடைய உள்ளத்தை பார்க்கிற கிறிஸ்து, அதற்கு ஏற்ற பிரகாரம் நாம் இருப்போமானால், நான் இருக்கிறேன் என்பார்.  அப்போது நமக்கு அவர் ஆசாரியராயிருப்பார்.  

ஆனால் மெல்கிசெதேக்கின் முறைமையின் படி அவர் என்றன்றைக்கும் ஆசாரியராயிருப்பார்.  எப்படியெனில் 

எபிரெயர் 7:19-24  

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.

ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,

அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.

அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

பிரியமானவர்களே இந்த வார்த்தைகளினால் யாவரும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.