தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஆதியாகமம் 17: 8

நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நித்திய சுதந்தரத்தை அடைந்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றும் மாறாத ஆசாரியராயிருக்கிறார் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றாரல்

நியாயாதிபதிகள் 18: 1 - 4  

அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.

ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.

அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில், லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்துவந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.

இஸ்ரவேலில் ராஜா இல்லாமலிருந்த நாட்களில் தாண் கோத்திரத்தார் குடியிருப்பதற்கு, தங்களுக்கு சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள் வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைகக்கவில்லை. ஆதலால் தேசத்தை உளவு பார்க்கும் படி, தாண் கோத்திரத்தார், தங்களில் ஐந்து பலத்த மனுஷரை தெரிந்து, தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும், எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி, தேசத்தை ஆராய்நது வரும்படி அனுப்பினார்கள்.  அவர்கள் எப்பிராயீம் மலை தேசத்திலிருக்கிற மீகாவின் வீடிமட்டும் போய் தங்கினார்கள்.  அப்போது அந்த வீட்டிற்குள் அந்த வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அஙகே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்தது யார்?  இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன இருக்கிறது என்றான்.  அதற்கு அவன் மீகா செய்ததை சொல்கிறான்.  மீகா இன்ன இன்னபடி செய்தான்; சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.  

அப்போது அவர்கள் நியாயாதிபதிகள் 18: 5,6

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது அறியப்படுவது என்னவென்றால் தாண் புத்திரருக்கு போந்த சுதந்தரம் கிடைக்காத காரணம், அவர்களுக்கு ராஜாவும் இல்லை, ஆசாரியரும் இல்லை.  ஆதலால் அவர்கள் பிரயாணம் அநுகூலமாக முடியுமா என்று மீகா வீட்டில் தங்கியிருந்த ஆசாரியனை பார்த்து அவர்கள் கேட்கிறார்கள்.  இதன் காரியம் விசுவாச யாத்திரைக்கு திருஷ்டாந்தம்.   அப்பொழுது அந்த ஆசாரியன் சொல்வது சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.  அந்த ஆசாரியன் சொன்னதை  அவர்கள் அப்படியே விசுவாசித்தார்கள்.  

மேலும் பிரியமானவர்களே, நம்முடைய பிரயாணம் அநுகூலமாக வேண்டுமானால், நமக்காக மரித்து, பின்பு மூன்றாம் நாளில் எழுந்த கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம்முடைய ஆத்துமா உலக கவலைகள் நீங்கி சுத்திகரிக்கப்பட்டு, பின்பு அது நமக்கு சமாதானம் பண்ணும்போது, நம்முடைய விசுவாச பயணம் அநுகூலமாகும். கிறிஸ்து நம்முடைய ஆசாரியராக நித்திய சுதந்தரத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.  ஆனால் மீகா வீட்டில் இருந்த விக்கிரமும், சுரூபமும் எல்லோர் மனதிலும் ஒரு சந்தேகத்தை நிச்சயமாக எழுப்பும்.  ஆதலால் நாம் அதனை குறித்து கவலைபடாமல் அடுத்த நாட்களில் அதனை தியானிப்போம்.  

பிரியமானவர்களே, இவையெல்லாம் நமக்கு திருஷ்டாந்தத்திற்குரியது.  நம்மை எப்படி கிறிஸ்துவோடு கூட ஐக்கியப்படுத்தவேண்டும் என்பதற்காக கர்த்தர் இஸ்ரவேலரை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  தாண் புத்திரர் ஆசாரியனை அழைத்து, தங்கள் சுதந்தரத்துக்காக  பிரயோஜனப்படுத்துகிறார்கள்.  நாம் நம்முடைய கிறிஸ்துவை எப்போதும் நித்திய சுதந்தரராக நம்முடைய உள்ளமாகிய வீட்டில் வைத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.