தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 12: 11

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அசதியாயிராமல் நித்திய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ள ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா நித்திய சுதந்தரத்தை அடைந்துக் கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

நியாயாதிபதிகள் 18: 7 - 10

அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை (அக்கறை) காரியம் இல்லை என்பதையும் கண்டு,

சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.

அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.

நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது தாண் புத்திரர் அனுப்பிய ஐந்து மனுஷர்களும் தேசத்தை சுதந்தரமாக்கும்படி, மீகா வீட்டில் தங்கியிருந்த ஆசாரியனிடம், பிரயாணம் அநுகூலமாக முடியுமா என்று கேட்டதற்கு, ஆசாரியன் சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம்  கர்த்தருக்கு ஏற்றது என்றார்.  அவ்விதம் அந்த ஐந்து  மனிதரும் புறப்பட்டு லாயீசுக்கு போய், அதிலே குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்கு  தூரமானவர்கள் என்பதையும். அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு, அவர்கள் தங்கள் சகோதரர்களிடம் சோராவிற்கும், எஸ்தோவிற்கும் வந்தார்கள்.  அப்போது அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறீர்கள் என்று கேட்க, அவர்கள் சொன்னது எழும்புங்கள் அவர்களுக்கு விரோதமாய் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தை பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது.  அந்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ள அசதியாயிராதேயுங்கள்.  அந்த தேசத்தில் சேரும்போது: அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது;  தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்  அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமல் இருக்கிற இடம் என்றார்கள். 

இதனைக்குறித்து பிரியமானவர்களே நாம் தியானிக்கும்போது கர்த்தர் தாண் புத்திரரின் ஆத்தும விடுதலையை குறித்து தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவெனில் அவர்களுக்கு உபதேசிக்கவோ மற்றும் அவரை சீர்திருத்துமபடியாகவோ, ராஜாக்களும், ஆசாரியர்களும் இல்லாதிருந்தார்கள்.  அதனால் அந்த ஐந்து பேரும் அந்த தேசத்தை பார்க்கிறார்கள்.  பார்த்து தங்கள் சகோதரரிடத்தில் அந்த தேசத்தை சுதந்தரமாக்க எழும்புவோம் வாருங்கள் என்று சொல்வதன் அர்த்தம் என்னவென்றால் சபை கூடி கர்த்தரை ஆராதிக்கும் போது, தங்கள் ஆத்துமாவுக்குள் விடுதலை உண்டாகும்.  அப்பொது அது நித்திய ஜீவனுக்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அதனை குறித்து சங்கீதம் 133:1-3  

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,

எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.

மேற்க்கூறப்பட்ட வசனத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் நான் நமக்கு கர்த்தர் வைத்திருக்கிற பரம தேசம்.  இதனை தாண் புத்திரர் சுதந்தரமாக்குபடியான திருஷ்டாந்தம். அவை இன்று கிறிஸ்துவின் சந்ததியாகிய நாம் சொந்தமாக்குவோம்.  அதற்காக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.