தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 10:25

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சபைகூடி கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் அசதியாயிராமல் நித்திய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ள ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதனைக்குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  அதென்னவெனில் சபையாம் சகோதரங்கள் கூடி கர்த்தரை பரிசுத்த உள்ளதோடு ஆராதித்து, கிறிஸ்துவாகிய நித்திய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 

 அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

நியாயாதிபதிகள் 18:10-13

நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.

அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,

யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே பாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்னப்படும்; அது கீரியாத்யாரீமின் பின்னாலே இருக்கிறது.

பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப்போய், மீகாவின் வீடுமட்டும் வந்தார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது ஆசாரியன் அவர்களிடம் இந்த தேசத்தை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றும்:  பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றதால் அவர்கள் சோராவிலும் எஸ்தாவோவிலும் இருக்கிற தாண் கோத்திரத்தாரில் அறுநூறு பேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டு யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே பாளயமிறங்கினார்கள்.ஆதலால் இந்நாள் வரைக்கும் மக்னிதான் என்னப்படும்.

பிரியமானவர்களே சபைக்கூடுதல் ஆவிக்குரிய சகோதரர்கள் என்பதற்காக கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி, அவர்கள் கீரியாத்யாரீமை முக்கிய இடமாக வைக்கிறார்கள். இவ்விதமாக நாமும் சபைகூடி பரிசுத்தமாக கர்த்தரை ஆராதிக்கிறவர்களாக வேண்டும்.  யாவரும் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.