தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 116:13
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் வேசிதன ஆவியினால் சிறைப்படுத்தபடாதபடி எச்சரிப்போடுகூட காணப்படவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் விக்கிரகராதனைக்கு அடிமையாகாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 18:22-31
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள் மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி,
தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.
அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.
அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரனும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் தாண் புத்திரர் தங்கள் பிள்ளைகளோடும், ஆடுமாடுகளோடும், பண்டம் பாடிகளோடுங்கூட புறப்ட்டார்கள். அவர்கள் அவ்விதம் புறப்பட்டு வரும் போது, மீகாவின் வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் போன போது மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டுகாரர் கூட்டம்கூடி தாண் புத்திரரை தொடர்ந்து வந்து; அவர்களை பார்த்த்து கூப்பிட்டர்கள். அப்போது அவர்கள் திரும்பி பார்த்து, மீகாவை நோக்கி; நீ இப்படி கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
அப்போது மீகா நியாயாதிபதிகள் 18:24
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
அதற்கு தாண் புத்திரர் நியாயாதிபதிகள் 18:25
தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள் மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி,
அப்போது தாண் புத்திரர்கள் தன்னை பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்கு திரும்பினான். ஆனால் தாண் புத்திரரோ
நியாயாதிபதிகள் 18:27-29
அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.
அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் படியே லாயீஸ் என்னும் பட்டணத்திற்கு தாண் என்று பெயரிட்டிருக்கிறதைப் பார்க்கிறோம். அந்த இடத்தில் தாண் புத்திரர், மீகா வீட்டிலிருந்து கொண்டு வந்த தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள். மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும், அந்த தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள் மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள். மேலும் தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்திருந்தார்கள்.
பிரியமானவர்களே தாண் கோத்திரத்தார் சிறைப்படுகிறதை பார்க்கும் போது, அவர்கள் சிறைப்படுகிற காரணம் என்னவென்றால் அங்கு மீகா வீட்டிலிருந்து கொண்டு வந்த சொரூபம் இருந்தது. அப்படிப்பட்ட சொரூபம் இருந்தாலோ, நாம் கர்த்தரை உண்மையாக சேவிக்கவில்லை என்பது புரிகிறது. இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நம்முடைய வாழ்வில் எந்தவித சொரூபமும் உண்டாயிருக்கக்கூடாது. அப்படி பட்ட கிரியைகளுக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுத்தால், நம்மில் வேசிதன ஆவி குடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படும். தாணைக்குறித்து கர்த்தர் சொல்லுகிறதாவது
ஆதியாகமம் 49:17,18
தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் இவர்களுக்குள் சர்ப்பத்தை போல் கிரியைகள் உண்டாயிருக்கும். மேலும் ஆத்மாவின் வளர்ச்சிக்கு விரோதமாக பகையான உலக கிரியைகள் எழும்பும். அவ்விதம் எழும்பும் போது சகல ஆவிக்குரிய வாழ்வின் பரிசுத்தத்திலும் நாம் தாறுமாறான பாதையில் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்வோம். அதனால் நாம் கர்த்தருக்கு காத்திருந்து இரட்சிப்பை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் சகோதரர்கள் கூடி கர்த்தரை ஆராதிக்கவும், ஆசாரியனுடைய சொற்படி நடக்க முன்வருகிறார்கள். ஆனால் விக்கிரகங்களையும், சொருபங்களையும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். தேவனுடைய ஆலயம் சீலோவாமில் இருக்கும் வரையில் அவர்களிடம் சொரூபம் உண்டாயிருந்தது. அவ்விதம் அவர்கள் சிறைபடுத்தப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு தேசத்தை சுதந்தரிக்க முடியவில்லை.
மேலும் உபாகமம் 33:22
தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
இவ்விதமாக தாணைக்குறித்து சொல்லப்படுவதால் அந்த ஆத்துமாவை இரடசிக்கும்படியாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியராக எல்லாருக்குள்ளும் என்றென்றைக்கும் விளங்குகிறார். இவ்விதமாக சகல பொல்லாப்புகளாகிய விக்கிரக சுரூபங்களை நம்மை விட்டகற்றி கிறிஸ்து என்றென்றைக்கும் நம்மில் ஆசாரியராக விளங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.