தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 54:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையை எப்போதும் கர்த்தர் தம்மிடம் சேரத்துக்கொள்கிறவராயிருக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் வேசிதன ஆவியால் சிறைப்படுத்தபடாதபடி எச்சரிப்போடுக்கூட காணப்படவேண்டும்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 19:1-4
இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.
அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம்வரைக்கும் இருந்தாள்.
அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக் கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,
ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய் தங்கின ஒரு லேவியன் இருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லேகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரியை தனக்கு மறுமனையாட்டியாக கொண்டிருந்தான். அவள் அவனுக்கு விரோதமாய் விபசாரம்பண்ணி, அவனைவிட்டு, யூதா தேசத்துப் பெத்லகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்கு போய், அங்கே நாலு மாதம் வரைக்கும் இருந்தாள். அவள் புருஷனோ அவளோடே நலவு சொல்லவும், அவளை திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தபடுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்திற்கு போனான். அப்பொழுது அவள், அவனை தன் தகப்பன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனை கண்ட போது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு, அவனை ஸ்திரீயின் தகப்பன் அங்கு இருத்திக்கொண்டதினால் மூன்று நாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராதங்கினார்கள்.
மேற்க்கூறிய வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால்
எரேமியா 2:31-37
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்.
நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.
அந்த ஸ்திரி புருஷனை விட்டு விபச்சாரம் செய்து தன் தகப்பன் வீட்டிற்கு செல்வது என்றால், கர்த்தரை அறிந்த பின்பு, தன்னுடைய பழைய பாரம்பரிய வாழ்க்கையில் சேர்ந்துக்கொண்டு, கர்த்தருக்கு துரோகம் செய்வதைக் குறிக்கிறது. அதன் காரணமாக கர்த்தர் சொல்வது நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும் காரிருளுமான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள், நாங்களே எஜமான்கள் இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லை என்கிறார்கள். இவ்விதமாக தங்கள் வழிகளை ஜனங்கள் மாற்றிக்கொண்டாலும் கர்த்தர் சொல்வது
எரேமியா 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இப்படியாக கர்த்தருக்கு விரோதமாக நாம் நடந்தாலும் கர்த்தர் நம்மை எப்பொழுதும் சேர்த்துக்கொள்கிறவராக இருக்கிறார் என்பதன் திருஷ்டாந்தம் தான் எப்பிராயீம் மலை அருகே வாழ்ந்து வந்த லேவியன். அதனால் அந்த லேவியனை கர்த்தர் பரதேசி என்று எழுதியிருக்கிறார். அந்த பரதேசி என்றாலோ அவன் ஆத்துமா இரட்சிப்பை சுதந்தரிக்கவில்லை. மேலும் அவனுடைய மனைவியாகிய மணவாட்டி என்பது அவன் ஆத்துமா பாரம்பரிய மோகம், கலாச்சாரங்கள், வழிபாடுகள் இன்னும் பல காரியங்களில் சிக்கி இருப்பதால் கர்த்தர் அதனை திருஷ்டாந்தபடுத்தி, அவன் மனைவி, விபசாரம் செய்து, பின்பு யூதா தேசத்து பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டில் நாலுமாதம் வரைக்கும் இருந்தாற் என்றும், அவன் புருஷன் அவளோடே நலம் சொல்லவும், அவளை திரும்ப அழைத்து வரவும், தன்னுடைய இரண்டு கழுதைகளை ஆயத்தபடுத்தி, வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு அவள் தகப்பன் வீட்டுக்கு செல்கிறான். ஆனால் தகப்பன் அவனை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு அங்கு தங்கவைத்து, அவன் அங்கு புசித்து குடித்து இராதங்கினார்கள்.
இவ்விதமாக நாம் கர்த்தரை விட்டு தூரம் போனாலும் கர்ததர் நம்மை எப்பொழுதும் அவருடைய சபையில் சேர்த்துக்கொள்கிறவராயிருக்கிறார். இவ்விதமாக நம்முடைய யாருடைய இருதயமாகிலும் அவரை விட்டு தூரமாயிருக்குமானால் நம்முடைய கர்த்தர் எப்பொழுதும் நம்மை அவரண்டையில் சேர்த்துக்கொள்கிறவராயிருக்கிறார். இவ்விதமாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.