தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 13:14

ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாச பிரயாணத்தில், நாம் பின் வாங்குவோமானால், மீண்டும் வசனத்தால் புதுப்பித்து, கால் கழுவி,  அப்பம் புசித்து மனமகிழ்ச்சியோடு கர்த்தரை ஆராதிக்க வேண்டும். திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பின் வாங்கி போகாமல் இருக்கும் படியாக, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.

   அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 19:14-16  

அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று.

ஆகையால் கிபியாவிலே வந்து இராத்தங்கும்படிக்கு, வழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்துக்குள் போனபோது, இராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.

வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.

லேவியனாகிய அந்த மனுஷன் தன்னுடைய மறுமனையாட்டியும், வேலைக்காரனுமாகிய யாத்திரையில் பென்யமீன் நாட்டை சேர்ந்த கிபியாவின் கிட்ட வரும்போது சூரியன் அஸ்தமனமாயிற்று .  இவை என்னவென்றால் நம்முடைய ஆத்மீக வாழ்க்கையில் பின் தங்கிய வாழ்வு வரும் போது, நம்முடைய பிரகாசம் மங்கிபோகிறது என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆகையால் கிபியாவிலே வந்து இராதங்கும் படி வழியை விட்டு அவ்விடத்துக்கு போனார்கள்.  ஆனால் அவன் இராதங்குவதற்கு இடமில்லாததால், யாரும் சேர்த்துக்கொள்ளாமல்  வீதியிலே உட்கார்ந்தான்.  அப்போது வயலிலே வேலை செய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்க வந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.  

அந்த கிழவன் நியாயாதிபதிகள் 19:17-21  

அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.

அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீவனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.

அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,

அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் இரண்டு பேரும் பேசி முடித்த பின்பு, அந்த கிழவன் உங்களுக்கு சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என் மேலிருக்கட்டும்; வீதியிலே மாத்திரம் இராதங்க வேண்டாம் என்று சொல்லி, அவனை தன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போய், கழுதைகளுக்கு தீபனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களை கழுவிக்கொண்டு புசித்துக்குடித்தார்கள், 

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில், ஆவிக்குரிய வாழ்வில் பின்வாங்கியவர்களை, அவருடைய வீட்டிலில்லாமல், வீதியில் இருக்கிறவர்களாக இருக்கிறோம்.  அவ்விதம் வீதியில் இருந்தால் கர்த்தர் தம்முடைய தாசர்களை அனுப்பி நம்மை வீட்டிற்குள் ஏற்றுக்கொள்கிறார்.  இதற்குள்ள திருஷ்டாந்தத்தோடு கர்த்தர் சபையை நடத்துகிற விதத்தை கூறுகிறார்.  ஆனால் அவனிடத்தில் கழுதைகளுக்கு வைக்கோலும், தீபனமும் உண்டு: எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றபோது அந்த கிழவன் உனக்கு சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்  என்றான். 

பிரியமானவர்களே சபையாகிய நம்முடைய விசுவாச பிரயாணத்தில் சபை ஆராதனையில் கால்கள் கழுவி, அப்பம் புசிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இவ்விதமாக நம்முடைய வாழ்வில் இவ்விதமாக பின்வாங்கினவர்கள் உண்டானால், மீண்டும் கர்த்தரின் வசனம் கைக்கொண்டு, சமாதானம் பெற்று,ஒருவருக்கொ ருவர் கால்களை கழுவி, கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஐக்கியமாக அப்பம் புசித்து, அவருடைய இரத்தத்திற்கு ஐக்கியமாக திராட்ச ரசம் குடித்து மனமகிழ்ச்சியாயிருக்கும்படியாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.