தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8:6

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் மாம்ச சிந்தைகள் அகற்றுதல் – திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய விசவாச பிரயாணத்தில் பின் வாங்குவோமானால் மீண்டும், கர்த்தருடைய வசனத்தால் புதுப்பித்து, கால்கழுவி, அப்பம் புசித்து, கர்த்த்தரை ஆராதிப்பதில் மனமகிழ்ச்சியாயிருப்போம் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது எனனவென்றால் 

நியாயாதிபதிகள் 19:22 

அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள்  என்னவென்றால் கால்கழுவி  அப்பம் புசித்து கர்த்தரை மனமகிழ்ச்சியாக நாம் ஆராதிக்கும் போது,பேலியாளின் மக்கள் அந்த வீட்டிற்க்குள் நுழைந்து நம்முடைய ஆத்துமாவை வெளிப்புறங்களில் அலைந்து திரிய பண்ணுவார்கள்.  ஆனால் அந்த உள்ளான மனுஷன் ஆத்துமா கெட்டு போகாமல் இருக்கும் படியாக பாதுகாக்கிறது.  அதனால் 

நியாயாதிபதிகள் 19:23  

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

பென்யமீனரிடம் இப்படிப்பட்ட மதிகேட்டை செய்ய வேண்டாம், இதோ கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டு வருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்கு சரிபோனபடி அவர்களுக்கு செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம் என்றான். 

ஆவிக்கேற்ற சிந்தைகள் காக்கப்படுகிறது.  மாம்சத்துக்கேற்றவைகள் புறம்பே தள்ளப்படுகிறது. இவை என்னவென்றால் மறுமனையாட்டி என்றால் மாம்சத்தின் கிரியைகளுக்கு குறிப்பிடுகிறார். எப்படியென்றால் அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியை பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டு வந்து விட்டான்;  அவர்கள்  அவளை அறிந்து கொண்டு இராமுழுவதும் விடியற்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும் போது அவளை போகவிட்டார்கள்.  ஆனால் விடியற்காலத்துக்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்ந வீட்டு வாசற்படியில் விழுந்து கிடந்தாள்.  காலமே வீட்டு எஜமான் எழுந்து வீட்டின் கதவை திறந்து, தன் வழியே போக புறப்படுகிறபோது, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரி வீட்டு வாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின் மேல் வைத்தவளாய் கிடந்தாள். 

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்களை நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேலில் மாம்சத்தை புறம்பே மாற்றும்படியாக கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்பது புரியவருகிறது.  ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய உள்ளான மனுஷனில் துர்கிரியைகளாகிய மாம்ச சிந்தைகள் அகற்றும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.