தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 3:12
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பன்னிரண்டு கோத்திரத்தின் செயல்பாடுகள் ஒன்றாக கிறிஸ்துவுக்குரிய ஒரே ஆவியினால் இணைத்து, ஆவிக்குரிய சிந்தையோடு மட்டும் கர்த்தரை மகிமைபடுத்துதல்-திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் மாம்ச சிந்தைகளை அகற்றுதலை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது எனனவென்றால்
நியாயதிபதிகள் 19: 27- 29
அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.
எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.
அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் லேவியனாகிய அந்த மனிதனுடைய மறுமனையாட்டியை அந்த பென்யமீன் மனுஷர்களாகிய பேலியளிள் மக்கள் தகாத காரியங்களை செய்ததால் அவள் வீட்டு வாசற்படியிலே விழுந்து கிடக்கிறதைப் பார்க்கிறோம். கர்த்தர் இந்த காரியம் நடக்கும்படி ஒப்புக்கொடுக்கிறாரென்றால் லேவியனிடம் மாம்சத்தின் கிரியைகள் இருக்கிறதால், நமக்கு இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஐக்கியமாக அப்பமும், அவருடைய இரத்தத்திற்கு ஐக்கியமாக திராட்ச ரசமும் தரும் போது நாம் ஒருவருக்கொருவர் கால்கள் கழுவி அதனை புசித்து கர்த்தருக்கு ஆராதனை செ்து மனமகிழ்ச்சியாயிருக்கும் போது, பேலியாளின் மக்கள் அந்த வீட்டுக்குள் வந்து சமாதானத்தை கெடுக்கிறாரகள் என்றால் நம்முடைய கிரியைகள் மாம்சத்துக்குரிய பொல்லாததாயிருக்கிறதால் கர்த்தர் சத்துருவை உண்டாக்கி விட்டு, நம் ஆத்துமாவுக்குள் இருக்கிற மாம்ச கிரியைகளை அகற்றுகிறார்.
இதனை திருஷ்டாந்தப்படுத்தி அவன் காலமே எழும்பி வீட்டின் கதவை திறந்து , தன் வழியே போகப் புறப்படுகிறபோது, அவன் மறுமனையாட்டியாகிய அநத ஸ்திரீ வீட்டு வாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின் மேல் வைத்தவளாக கிடந்தாள். அப்போது அவன் எழுந்திரு போவோம் என்று சொன்னதற்கு மறுபதில் பிறக்கவில்லை. அப்போது அவன் தன் கழுதையின் மேல் அவளைப்போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு தன் இடத்திற்கு போனான். அவன் தன் வீட்டுக்கு வந்தபோது ஒரு கத்தியை எடுத்து, அவளை அவளுடைய எலுமபுகளோடுகூட பன்னிரண்டு துண்டமாக்கி இஸரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
பிரியமானவர்களே இதன் விளக்கங்கள் என்னவெனில் அந்த மறுமனையாட்டி வாசற்படியின் மேல் கைகளை வைத்தவளாக கிடந்தாள் என்பது,வாசற்படி கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம், மாம்ச சிந்தையினால் கிறிஸ்துவினால் தண்டிக்கபட்டவளாகிறாள், மேலும் நம்முடைய வாழ்வில் மணவாட்டி சபையாகிய நாம் மாம்சத்தின் கிரியைகளை அகற்றி, ஆவிக்குரிய கிரியைகளை, நம் ஆத்துமாவில் செய்யும்படியாகவே, அந்த லேவியன் அவளை தன் கழுதையின் மேல் ஏற்றி பிரயாசப்பட்டு தன் இடத்திற்கு போனான். அதென்னவென்றால் நம்முடைய விசுவாச பிரயாணம் ஆவிக்குரிய கிரியைகள் மட்டும் உண்டாயிருக்க வேண்டும் என்பதற்கான திருஷ்டாந்தம். பின்பு அந்த மனுஷன் கத்தியினால் பன்னிரண்டு துண்டங்களாக்கி இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான். அதன் காரணம் என்னவென்றால் இஸ்ரவேலின் பன்னிரச்டு கோத்திரத்தாரும் இவ்விதம் ஒரே எண்ணத்தோடு கர்த்தரை ஆவியில் ஆராதிக்க வேண்டும்.
மேலும் நியாயாதிபதிகள் 19:30
அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்தகாரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.
இந்த வசனத்தில் அந்த நாள் வரையில் இப்படிப்பட்ட காரியம் நடக்காத காரணத்தால், இதனை நன்றாக யோசித்து, ஆலோசனைப்பண்ணி செய்ய வேண்டியது என்னவென்று அறிந்து அதற்கான காரிங்கள் செய்து, மாம்சத்தை புறம்பே தள்ளி கிறிஸ்துவுக்குரிய ஆவிக்கேற்ற சிந்தைகளோடு நாம் செயல்பட்டு கர்ததரை மகிமைபடுத்தும்டியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.