தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கொலோசெயர் 3:15
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் சமாதானத்துக்கேதுவான காரியங்களை கிறிஸ்துவினால் நடப்பிக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தரே நம் மேய்ப்பராயிருக்கிறார். ஏனெனில் இஸ்ரவேல் புத்திரர் நடுவில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேய்ப்பராக விளங்குகிறார்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
நியாயாதிபதிகள் 20:12-16
அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம்பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.
அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் ஏகோபித்து பட்டணத்தில் கூடி, அங்கிருந்து கிபியாவிற்கு, பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி, உங்களுக்குள்ளே நடந்த அக்கிரமம் என்ன? கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால் பென்யமீன் புத்திரரோ, இஸ்ரவேலராகிய சகோதரர் சொல்லை கேட்க மனதில்லாமல், அவர்களோடு யுத்தம் புறப்படும்படிக்கு பட்டணங்களிலிருக்கிற கிபியாவிற்கு வந்து கூடினார்கள். நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்தரரின் நடுவில் தான் யுத்தம் நடக்கும் என்பதற்காக கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
இவை எதற்காக என்றால் நம்முடைய இருதயம் ஒரு யுத்த களம் என்று கர்த்தர் சொல்கிறார். எப்படியென்றால் மாம்ச கிரியைகள் ஒன்றோடோன்று மோதியடிக்கும். பின்பு மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் யுத்தம் செய்யும். இதனை கருத்தில்கொண்டு, திருஷ்டாந்தத்தோடு விளக்குவது கிபியாவின் குடிகளிலே தெரிந்துக்கொள்ளப்பட்ட எழுநூறு பேரேயல்லாமல் பட்டணங்களிலிருந்து வந்து கூடி பட்டயம் உருவுகிற மனுஷரின் லக்கம் இருபத்தாறாயிரம் பேர் என்று தொகையிடப்பட்டது. அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துக்கொள்ளப்பட்ட இடது கை வாக்கான எழுநூறு பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்கு கவண்கல் எறிவார்கள். ஆனால் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற நாலு லட்சம் பேர் இருந்தார்கள்.
அப்போது இஸ்ரவேல் புத்திரர் நியாயாதிபதிகள் 20:18-21
இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ணவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது முதல் தடவை நடந்த யுத்தத்தில் பென்யமீன் புத்திரர் ஜெயம் பெற்றார்கள். எப்படியென்றால் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு இஸ்ரவேலில் இருபத்தீராயிரம் பேரை அன்றைய தினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
பிரியமானவர்களே இதன் கருத்துக்கள் என்னவெனில் இஸ்ரவேல் புத்திரத்தாரில் ஒவ்வொரு கோத்திரங்களிலும்,,அவர்கள் மாம்ச சிந்தைகளை சங்கரிக்கிறார் என்பது விளங்குகிறது. இவ்விதமாக நாம் இதனை தியானிக்கும் போது, நம்முடைய வாழ்வில் சமாதானத்திற்கு மாறான கிரியைகள் இருந்தால் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து, தேவசமாதானத்துக்கேதுவான காரியங்களை நடப்பிப்பார். இவ்விதமாக நாமும் சமாதானத்துக்குரிய கிரியைகளை நடப்பிக்கும்படியாக கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.