தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 4:22-24

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய நீதி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் சகல துர்குணமும் நீக்கப்பட வேண்டும் என்பதனை குறித்து திருஷ்டாந்தத்தோடு நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

நியாயாதிபதிகள் 20:29-30

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச்சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து,

மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

மேற்க்கூறப்பட்ட கருத்துக்கள் என்னவெனில் இஸ்ரவேல் புத்திரருக்கும், பென்யமீன் புத்திரருக்கும், நடந்த யுத்தத்தில், இஸ்ரவேல் புத்திரர்வீழ்ச்சியடைந்ததின் காரணமாக அவர்கள் மூன்றாம் விசை கர்த்தரிடத்தில் அழுது, உபவாசித்து, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தியதால், கர்த்தர் அவர்கள் மேல் இரக்கம் வைத்து பென்யமீனரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.  ஆதலால் அவர்கள் கிபியாவை சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து மூன்றாம் நாளிலே கிபியாவுக்கு விரோதமாக அணிவகுத்து நின்றார்கள்.  

மேலும் நியாயாதிபதிகள் 20:31-35  

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,

அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் செய்து பென்யமீனரை முறிய அடித்தார்.பென்யமீனரில் பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து அறுநூறுபேரை சங்கரித்தார்.  இவ்விதமாக கர்த்தர் பென்யமீன் புத்திரை சங்கரித்தார். நம்முடைய  ஆத்துமாவில் உளள துர்கிரியைகள் அகற்றபட்டு, அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்படுகிறது.   

பிரியமானவர்களே  பரலோக அக்கினியாகிய கர்த்தருடைய வசனத்தினால் நம்முடைய உள்ளான மனுஷனுடைய செயல்கள் எல்லாம் தூய்மையாக்கப்படுகிறது என்பதன் விளக்கம் கூறப்படுகிறது. ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய வாழ்வில்  எல்லாவித சிந்தனைகள், செயல்கள், நடத்தைகள் எல்லாம் கர்த்தருடைய வார்த்தையினால் நிறைந்ததாக இருக்க வேண்டும்.  அப்போது நாம் நீதி நிறைந்தவர்களாக இருப்போம்.  இவ்விதம் நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.