தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 121:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எல்லா பொல்லாத வழிகளையும் அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய நீதி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது எப்படியெனில்
நியாயாதிபதிகள் 20:39-41
ஆகையால் இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று.
அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானித்து வரும் போது, இஸ்ரவேலர் யுத்தத்திலே பின் வாங்கினபோது, பென்யமீனர் முந்தின யுத்தத்திலே நடந்தது போல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி, இஸ்ரவேலில் ஏறக்குறைய முப்பது பேரை வெட்டவும், கொல்லவும் தொடங்கினார்கள். ஆனால் இஸ்ரவேலின் அடையாளமாகிய புகையானது ஸ்தம்பம் போல உயர எழும்பினபோது பென்யமீனர் பின்னாக பார்த்தார்கள். இதோ பட்டணத்தின் அக்கினி ஜூவாலை வானபரியந்தம் எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பினார். பென்யமீன் மனுஷருக்கு விக்கினம் நேரிட்டது.
அல்லாமலும் நியாயாதிபதிகள் 20:42-48
இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.
மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.
இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.
அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.
இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.
நான்காம் நாளில் நடந்த யுத்தத்தில் பென்யமீனரை இஸ்ரவேலர்கள் தொடர்ந்து வந்து இடையில் அகப்பட்டவர்களை கொன்றுப்போட்டார்கள். பின்பு அவர்களை அவர்களை லேசாய் மிதித்து போட்டார்கள். பென்யமீனரில் பதினெண்ணாயிரம் பேர் விழுந்தார்கள். விழுந்தவர்கள் எல்லாரும் பலவான்களாயிருந்தார்கள் மற்றவர்களெல்லாரும் விலகி வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள் மற்றும் கொஞ்சம் பேர் வழியில் கொல்லப்பட்டார்கள். இவ்விதம் பென்யமீனரில் விழுந்தவர்கள் இருபத்தையாயிரம் பேர் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள். அறுநூறுபேர் ரிம்மோன் கன்மலையில் ஓடி நாலுமாதம் இருந்தார்கள். அல்லாமலும் பென்யமீனரில் மனுஷர் முதல் மிருக ஜீவன்கன்கள் வரையில் கண்டவைகள் எலலாவற்றையும் படடயகருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போ்டார்கள்.
பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும்போது இருதிறத்தாரும் ஒருவருக்கொருவர் சீர்படும்படியாகவும், ஒவ்வொருவரிலும் இருக்கிற பொல்லாத கிரியைகளை அழித்து அவைகள் அக்கினியால் சுடபட்டும் போகும்படியாக, கர்த்தர் இதனை ஓரு யுத்தமாக்கி நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதில் சில காரியங்கள் நாலுமாதம் வரைக்கும் மறைந்து இருக்கும் என்றும், ஆனால் இஸ்ரவேலரோ கண்டவைகள் எல்லாவற்றையும் அழித்து விடுகிறார்கள். இவ்விதமாக நம்முடைய ஆத்துமாவை நாம் சுத்திகரிக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இப்படியாக நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் சகல பொல்லாத கிரியைகளை அகற்றி சுத்திகரிப்போம், ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.