தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 10:25
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நித்திய விவாகத்துக்கென்று தெரிந்தெடுக்க சபைகூடி தேவனை ஆராதிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எல்லாவித பொல்லாத வழிகளையும் அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 21:1-11
இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.
ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது;
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.
மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.
கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.
மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்ன செய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர் மேல் ஆணையிட்டுக்கொண்டோமே.
இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.
ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும் போது, நம்மில் ஒருவனும் தங்கள் குமாரத்தியை பென்யமீனருக்கு விவாகம் பண்ணிக் கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள். ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்கு போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலம் மட்டும் இருந்து மிகவும் அழுது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்து போகதக்கதாக, இஸ்ரவேலில் இந்த காரியம் நேரிட்டது என்ன என்றார்கள். அல்லாமலும் அவர்கள் மறுநாளிலே ஜனங்கள் காலமே எழுந்திருந்து,அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையும் செலுத்தி விட்டு அவர்கள் கர்த்தரின் சந்நிதியில் வராதவன் கொலைசெய்யப்பட வேண்டும் என்று அவர்கள் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடின போது, இஸ்ரவேல் கோத்திரத்திலிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள். அப்போது இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து மனஸ்தாபப்பட்டு இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்று, மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் என்ன செய்யலாம். ஏனென்றால் நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்கு கொடுப்பதில்லை என்று கர்த்தரிடம் நாம் ஆணை யிட்டுக்கொண்டோமே. அவ்விதம் இஸ்ரவேல் சபை மிஸ்பாவிலே கூடின போது, அங்கு வராதவர்கள் யார்? என்று விசாரித்தார்கள். அப்போது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷர் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை. ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
ஆதலால் இந்த வார்த்தைகள் பிரகாரம் நாம் தியானிக்கும் போது, நம் உள்ளம் முழுமையும் ஒப்புக்கொடுத்தால் மட்டுமே, கர்த்தர் நம்மை நித்திய விவாகத்துக்கென்று தெரிந்தெடுப்பார் என்பதின் திருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்விதம் கர்த்தர் தெரிந்தெடுத்த சபை கூடி ஆராதிக்க வேண்டும். ஆனால் சபைகூடுதலில்லாமல் இருந்தால் கர்த்தர் யாபேசின் குடிகளை பட்டயகருக்கினால் வெட்டினார் என்றால் நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் கொல்லுவார் என்பது நிச்சயம். ஆதலால் பிரியமானவர்களே நாம் சபைகூடிவருதலை விட்டுவிடாதபடி பாதுகாத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.