தேவனுக்கே மகிமையுண்டாவதாக

தீத்து 3:5  

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டு புதிப்பித்து கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை நித்திய விவாகத்துக்கென்று, கர்த்தர் தெரிந்தெடுக்க வேண்டுமானால் நாம் கர்த்தரை சபைகூடி ஆராதிக்க வேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 21:12- 20

இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.

அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.

பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,

இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,

நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.

பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,

அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம், கீலேயாத்திலுள்ள யாபேசுடைய குடிகளிடத்திலே, சபை கூடிவந்து அவர்கள் கர்த்தரை ஆராதிக்காததால், புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடுத்து, அவர்களை கானான் தேசமான சீலோவிலிருக்கிற  பாளயத்திற்கு கொண்டு வந்தார்கள்.  அப்போது ரிம்மோன் கன்மலையிலிருக்கும் பென்யமீன் புத்திரரோடே  பேசவும், அவர்களுக்கு சமாதானம் கூறவும் சபையார்  எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.  அப்படியே பென்யமீன் புத்திரர் திரும்ப வந்தார்கள்.  கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்,  அப்படியிருந்தும் அவர்கள் தொகைக்கு காணாதிருந்தது.  இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினா் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.  பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றபேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படியாக என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு, இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடி, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனருக்கு இருக்கவேண்டும்.  ஆனால் நாமோ நம்முடைய குமாரத்திகளில் பெண்கொடுக்கக்கூடாது, பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று ஆணையிட்டார்களே என்றார்கள்.  

பின்பு அவர்கள் நியாயாதிபதிகள் 21:21-25   

சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.

பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

சீலோவிலே வருஷம் தோறும் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடபடுகிறதே என்று சொல்லி, அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி; நீங்கள் போய், திராட்சதோட்டங்களிலே பதிவிருந்து சீலோவின் குமாரத்திகள் கீத வாத்தியத்தோடே நடனம் பண்ணுகிறவர்களாய் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும் போது, திராட்ச தோட்டங்களிலிருந்து புறப்பட்டு உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணை பிடித்துப் பென்யமீன் தேசத்திற்கு கொண்டு போங்கள் என்றபோது அவர்கள் அப்படியே செய்தார்கள்.  அவர்கள் தங்களுக்கு சரியானப் பெண்ணை பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்கு திரும்பி போய், பட்டணங்களை புதுப்பித்து கட்டி அவைகளில் குடியிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு  அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும், தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள். 

பிரியமானவர்களே பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றும் குறைவுபடாமல் இருந்தால் மட்டுமே, பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் அலங்காரமாகிய பரிசுத்த அலங்காரம் நம்மில் விளங்கும் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்,  இவ்விதமாக நம்மளில் யாராவது கர்த்தரின் சந்நிதியிலிருந்து விலகி இருந்தோமானால், சீக்கிரத்தில் திராட்ச தோட்டமாகிய கர்த்தரின் சபையில் நாம் போய்  பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டு புதுப்பித்து பரலோகத்தில் குடிபுகுந்து அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.