தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 71:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்மை பரலோக ஆகாரம் குறையாமல் அனுதினம் காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று நம்மை புதுப்பித்துக்கொள்ளும்படியான திருஷ்டாந்தத்தை குறித்து தியானித்தோம்.
அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில் தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. மேலும்
ரூத் 1:1-7
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம்பண்ணினார்கள்.
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில்,
அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும், தன் இரண்டு குமாரரோடும் மோவாப் தேசத்திலே போய் சஞ்சரித்தான். அவன் பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பெயர் நகோமி. அவனுக்குள்ள இரண்டு குமாரர்கள்; மக்லோன், கிலியோன். ஆனால் பஞ்சத்தை கண்டவர்கள் பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தாராகிய அவர்கள் மோவாப் தேசத்திலே போய் அங்கே இருந்துவிட்டார்கள். பின்பு எலிமெலேக்கு அங்கு வைத்து இறந்து போனான். அதன் பின்பு நகோமியுடைய இரண்டு குமாரரும் இருந்தார்கள்; அவர்களுக்கு மோவாபியரில் பெண்க்கொண்டார்கள். அவர்கள் யாரென்றால் ஓர்பாள், ரூத் இவர்கள் ஏறக்குறைய பத்து வருஷம் அங்கே வாசம் பண்ணினார்கள். ஆனால் மக்லோன், கிலியோன் என்னும் அவளுடய இரண்டு குமாரரும் இறந்து போனதால், நகோமி என்ற அந்த ஸ்திரீ, தன் குமாரர் இருவரையும் இழந்து, தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். அப்போது அவள் கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து ஆகாரம் அருளினார் என்று மோவாப் தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடு மோவாப் தேசத்திலிருந்து எழுந்து புறப்பட்டு, தன் மருமக்களோடுகூட தானிருந்த ஸ்தலத்தை விட்டு புறப்பட்டாள்.
யூத தேசத்திற்கு திரும்பி போக வழி நடக்கையில்
ரூத் 1:8-10
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.
கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.
மேற்க்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கிறிஸ்துவினால் மீண்டு எடுக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டு, சபையாகிய கிறிஸ்துவின் சபையோடு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள், தாங்கள் தேவனுடைய சத்தியத்தை விட்ட விலகி பாவ மோக இச்சைகளில் சிக்கினவர்களாக உள்ளம் மோவாபுக்குள் பிரவேசித்து அந்த வாழ்க்கையே போதும் என்று உள்ளம் இருந்து விடுவோமானால், தேவன் திருஷ்டாந்தமாக கூறுவது புருஷனாகிய எலிமெலேக்கும், குமாரரும் இறந்து, நகோமி தனிமையாக்கப்படுகிறாள்; அதென்னவெனில் மணவாட்டி சபை, தேசத்தில் பஞ்சம் அதிகரித்ததின் காரணமாக மோவாபுக்குள் வந்து அங்கே இருந்து விட்டதின் காரணமாக ஆவிக்குரிய சகல நன்மைகளையும் இழந்து விட்டது. இவ்விதமாக கிறிஸ்துவின் கற்பனைகளை விட்டு உலக உல்லாசங்களில் நுழையும் போது நமக்கு முன்னிருந்த கிருபைகளை கர்த்தர் நம்மை விட்டு அகற்றுவார் என்பது நிச்சயம்.
அதன் பின்பு நாம் பற்றிக்கொண்டிருந்த உலகமாகிய புறஜாதிகளின் கிரியைகள் அகற்ற வேண்டும் என்று நாம் இருந்தாலும் நாங்கள் உம்மை விட்டு போகமாட்டோம் என்பார்கள். நீங்கள் உங்கள் தாய் வீட்டிற்கு போங்கள் என்கிறாள். அதுவுமட்டுமல்லாமல் மரித்துபோனவர்களுக்கும், எனக்கும் நீங்கள் தயை செய்தது போல, கர்த்தர் உங்களுக்கு தயை செய்வாராக. கர்த்தர் உங்களுக்கு வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்க என்று சொல்லி அவர்களை முத்தம் செய்தாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது உம்முடைய ஜனதண்டைக்கு உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.நீங்கள் உங்கள் தாய் வீட்டிற்கு போங்கள் என்கிறாள். அதுவுமட்டுமல்லாமல் மரித்துபோனவர்களுக்கும், எனக்கும் நீங்கள் தயை செய்தது போல, கர்த்தர் உங்களுக்கு தயை செய்வாராக. கர்த்தர் உங்களுக்கு வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்க என்று சொல்லி அவர்களை முத்தம் செய்தாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது உம்முடைய ஜனதண்டைக்கு உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.
இப்படியாகத்தான் நாம் தேவனித்திலிருந்து விலகி போவோமானால் புறஜாதிகளின் கிரியைகள் நம்மை பின் தொடரும்; நாமும் நம்முடைய ஆத்துமாவில் பெற்ற நன்மைகளை இழந்து விடுவோம். ஆதலால் நம்முடைய தேசமாகிய உள்ளத்திலே ஆகார குறைவு வராதபடியாகவும், நாம் கர்த்தரை விட்டு நீங்காதவர்களாகவும் இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.