தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 8:36,37
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எந்த சூழ்நிலமையிலும் கிறிஸ்துவை விட்டு நீங்காமல் எச்சரிப்போடுகூட இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி நாம் நம்முடைய ஆத்துமாவில் பரலோக ஆகாரம் குறையாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
ரூத் 1: 11- 12
அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?
என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும்
மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது மணவாட்டி சபையாகிய நகோமி, மோவாபிய பெண்களாகிய தன் மருமக்கள்மாரோடே சொல்கிறாள்; நீங்கள் திரும்பி போங்கள்; ஏன் என்னோடேகூட வருகிறீர்கள்? உங்களுக்கு புருஷர்கள் ஆகும் படிக்கு இனிமேல் என் கர்ப்பத்தில் பிள்ளைகள் உண்டாகுமோ? என் மக்களே திரும்பி போங்கள்; நான் வயது;சென்றவள் ஒரு புருஷனோடே வாழதக்கவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து நான் இன்று இரவு ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு பிள்ளைகளை பெற்றாலும்
ரூத் 1:13
அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
இந்த வசனத்தில் அவள் சொல்கிறாள் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள். பிரியமானவர்களே இங்கு நாம் பார்க்கும்போது நகோமி, மோவாப் தேசத்திற்குள் போய், தன் குமாரருக்கு பெண்கொண்டது, தன் வாழ்க்கையில் மிகுந்த விசனமாயிருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டாள். இப்படியாக தான் நம்மில் அநேகர் மோவாபின் எல்கைக்குள் கர்த்தரை விட்டு தூரம் போய் விடுகிறோம்.
ஆனால் மோவாபானது ஏசாயா15:1-9
மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
அதின் வீதிகளில் இரட்டைக் கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.
என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது.
ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.
கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.
தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.
மேற்கூறப்பட்ட பாரங்கள் எல்லாம் நம்முடைய உள்ளம் மோவாபாக இருக்குமானால், இந்த கிரியைகள் உண்டாயிருக்கும். இவ்விதமாக அவளுடைய வாழ்வில் வந்த விசனத்தை அறிந்துக்கொண்டாள். பின்பு அவள் விசனமாயிருக்கிறது என்று சொன்னவுடன்
ரூத் 1:14-18
அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.
அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
மேற்க்கூறப்ப்ட வசனங்களை நம் தியானிக்கும் போது ஓர்பாள் தன் மாமியை விட்டு போய் விட்டாள். ஏனென்றால் அவளிடத்தில் இரட்சிப்பு இல்லாத இருந்த காரணத்தால், அவள் முந்தின வாழ்விற்கு போவதற்கு தயக்கம் இல்லாதிருந்தாள். அதனால் அவளை குறித்து நகோமி ரூத்திடம் சொல்வது அவள் தன் ஜனங்களித்திற்கும், தன் தேவர்களிடதிற்கும் திரும்பி போய் விட்டாள்; அதுபோல நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பி போ என்றாள்.
அதற்கு ரூத் 1:16-18
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
இந்த வசனங்கள் நாம் தியானிக்கும் போது ரூத்தின் இருதயத்தை நகோமி சோதித்தறிகிறதை பார்க்கிறோம். ஆனால் ரூத் தேவ சமூகத்தில் உறுதியாயிருக்கிறதை மணவாட்டி சபையோடுகூட கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதனைக் குறித்து அவள் சொல்வது, நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து; அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னை பிரித்தால்; கர்த்தர் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்கு செய்யகடவர் என்றாள். அவள் தன்னோடே வர மனதாயிருக்கிறதை கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும் போது, நகோமியினுடைய ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்து கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி, அவள் மோவாப் தேசத்திற்கு போனதாலும்,அங்கு உறவுகளை எடுத்துக்கொண்டதாலும், அவளுடைய வாழ்வை கர்த்தர் பாழாக்கி, அவள் மீண்டும் மனந்திரும்பி, புதுவாழ்வை தெரிந்துக்கொண்டு கிறிஸ்துவோடுகூட மரித்து,அவரோடு கூட அடக்கம்பண்ணபடும்படியாக அவளுடைய ஆத்துமா கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறதை நமக்கு திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார். இதனை நாம் பார்க்கும் போது நம்மில் யாராவது மோவாபுக்குள் பிரவேசித்து இருப்போமானால் இப்பொழுதே பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பை சுதந்தரித்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வார். ஆசீர்வதிப்பார்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.