தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 9:15,16
ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவனுக்கு பிரியமல்லாத காரியங்கள் செய்தால், வாழ்வை கசப்பாக்குகிறார் -திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எந்த சூழ்நிலமையிலும் கிறிஸ்துவின் அன்பை விட்டு நீங்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தியானித்தோம். எப்படியெனில் மணவாட்டி சபையாகிய நகோமி பெத்லெகேமை விட்டு மோவாபுக்கு, பஞ்சத்தினால் போனதினால், தன் குமாரருக்கு மோவாபிய பெண்களை விவாகம் பண்ணி வைத்தாள். அப்படி செய்த காரணத்தால் கர்த்தர் அவளுடைய வாழ்வை கசப்பாக்கினார். அதன் பின்பு கர்த்தர் தன்னுடைய ஜனங்களுக்கு ஆகாரம் அருளினார் என்று கேள்விப்பட்டு அங்கிருந்து பெத்லெகேமுக்கு வரும்படியாக யோசனை பண்ணும் போது ரூத் மட்டும் நகோமியை விட்டு பிரியமாட்டேன் என்று சொல்லி, இருவரும் நடந்து வந்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்த போது ஊரார் எல்லாரும் அவர்களை குறித்து ஆச்சரியபட்டு, இவள் நகோமியா என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு நகோமி சொன்னது; இனி என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று செல்லுங்கள் என்றும், சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார்.
மேலும் அவள் சொன்னது நிறைவுள்ளவளாய் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய் திரும்பவரபண்ணினார். அல்லாமலும் கர்த்தர் அவளை சிறுமைப்படுத்தி கிலேசபடுத்தியிருக்கையில் நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள். இப்படியாக நகோமி தன் மருமகள் ரூத்தோடுகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்: வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.
பிரியமானவர்களே நகோமி தன்னுடைய வாழ்க்கையில், கர்த்தரின் கிருபையில் நிறைவுள்ளவளாக காணப்பட்டாள். ஆனால் அவளுடைய விசுவாசத்தை கர்த்தர் பஞ்சத்தை அனுப்பி முதலில் சோதிக்கிறார். அந்த சோதனையில் அவள் நிற்க தெரியாதவளாக அவரை விட்டு தூரம் போய் விடுகிறாள். ஆனால் அவள் நிறைவுள்ளவளாக போகிறாள், ஆனால் கர்த்தர் அவளுடைய வாழ்க்கையை பாழும்,சூனியமுள்ளவளாக்கி கசப்பாக்குகிறார். பின்பு தான் அவள் உணர்ந்துக்கொள்கிறாள். அவள் உணர்ந்துக்கொண்ட பிறகு, தான் விட்டுவந்த இடத்திற்கு திரும்பி போகிறாள். இவ்விதமாக நம்மிலும் அநேகம் பேர் கர்த்தரிடத்திலிருந்து கிருபைகளை பெற்றும், நிர்விசாரத்தோடு, சோதனையை சகித்து கொள்ளாதபடி தங்கள் சுகபோகமான வாழ்விற்கு மறு ஜாதியார் (இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாதவர்கள்) போவதினால் கர்த்தர் நம்முடைய வாழ்வையும் கசப்பாக்குகிறார்.
ஆதலால் பிரியமானவர்களே நாம் ஒரு போதும் தேவனை விட்டு தூரம் போகாதபடி, பின்மாறி விழுந்து போகாதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும். மற்றும் இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, யாருடைய வாழ்வாவது, கர்த்தருடைய கிருபைகளை இழந்து, கசப்பான வாழ்க்கையாக காணப்படுமானால், நகோமி உணர்வடைந்து ஜீவனுள்ள ஆத்துமாவோடு மறுபடியும் திரும்பி சென்றது போல நாமும் கர்த்தரிடத்தில் மீண்டும் திரும்புவோம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.