தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1தீமோத்தேயு 1:16

அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து இரக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நம் வாழ்வில் செய்தால் கர்த்தர் நம்முடைய வாழ்வை கசப்பாக்குகிறார்.  அல்லாமலும் நகோமி, மோவாபிலிருந்து ரூத்தோடு கூட மீண்டும் பெத்லெகேமுக்குள் வரும் போது, அங்கு வாற்கோதுமை அறுப்பின் துவக்கமாயிருந்தது என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

ரூத் 2:1-2 

நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.

மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.

மேற்கூறப்படுகிற வசனங்கள் நகோமிக்கு பெதலெகேமில் அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின் முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திகாரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.  மோவாபிய ஸ்திரீயாகிய ரூத் என்பவள் நகோமியை பார்த்து: நான் வயல் வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்கு தயை கிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு அவள் என் மகளே போ; என்றாள்.  

இந்த காரியங்கள் என்னவென்றால் மணவாட்டி சபையின் கீழ் கர்த்தருடைய வேலையை செய்யும் படியாக மோவாபிய பெண் ரூத் தீர்மானிக்கிறாள் என்பதனை, கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி; நம்மிலும் யாராவது கர்த்தர் தந்த ஆசீர்வாதத்தை இழந்து பாழாக்கி இருப்போமானால், மீண்டும் மனந்திரும்பி, உணர்வடைந்து கர்த்தருக்குள் அவருக்கு சித்தமான தீர்மானம் எடுப்பதற்கான தருணம் என்பதனை நினைத்துக்கொள்ள வேண்டும்.  

அவ்விதம் ரூத் நகோமியோடு அனுமதிக்கேட்டுக்கொண்டு 

ரூத் 2:3-9 

அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.

அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.

பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.

அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.

அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.

அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.

அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.

மேற்க்கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது ரூத் போவாசுடைய வயலில் கதிர் பொறுக்குகிறாள்.  அப்போது போவாஸ் தன்னுடைய வயல் நிலத்திற்கு போய் அறுகிறவர்களை பார்த்து கர்த்தர் உங்களோடேக் கூட இருப்பாராக என்ற போது; கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.  அப்போது போவாஸ் ரூத்தை கண்டமாத்திரத்தில், அவன் அறுக்கிறவர்கள் மேல் கண்காணிப்பாக வைக்கப்பட்ட அந்த வேலைகாரனை நோக்கி இந்த பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.  அப்போது கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்திரமாக இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடே வந்த பெண்பிள்ளை.  அவள் அறுக்கிறவர்களின் பிறகே அரிகட்டுகளிலிருந்து சிந்தினதை பொறுக்கிக் கொள்ளும்படியாக என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்.  காலமே துவக்கி இந்நேரம் வரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுது என்று சொல்கிறான்.  அப்போது போவாஸ் ரூத்தை பார்த்து; மகளே,  கேள்;  பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தை விட்டு போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.  அவர்கள் அறுப்பறுக்கும் வயலைப்பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னை தொடாதபடி வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்;  உனக்கு தாகம் எடுத்தால், தண்ணீர் குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.  

பிரியமானவர்களே போவாசுடைய நிலம் கர்த்தரின் சபைக்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  ரூத்தாகிய நகோமியாகிய மணவாட்டி சபையினுடைய ஆத்துமா, இரட்சிப்பினால் உயிர்ப்பிக்கபட்டு கர்த்தரின் சபையில் வந்து சேரும்போது, அங்கு ஆத்துமா அறுவடையின் நாட்களாக இருக்கிறபடியால் போவாஸ் அந்த ஆத்துமாவை (ரூத்தை) காண்கிறான்.  தன் வயலில் கண்காணிப்பாக வைத்த வேலைக்காரனிடம் அவளை பற்றி கேட்டறிந்து, அவள் உண்மையுள்ளவளாக இருந்தபடியினால் அதே இடத்தில் ஊழியக்கார பெண்களோடுகூட இருக்க சொல்கிறான்.அல்லாமலும் கர்த்தரின் சபையின் உபதேச்தை விட்டு வேறு தவறான உபதேசங்களுக்கு போகக்கூடாது என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி, வேறு வயல் நிலங்களுக்கு போகாமலும், இவ்விடம் விட்டு போகாமலும், கர்த்தரின் சபையின் ஊழியம் செய்யும் படியாக அங்கே இரு சொல்கிறதையும், மற்றும் ஒருவரும் அவளை தொடாதபடி போவாஸ் கட்டளையிட்டிருக்கிறதை பார்க்கிறோம். அல்லாமலும் தாகம் வந்தால், வேலைக்காரர் மொண்டுக்கொண்டு வருகிறதில் குடிக்கலாம் என்பது, ஆத்துமாவின் அறுவடையையும், எடுத்துக்காட்டபட்டிருக்கிறது.  

ஆதலால் பிரியமானவர்களே நாமும் இவ்விதம் கர்த்தரிடத்திலிருந்து இரக்கம் பெற்றுக்கொள்ளும்படியாக நம்மையும் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.